How to eat almonds for eyesight: உடலில் உள்ள மற்ற பாகங்களைப் போலவே, கண்களும் ஒரு முக்கியமான உறுப்பு. நம் கண்களால் தான் இந்த உலகத்தைப் பார்க்கவும் பல விஷயங்களை ரசிக்கவும் முடிகிறது. ஆனால், சருமம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நாம் கண்களில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. தற்போதைய காலத்தில் சிறு வயது குழந்தைகள் கூட கண்ணாடியுடன் சுற்றித்திரிவதை நாம் பார்க்கிறோம்.
பார்வை பலவீனமாக இருப்பது ஒன்றும் லேசான விஷயம் இல்லை. பார்வை மோசமானால் எப்போதும் கண்ணாடி அணிய நிலை ஏற்படும். தலைமுடி பிரச்சினையை போலவே கண் பிரச்சனையும் தற்போது பொதுவான பிரச்சனையாகிவிட்டது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை யாரைப்பார்த்தாலும் கண்ணாடி அணிந்துள்ளனர். போதுமான ஊட்டச்சத்தை நாம் எடுத்துக்கொள்ளாதது நமது கண்பார்வையை மோசமாக்கும்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம் : குளிர்காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது நல்லதா? டாக்டர் கூறுவது என்ன?
பலவீனமான கண் பார்வையை மேம்படுத்த பத்தாம் மிகவும் நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள். பத்தாம் பார்வையை மேம்படுத்த மிகவும் உதவியாக இருக்கும். ஏனென்றால், பாதாமில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளது. இதன் நன்மைகள் என்ன? இதை எப்படி சாப்பிடுவது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாதாம் சாப்பிடுவதால் கண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்

வைட்டமின் ஈ நிறைந்தது
வைட்டமின் ஈ பாதாமில் அதிக அளவில் உள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது. ஃப்ரீ ரேடிக்கல்கள் கண்களை வலுவிழக்கச் செய்யலாம் மற்றும் கண்புரைக்கு முக்கிய காரணியாக இருக்கலாம். எனவே, பாதாமை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், அது கண்களுக்கு வலு சேர்க்கும். இதன் மூலம் பார்வையை மேம்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Kadalai Mittai Benefits: குளிர்காலத்தில் வேர்க்கடலை பர்பி சாப்பிடுவதன் நன்மைகள்!
ஒமேகா-3 கொழுப்பு அமிலம்
பாதாம் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் முக்கிய ஆதாரமாகும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கண்களின் விழித்திரைக்கு அவசியம். விழித்திரை தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க, பாதாம் பருப்பை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது தவிர, உலர் கண்கள் மற்றும் மாஸ்லர் சிதைவு போன்ற நிலைமைகளின் ஆபத்து குறைகிறது.
கண்கள் உலர்தல்

வறண்ட கண் பிரச்சனையை போக்க பெண்கள் பாதாம் பருப்பை சாப்பிடலாம். நீண்ட நேரம் மொபைல், லேப்டாப் பார்த்துக் கொண்டிருப்பதால் கண்கள் சோர்வடைவதுடன் கண்கள் வறண்டு போவது போன்ற பிரச்னைகளும் வரலாம். பாதாமில் உள்ள வைட்டமின்கள் கண்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு, கண் வறட்சி பிரச்சனையையும் குறைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம் : Broccoli Soup: ஒரே மாதத்தில் 5 கிலோ எடையை குறைக்கணுமா? அப்போ இந்த சூப் குடியுங்க!
லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின்
Lutein மற்றும் zeaxanthin ஆகியவை பாதாமில் காணப்படும் இரண்டு வகையான கரோட்டினாய்டுகள் ஆகும். இவை அல்ட்ரா வயலட் கதிர்களை வடிகட்ட உதவியாக இருக்கும். இந்த கலவைகள் விழித்திரையில் குவிந்து, அங்கு தீங்கு விளைவிக்கும் சூரிய ஒளியால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. பாதாம் சாப்பிடுவதன் மூலம் விழித்திரை ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இரத்த சர்க்கரை

இரத்த சர்க்கரை கண் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இது மற்ற கண் தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால் ஏற்படும் பிரச்சனையை டயபடிக் ரெட்டினோபதி என்பார்கள். பாதாமில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளது. ஆனால், இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கும். பாதாமை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கண்பார்வையை மேம்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம் :Soup For Sickness: சளி, இருமல், காய்ச்சலால் அவதியா? உடனடி நிவாரணம் பெற இந்த 5 சூப்களை குடிங்க!
பாதாமை எப்படி சாப்பிடுவது?
மோசமான கண் பார்வையை மேம்படுத்த தினமும் காலையில் ஊறவைத்த பாதாமை சாப்பிடலாம். இத்துடன் கருஞ்சீரகம் மற்றும் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான பல பிரச்சனைகள் குணமாகும்.
Pic Courtesy: Freepik