$
Vitamin A Rich Foods For Eye Health: இன்றைய டிஜிட்டல் உலகில், நாம் அனைவரும் கணினி, டிவி, மொபைல் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துகிறோம். பணிச் சூழலில் நம்மால் அதை தவிர்க்க முடியாது. ஆனால் சிலர் எந்த காரணமும் இன்றி, பொழுதுபோக்கிற்காக, இதனை பயன்படுத்துகிறார்கள்.
குறிப்பாக இளைஞர்கள் எந்நேரமும் மொபைல் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். குழந்தைகளும் கேம் விளையாடவும், பொம்மை படங்கள் பார்க்கவும் மொபைல், கணினி, டிவி போன்றவற்றிற்கு அடிமையாக இருக்கிறார்கள். திரை நேரம் அதிகமாக இருப்பதால், கண் சார்ந்த பிரச்னைகள் இளம் வயதிலேயே வரத் தொடங்குகிறது.

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தொல்லை செய்யாமல் இருந்தால் போதும் என்று மொபைல் ஃபோனை குழந்தைகள் கையில் கொடுத்து விடுகிறார்கள். இதனால் குழந்தைகளும் மொபைலுக்கு அடிமையாகின்றார்கள். இதனால் சிறுவயதிலேயே கண்ணாடி போடும் சூழல் ஏற்படுகிறது.
இன்றை நவீன வாழ்க்கை முறையில் இதனை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால், கண் பாதிப்பு ஏற்பட இது மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது. மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாகவும் கண் சார்ந்த பிரச்னைகள் ஏற்படலாம்.
குறிப்பாக உடலில் வைட்டமின் ஏ பற்றாக்குறை இருந்தாலும் கண் சார்ந்த பிரச்னைகள் வரலாம். வைட்டமின் ஏ ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது பார்வையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது கண்ணின் மேற்பரப்புக்கு உதவுகிறது, தொற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கிறது. வைட்டமின் ஏ பற்றாக்குறையால் கார்னியா மிகவும் வறண்டு போகலாம், இது மங்கலான பார்வை அல்லது பார்வை இழப்புக்கு வழிவகுக்கும்.
எனவே, பார்வை திறனை மேம்படுத்தவும், கண் சார்ந்த பிரச்னைகளை தடுக்கவும், தினசரி உணவில் வைட்டமின் ஏ சார்ந்த உணவுகள் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். இதற்காக நீங்கள் சாப்பிட வேண்டிய, சில வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். மறக்காமல் இதை சாப்பிடுங்கள்.
இதையும் படிங்க: Eye Health Foods: பார்வை திறனை உணவு மூலம் மேம்படுத்த முடியுமா?
கண் ஆரோக்கியத்திற்கான வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் இங்கே…

கேரட்
வைட்டமின் ஏ-விம் சிறந்த ஆதாரத்தில் ஒன்று கேரட். ஒரு கேரட்டில் உங்கள் தினசரி வைட்டமின் ஏ இன் 200 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. மேலும் இது வைட்டமின்கள் பி, கே மற்றும் சி மற்றும் நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் கொண்டுள்ளது.
பீச்
இந்த சுவையான பீச் பழத்தில் வைட்டமின் ஏ 10 சதவீதம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவை உங்கள் கண்களுக்கு மிகவும் ஆரோக்கியமானதாகக் கூறப்படுகிறது. உங்கள் உணவில் சிறிது பீச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆப்ரிகாட்
ஆப்ரிகாட் ஒரு ருசியான மற்றும் இனிப்பு பழமாகும். இதில் வைட்டமின் ஏ மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன. அவை உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
கீரை
கீரை உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். கீரையில் இரும்புச்சத்துடன் நல்ல அளவு வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. ஒரு கப் கீரையில் 100 சதவீதம் வைட்டமின் ஏ கிடைக்கும்.
மாம்பழம்
மாம்பழத்தில் அதிக இனிப்பு மற்றும் கலோரிகள் இருக்கலாம். ஆனால் அளவோடு சாப்பிட்டால் எந்த பிரச்னையும் இல்லை. உண்மையில், இது உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஒரு கப் மாம்பழம் உங்களுக்கு 35 சதவிகிதம் வரை வைட்டமின் ஏ தரக்கூடியது.

பப்பாளி
பப்பாளி உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், என்சைம்களுடன், ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது. பப்பாளி உங்கள் தினசரி மதிப்பில் 29 சதவீத வைட்டமின் ஏ தருவதாக கூறப்படுகிறது.
சிவப்பு குடைமிளகாய்
சிவப்பு குடைமிளகாயை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவை உங்கள் கண்களையும் ஆரோக்கியத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் லைகோபீன் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றுடன் சுமார் 75 சதவீத வைட்டமின் ஏ தருகிறது.
இந்த உணவுகளுக்கு மாறுவதற்கு முன் ஏதேனும் ஒவ்வாமை இருக்கிறதா எனச் சரிபார்க்கவும் அல்லது உங்கள் வைட்டமின் ஏ குறைபாட்டைப் பற்றி சிறப்பாகச் சொல்லக்கூடிய மருத்துவரை அணுகவும்.
Image Source: Freepik