ஆண்டுதோறும் ஏப்ரல் 14 ஆம் நாள் உலக சாகஸ் தினமாக உலக சுகாதார அமைப்பால் அனுசரிக்கப்படுகிறது. உலகளாவிய சுகாதார அமைப்பு, இது குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கும், பொது விழிப்புணர்வை அதிகரிக்கவும், ஆரம்ப கால நோயறிதல் போன்றவற்றிற்கும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
சாகஸ் நோய் என்றால் என்ன?
சாகஸ் நோய் என்பது புரோட்டோசோவா ஒட்டுண்ணியான டிரிபனோசோமா க்ரூஸியால் ஏற்படும் தொற்று நோயாகும். இது பிரேசிலிய மருத்துவர் கார்லோஸ் சாகஸ் அவர்களால் 1909-ல் கண்டறியப்பட்டதால், சாகஸ் என்றே பெயரிடப்பட்டது.
சாகஸ் நோய் பாதிக்கப்பட்ட டிரைடோமைன் பக்ஸ் கடித்தால், மனிதர்களுக்குப் பரவுகிறது. இது கிஸ்ஸிங் பக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது இரத்தத்தை உண்பதாகும். பெரும்பாலும் இரவிலேயே செயல்படுகின்றன. சில நிபுணர்களின் கருத்துப்படி, அசுத்தமான உணவு, உறுப்பு மாற்று, இரத்த மாற்றம் மற்றும் பானங்கள் மூலமாகவும் பரவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Periods Pain: மாதவிடாய் காலத்தில் தாங்கமுடியாத வலி, அதிக ரத்தப்போக்கா? - காரணங்கள் என்ன?
சாகஸ் நோயின் பல்வேறு நிலைகள்
இந்த நோய் இரண்டு நிலைகளில் முன்னேற்றம் அடைகிறது. அவை கடுமையான நிலை மற்றும் நாள்பட்ட நிலையாகும்.
- முதல் கட்டத்தில், லேசான அல்லது எந்த அறிகுறிகளும் இல்லாததால் கண்டறிய கடினமாக இருக்கும்.
- நாள்பட்ட நிலையில், ஆரம்ப நோய்த்தொற்றுக்குப் பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிப்படும். இந்த நாள்பட்ட கட்டத்தில், ஒட்டுண்ணியானது நோயாளியின் இதய தசைக்குள் நுழையலாம்.
- பின்னர், இது இதயத் துடிப்பை அசாதாரண தாளத்திற்கு வழிவகுக்கிறது. இது சாப்பிடுவது அல்லது மலம் கழிப்பது போன்றவற்றில் சிக்கலை ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Women Sleep Benefits: ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் தூங்கணும்? ஏன் தெரியுமா?
சாகஸ் நோயின் அறிகுறிகள்
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் 6-7 மில்லியன் கணக்கிலான மக்கள் சாகஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒவ்வொரு ஆண்டும் 10,000 பேர் இறக்கின்றனர்.
இதன் முக்கிய அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம். ஆனால் இதை மற்றொரு நோயிலிருந்து வேறுபடுத்துவது கடினமாகும்.
- காய்ச்சல், தலைவலி, உடல்வலி, சோர்வு போன்ற லேசான அறிகுறிகள்
- வயிற்றுப்போக்கு
- பசியிழப்பு
- வாந்தி
- சொறி
- விரிவாக்கப்பட்ட சுரப்பிகள்
- கடி அல்லது தொற்று ஏற்பட்ட இடத்தில் வீக்கம் அல்லது புண் ஏற்படுதல்
இவை அனைத்தும் சாகஸ் நோயின் அறிகுறிகளாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Postpone Periods Tips: மாதவிடாய் தள்ளிப் போக இயற்கை வீட்டு வைத்தியங்களை ஃபாலோ பண்ணுங்க
Image Source: Freepik