பல பெண்களுக்கு மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு மற்றும் கடுமையான வலி ஏற்படுகிறது. பொதுவாக பெண்களுக்கு 5 நாள் மாதவிடாய் சுழற்சி இருக்கும், சிலருக்கு 10 நாள் அல்லது 15 நாள் சுழற்சி இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் பலர் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
ஆனால் இந்த நேரத்தில் வலி மற்றும் அதிக இரத்தப்போக்கு ஆரோக்கியமான மாதவிடாய் அறிகுறி அல்ல. கருப்பை நார்த்திசுக்கட்டிகள் எனப்படும் கருப்பைக் கட்டிகளாலும் இந்தப் பிரச்சனைகள் ஏற்படலாம்.
கருப்பை கட்டிகள்:
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஃபைப்ராய்டுகள் அல்லது கட்டிகள் கருப்பையில் இருக்கலாம். இதில் சில கட்டிகள் ஆப்பிள் விதைகள் அளவிற்கும், சில கட்டிகள் திராட்சை அளவிற்கும் கூட இருக்கலாம். இந்த கட்டிகள் காலப்போக்கில் சுருங்கவோ அல்லது பெரிதாகவோ வளரக்கூடியவை.

மெடிக்கல் நியூஸ் டுடே படி, ஒரு பெண்ணுக்கு 30 வயது முதல் மாதவிடாய் நிற்கும் வரை நார்த்திசுக்கட்டிகள் இருக்கலாம். இருப்பினும், மாதவிடாய் நின்ற பிறகு, இந்த கட்டிகள் தானாகவே சுருங்குகின்றன.
பெண்கள் சுகாதார அறிக்கையின்படி, 20% முதல் 80% பெண்கள் 50 வயதிற்குள் நார்த்திசுக்கட்டிகளால் பாதிக்கப்படுகிறார்கள் எனக்குறிப்பிட்டுள்ளது.
ஃபைப்ராய்டுகள் ஏற்பட காரணம் என்ன?
ஃபைப்ராய்டுகளுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்றாலும், பல மருத்துவ அறிக்கைகளின்படி, ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கும் போது அவை உருவாகத் தொடங்குகின்றன என்பது தெளிவாகிறது.
இந்த கருப்பை நார்த்திசுக்கட்டிகள் புற்றுநோயாக மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும், சிலருக்கு புற்றுநோய் ஏற்படக்கூடிய லியோமியோசர்கோமாக்கள் உருவாகின்றன.
கருப்பை நார்த்திசுக்கட்டிகளின் அறிகுறிகள்:
பல பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் கருப்பை நார்த்திசுக்கட்டிகளால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் இது எவ்வித அறிகுறிகளையும் எளிதில் காட்டாது என்பதால் கருப்பை நார்த்திசுக்கட்டிகளால் பாதிக்கப்பட்டது பெண்களுக்கு எளிதில் தெரிவதில்லை. அதன் அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கவர்ச்சியான மார்பகங்கள் வேண்டுமா?… அப்போ இதைச் சாப்பிடுங்கள்!
- மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- இடுப்பு வலி
- உடலுறவின் போது வலி
- சிறுநீர் கழிப்பதில் சிரமம்
- முதுகு வலி அல்லது கால் வலி
- மலச்சிக்கல்
இவை அனைத்தும் கருப்பை நார்த்திசுக்கட்டிகளின் அறிகுறிகளாகும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், ஹிஸ்டரோஸ்கோபி மற்றும் லேப்ராஸ்கோபி மூலம் இவற்றை நாம் கண்டறியலாம்.
Image Source: freepik