கவர்ச்சியான மார்பகங்கள் வேண்டுமா?… அப்போ இதைச் சாப்பிடுங்கள்!

  • SHARE
  • FOLLOW
கவர்ச்சியான மார்பகங்கள் வேண்டுமா?… அப்போ இதைச் சாப்பிடுங்கள்!


அழகு,சுயமரியாதை, பெண்மை போன்ற பல்வேறு காரணங்களால் பெண்களால் பெரிய அளவு மார்பகங்கள் விருப்பப்படுகின்றன. நவீன தொழில்நுட்ப காலத்தில் பெண்கள் அறுவை சிகிச்சை மூலமாக தங்களது மார்பகங்களின் அளவை பெரிதாக்கலாம் என்றாலும், அது செலவு அதிகமான சிகிச்சையாக உள்ளது. இதனால் அனைவராலும் அதனை செய்து கொள்ள முடியாது.

மார்பகங்களின் அளவை அதிகரிக்க மசாஜ், மார்பக விரிவாக்கப் பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடு மற்றும் என்லார்ஜ் பம்ப்போன்ற வழிகளும் உள்ளன.

how-to-increase-food-size-naturally-by-eating-certain-foods

இதையும் படிங்க: Ginger For Women Health: பெண்களே!! இஞ்சியால் கிடைக்கும் இத்தனை ஸ்பெஷல் நன்மைகள் பற்றி தெரியுமா?

இருப்பினும், மார்பக அளவை இயற்கையாக அதிகரிக்க முடியுமா? என்பது தான் பெரும்பாலான இளம் பெண்களின் தேடலாக மாறியுள்ளது. உங்கள் மார்பகங்களை பெரிதாக்க உதவும் உணவுகள் உள்ளதா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்…

1.பால்:

பாலில் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ப்ரோலாக்டின் உள்ளிட்ட மனித உடலைப் போன்ற இனப்பெருக்க ஹார்மோன்கள் உள்ளன. இவை அனைத்தும் கருவுறுதல் மற்றும் மார்பக அளவை அதிகரிக்க நல்லது. அவை மார்பகங்களில் இரத்த ஓட்டத்தையும் தூண்டுகின்றன.

how-to-increase-food-size-naturally-by-eating-certain-foods

பால் தவிர, சீஸ், தயிர், பனீர் போன்ற பிற பால் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ளவதும் பலனளிக்கும். பால் அருந்தாதவர்கள், வீகன் பிரியர்கள் சோயா பால் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ளலாம், ஏனெனில் அவற்றிலும் ஈஸ்ட்ரோஜனை பிரதிபலிக்கக்கூடிய ஐசோஃப்ளேவோன்கள் உள்ளன.

2.நட்ஸ் வகைகள்:

நட்ஸ் மற்றும் விதைகளை தினந்தோறும் உணவில் சேர்ப்பது இதயம் மற்றும் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்கும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தவிர, பருப்புகள் மற்றும் விதைகளில் நல்ல கொழுப்பு மற்றும் புரதம் உள்ளது, இது மார்பக வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

how-to-increase-food-size-naturally-by-eating-certain-foods

அக்ரூட், முந்திரி, வேர்க்கடலை மற்றும் சூரியகாந்தி, பூசணி மற்றும் ஆளிவிதை போன்ற விதைகள் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை தூண்டி சமநிலைப்படுத்த உதவுகின்றன.

3.கடல் உணவுகள்:

கொழுப்பு நிறைந்த மீன், மட்டி, கடற்பாசி, இறால் போன்ற கடல் உணவுகளில் ஒமேகா-3 மற்றும் மாங்கனீசு நிரம்பியுள்ளது, இது உடலில் ஹார்மோன் செயல்பாட்டை சரிபடுத்துவதால், மார்பக அளவை அதிகரிக்க உதவுகிறது.

how-to-increase-food-size-naturally-by-eating-certain-foods

மேலும் கடல் உணவுகளை எடுத்துக்கொள்ளுதல் இனப்பெருக்கம் மற்றும் கருவுறுதல் பிரச்சனைகளை தீர்க்கவும் உதவுகிறது.

இதையும் படிங்க: Thyroid Weight Loss: தைராய்டு நோயாளிகளே.. இவற்றை சாப்பிட்டால் சீக்கிரம் உடல் எடை குறையும்!

4.சிக்கன்:

how-to-increase-food-size-naturally-by-eating-certain-foods

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கோழிக்கறி, உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை வேகமாக அதிகரிக்கச் செய்யும். எனவே மார்பக அளவை அதிகரிக்க விரும்பும் பெண்கள் தங்களது உணவில் சிக்கன் அளவை அதிகரிக்க வேண்டும்.

5.வெந்தயம்:

வெந்தயம் ஒரு பாரம்பரிய சூப்பர்ஃபுட் ஆகும், மேலும் பாலூட்டும் தாய்மார்கள் கூட தாய்ப்பால் உற்பத்தியைத் தூண்ட வெந்தயம் சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. வெந்தய சாறை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் மார்பக அளவை அதிகரிக்க உதவும் எனக்கூறப்படுகிறது.

வெந்தயத்தில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களின் வளமான ஆதாரம் ரத்த ஓட்டத்தை தூண்டவும், பெண்களுக்கு பாலூட்டி சுரப்பிகள் வளரவும் உதவுகிறது.

6.சிவப்பு நிற பருப்பு:

how-to-increase-food-size-naturally-by-eating-certain-foods

இந்திய சமையலறைகளில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சிவப்பு நிற பருப்பு பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களின் நல்ல மூலமாகும். உணவில் புரதம் நிறைந்த சிவப்பு பயறு வகைகளைச் சேர்ப்பது இயற்கையாகவே மார்பக அளவை அதிகரிக்க உதவுகிறது.

7.பச்சை இலை காய்கறிகள் மற்றும் பழங்கள்:

பச்சை இலைக் காய்கறிகளை தினந்தோறும் எடுத்துக்கொள்வது உங்கள் மார்பளவு வளர உதவுவதோடு அவை மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்க உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இவற்றில் உள்ள சத்துக்கள்ஹார்மோன் செயல்பாட்டை சமநிலைப்படுத்தவும், மார்பக திசுக்கள் வளரவும், மீளுருவாக்கம் செய்யவும் உதவுகின்றன.

முட்டைக்கோஸ், கீரை, ப்ரோக்கோலி, மைக்ரோகிரீன்ஸ், வாட்டர் கோஸ் உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகளை வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதேபோல், ஈஸ்ட்ரோஜனை ஊக்குவிக்கக்கூடிய பெர்ரி, செர்ரி, அவுரிநெல்லிகள், பிளம்ஸ், ஆப்பிள்கள் ஆகியவற்றையும் உட்கொள்ளலாம்.

Image Source : Freepik

Read Next

Ginger For Women Health: பெண்களே!! இஞ்சியால் கிடைக்கும் இத்தனை ஸ்பெஷல் நன்மைகள் பற்றி தெரியுமா?

Disclaimer