இந்திய சமையலறையே ஒரு குட்டி இயற்கை வைத்திய சாலையாக உள்ளது. அதில் உள்ள ஒவ்வொரு மசாலாபொருட்களுக்கும் உணவின் சுவை கூட்டுவதை தவிர, தனித்தனி மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அந்தவகையில் இந்திய சமையலறைகளில் இஞ்சிக்கு தனி இடம் உண்டு. ஏனெனில் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.
மேலும் இஞ்சியில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் பி3, பி6, சி, இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், ஃபோலேட் மற்றும் நியாசின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

இஞ்சியில் உள்ள சத்துக்கள் பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பெண்கள் தினமும் தங்களது உணவில் இஞ்சியை சேர்த்துக்கொண்டால் என்னென்ன மாதிரியான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என பார்க்கலாம்…
1.மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு:
மாதவிடாய் காலத்தில், பல பெண்களுக்கு வயிற்று வலி, முதுகு வலி, கால்களில் தசைப்பிடிப்பு, அதிக இரத்தப்போக்கு, வாந்தி, தலைச்சுற்றல், சோம்பல், எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இத்தகையமாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்ய இஞ்சி ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
இஞ்சியின் பண்புகள் மாதவிடாய் பிரச்சனைகளை குறைக்க உதவுவதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இஞ்சியின் மருத்துவ பண்புகள் கருப்பையில் புரோஸ்டாக்லாண்டின்கள் உற்பத்தி செய்வதைத் தடுத்து, தசை வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. மாதவிடாய் காலத்தில் இஞ்சி டீ குடிப்பது நல்ல நிவாரணம் தரும்.
2.இனப்பெருக்க அமைப்புக்கு நல்லது:
பெண்களின் இனப்பெருக்க அமைப்புக்கு இஞ்சி நல்லது என்று ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்துகின்றன. இது ஃபோலிகுலோஜெனீசிஸ் அல்லது கருப்பை நுண்ணறை முதிர்ச்சியில் நேர்மறையான விளைவைக் ஏற்படுத்துகிறது. இஞ்சியில் இருதய பாதுகாப்பு பண்புகள் உள்ளன. இஞ்சி உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
இதையும் படிங்க: Coconut Oil Benefits: தேங்காய் எண்ணெயின் 5 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்!
3.அழற்சி எதிர்ப்பு பண்புகள்:
இஞ்சி சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இஞ்சியில் சுமார் 40 ஆக்ஸிஜனேற்ற கலவைகள் உள்ளன. அவை உடல் முழுவதும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை ஆதரிக்கின்றன. இஞ்சியை தொடர்ந்து எடுத்துக் கொண்டால், செரிமானத்தை மேம்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.மேலும் பிரசவத்திற்குப் பிந்தைய தசை தளர்வுக்கு உதவுகிறது.
4.பிசிஓஎஸ் பிரச்சனை குறையும்:
இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள் பெண்களின் உடலில் உள்ள ஹார்மோன்களை சீராக்க உதவுகிறது. இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. வலி, மனநிலை மாற்றங்கள் மற்றும் தலைவலி போன்ற PCOS இன் அறிகுறிகளைக் குறைக்கிறது. PCOS நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இஞ்சி டீ குடிப்பது நல்லது.
5.கொழுப்பை கரைக்கும்:
கொலஸ்ட்ராலை கரைக்க இஞ்சி திறம்பட செயல்படுகிறது. NCBI இல் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இஞ்சியை உட்கொள்வது உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் பத்து வாரங்களுக்கு எலிகளுக்கு இஞ்சி நீரை பருக வைத்துள்ளனர். அதன் பின்னர் நடத்திய ஆய்வில், எலிகளின் ரத்த பிளாஸ்மாவில் 27 சதவீத ட்ரைகிளிசரைடுகள் மற்றும் 29 சதவீத கொலஸ்ட்ரால் அளவுகள் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் இஞ்சியில் உள்ள ஹைப்போலிபிடெமிக் ஏஜென்ட் கொலஸ்ட்ராலை கரைப்பதில் திறம்பட செயல்படுவதாக கூறப்படுகிறது.