Thyroid Weight Loss Tips: தைராய்டு குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக உடல் எடையை குறைப்பது மிகவும் கடினமானது. சில சந்தர்ப்பங்களில், அடிப்படை தைராய்டு பிரச்சனைகள் உடல் கொழுப்பை அதிகரிக்கவும், இதனால் விரைவான உடல் எடை அதிகரிக்கவும் வழிவகுக்கும்.
தைராய்டு ஹார்மோன் சரியாக வெளியிடப்படும்போது, உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் சரியாக வேலை செய்கிறது மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாடு நன்றாக இருக்கும். தைராய்டு ஹார்மோன் வெளியீட்டில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் போதெல்லாம், சிக்கல்கள் தவிர்க்க முடியாதவை. சமீபகாலமாக வாழ்க்கை முறை மாற்றம், தவறான உணவுப் பழக்கம், உடல் உழைப்பு இல்லாததால் தைராய்டு பிரச்னை அதிகரித்து வருகிறது.
ஹைப்பர் தைராய்டிசம்:
தைராய்டு ஹார்மோன் அதிகமாக வெளியிடப்படுகிறது. T3 மற்றும் T4 ஹார்மோன்கள் அதிகமாக வெளியிடப்பட்டு TSH குறைகிறது. இது வளர்சிதை மாற்றத்தின் வேகத்தை அதிகரிக்கிறது. இதயத் துடிப்பு, எடை இழப்பு, தன்னிச்சையாக வியர்ப்பது,குடல் இயக்கம் அதிகரிப்பு வயிற்றுப்போக்கு, மற்றும் கண் இமைகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

தூக்கமின்மை, மன அழுத்தம், குளிர்ச்சியாக இருந்தாலும் சூடாக இருப்பது, அதிக வியர்வை, ஒழுங்கற்ற மாதவிடாய், அடிக்கடி மலம் கழித்தல் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
தைராய்டு சுரப்பி உடலுக்குத் தேவையானதை விட குறைவான தைராக்ஸை உற்பத்தி செய்யும் போது இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் T3 மற்றும் T4 ஹார்மோன்கள் குறைந்து TSH அதிகரிக்கிறது. இந்த மாற்றங்கள் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குவதோடு,உடல் எடை அதிகரிக்க காரணமாகின்றன.
தைராய்டு நோயாளிகளின் மிக முக்கியமான பிரச்சனையான உடல் எடையை குறைக்க உதவும் சில உணவு வகைகள் குறித்து பார்க்கலாம்…
ஃபைபர்:
நார்ச்சத்து தைராய்டு உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்தை மேம்படுத்ததவும், உடலில் உள்ள கெட்ட நச்சுக்களை நீக்கவும் செய்கிறது. மேலும்
ஃபைபர் உணவுகளை எடுத்துக்கொள்வது, வயிற்றிற்கு நிறைவான உணர்வை தருவதால் கலோரி எடுத்துக்கொள்ளும் அளவு குறைகிறது.
இயல்பாக உடல் எடையை குறைக்க விரும்புவோர் நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை தினமு உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
தைராய்டு நோயால் அவதிப்படுவோர், வெண்ணெய், பெர்ரி, நட்ஸ், ஓட்ஸ், பார்லி, ஆப்பிள், கேரட், கொய்யா போன்ற உணவுகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அயோடின்:

இதையும் படிங்க: கவர்ச்சியான மார்பகங்கள் வேண்டுமா?… அப்போ இதைச் சாப்பிடுங்கள்!
அயோடின் உடலில் தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்த உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், மீன், உப்பு, பால் பொருட்கள், முட்டை போன்ற உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றை உட்கொண்டால், அயோடின் உடலில் அதிகரித்து, TSH உற்பத்தி அதிகரிக்கிறது. தைராய்டு பக்கவிளைவுகளும் குறையும்.
குளுட்டன் ப்ரீ உணவுகள்:
குளுட்டன் என்பது ஒரு வகையான புரதமாகும். இது பசைத்தன்மை நிறைந்தது. எனவே பசையம் இல்லாத (குளுட்டன்) உணவுகளை உட்கொள்வது ஹைப்போ தைராய்டிசத்தை நிர்வகிக்க உதவும்.
முட்டை, சிக்கன், மீன், பெர்ரி, வாழைப்பழம், தக்காளி, ஆரஞ்சு, சியா விதைகள், ஆளி விதைகள், அரிசி உள்ளிட்ட பசையம் இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
செலினியம்:

செலினியம் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. செலினியம் TSH ஹார்மோனை உற்பத்தி செய்ய உதவுகிறது. செலினியம் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி நோயெதிர்ப்பு செயல்பாட்டை வலுப்படுத்த உதவுகிறது. பிரேசில் நட்ஸ், மத்தி மீன், முட்டை மற்றும் பருப்பு வகைகள் போன்ற செலினியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.
நிறைய தண்ணீர் குடியுங்கள்:

நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால், அதிக தண்ணீர் குடிக்கவும். அதிக தண்ணீர் குடிப்பதால் செரிமானம் மேம்படும் மற்றும் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். மேலும் தண்ணீர் குடிப்பதால் பசியும் குறையும். இது எடையிழப்பிற்கு உதவும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.