“உணவே மருந்து” என்பது பழமொழி. எனவே சரிவிகித சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள தவறும் போது, உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவ்வாறு நோயால் பாதிக்கப்படும் போது, என்னதான் மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும், சத்தான உணவை சாப்பிடுவதன் மூலமாக நோயில் இருந்து விரைவில் குணமடைய முடியும். இது அனைத்து விதமான நோய்களுக்கும் பொருந்தும்.
தற்போது தமிழகத்தை ஆட்டிப்படைத்து வரும் டெங்கு காய்ச்சலில் இருந்து பூரண நலமடைய விரும்புவோர் என்னென்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ளலாம், உட்கொள்ளக்கூடாது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

டெங்கு காய்ச்சலில் இருந்து குணமடைய உதவும் உணவுகள்:
1. ஓட்ஸ் (Oatmeal):
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். மேலும் உடல் அதன் சமநிலையை மீட்டெடுக்க கார்போஹைட்ரேட்டுகள் முற்றிலும் முக்கியம். இந்த இரண்டு விஷயங்களுமே ஓட்மீலில் உள்ளது. இது ஜீரணிக்க எளிதானது மற்றும் அதிக அளவு சாப்பிட்டாலும் வயிறு லேசாக இருப்பது போலவே உணரவைக்கும்.
இதையும் படியுங்கள்: இன்ஃபுளூயன்சா காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?
2. மூலிகைகள், மசாலா பொருட்கள் (Herbs and spices):
மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் ஆகியவை அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. இவை நோயெதிர்ப்பு செல்களை கட்டுப்படுத்துவதன் மூலமாக நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. எனவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் தங்களது தினசரி உணவில் இவற்றை சேர்ப்பது நல்லது.
3. பப்பாளி இலைகள் (Papaya leaves):
பல ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, பப்பாளி இலை டெங்கு காய்ச்சலுக்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியது எனக்கூறப்படுகிறது. அவை பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றன, இது டெங்கு நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை கணிசமான அளவு குறைக்கிறது. எனவே டெங்கு நோயாளிகள் பப்பாளி இலை சாற்றை பருகுதுவது பரிந்துரைப்படுகிறது.
4. மாதுளை (Pomegranate):
டெங்குவுக்கு ஆரோக்கியமான பழங்களில் ஒன்று மாதுளை. இந்த பழம் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது, இது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. மாதுளையில் அதிக இரும்புச்சத்து உள்ளது, இது டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான இரத்த அணுக்களின் எண்ணிக்கையை பராமரிக்கவும், டெங்குவிலிருந்து விரைவாக குணமடையவும் உதவுகிறது.
இதையும் படிங்க: பெற்றோர்கள் கவனத்திற்கு; மழைக்காலம் வரப்போகுது இதையெல்லாம் மறக்காமல் பின்பற்றுங்கள்!
5. தேங்காய் தண்ணீர் (Coconut water):
தேங்காய் தண்ணீர் உப்பு மற்றும் தாதுக்களின் வளமான ஆதாரமாக விளங்குகிறது. டெங்கு நோயாளிகளுக்கு ஏற்படும் நீரிழப்பை, இதில் உள்ள எலக்ட்ரோலைட் சரி செய்கிறது. மேலும் பலவீனத்தை குறைத்து உங்கள் உடலை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது.
இதையும் படியுங்கள்: https://www.onlymyhealth.com/tamil/who-issued-guidelines-for-influenza-9991
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கும் போது அதிக அளவு சாலிசிலேட்டுகள் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். இதனை அதிக்கப்படியாக உட்கொள்ளும் போது ஆஸ்பிரின் போல செயல்படுவதால், ரத்தத்தை மெல்லியதாக்கி, ரத்தம் உறைதலில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். எனவே கீழ்கண்ட உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது.
1. பழங்கள்: ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி, பிளம்ஸ், தேங்காய், பீச், முலாம்பழம், , எலுமிச்சை, அன்னாசி, செர்ரி, திராட்சை, நெல்லிக்காய், புளி, ஆரஞ்சு, ஆப்பிள், கிவி மற்றும் ஸ்ட்ராபெர்ரி.
2. காய்கறிகள்: அஸ்பாரகஸ், செலரி, வெங்காயம், கத்திரிக்காய், ப்ரோக்கோலி, முள்ளங்கி, பூண்டு, தக்காளி மற்றும் வெள்ளரி.
3. நட்ஸ் வகைகள்: திராட்சை, முந்திரி, பேரிச்சம் பழம், பாதாம், அக்ரூட், பிஸ்தா, பிரேசிலியன் நட்ஸ் மற்றும் வேர்க்கடலை.
4. மசாலா பொருட்கள்: கடுகு, சீரகம், கிராம்பு, கொத்தமல்லி, மிளகு, கருப்பு அல்லது சிவப்பு மிளகு, ஆர்கனோ, குங்குமப்பூ, தைம், ரோஸ்மேரி, சோம்பு, வினிகர்.
5. பானங்கள்: ஒயின், பீர், மதுபானம், ரம் மற்றும் காபி