Thu Oct 29, 2026 | 11:51 AM IST

Dengue Fever Precautions: தமிழ்நாட்டில் பரவும் டெங்கு காய்ச்சல்.. டெங்கு வராமல் தடுப்பது எப்படி?

Dengue Fever Precautions: தமிழ்நாட்டில் பரவும் டெங்கு காய்ச்சல்.. டெங்கு வராமல் தடுப்பது எப்படி?Dengue Fever Precautions: தமிழ்நாட்டில் பரவும் டெங்கு காய்ச்சல்.. டெங்கு வராமல் தடுப்பது எப்படி?

Dengue Fever Precautions: பருவமழைக் காலம் தொடங்கிவிட்டது. இனி அடிக்கடி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மழைக்கு பின், தெருக்களில் தண்ணீர் தேங்கி, பல இடங்களில் வடிகால் அடைப்பு ஏற்பட்டு, பல வகையான சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பல இடங்களில் இப்போதே டெங்கு பாதிப்பு தொடங்கிவிட்டது.

கடந்த சில ஆண்டுகளாக டெங்கு ஒரு பொது சுகாதார கவலையாக மாறியுள்ளது. டெங்கு என்பது டெங்கு வைரஸால் (DENV) ஏற்படும் ஒரு வைரஸ் தொற்று ஆகும், இது குறிப்பிட்ட வகை கொசுக்கள் கடிப்பதன் மூலம் மக்களுக்கு பரவுகிறது.

டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மழைநீர் தேக்கம்

கொசுக்கள் எங்கு உற்பத்தியாகின்றன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்? அருகில் தேங்கியுள்ள அழுக்கு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பாக இருக்க, அருகில் எங்கும் தண்ணீர் தேங்காமல் இருக்க வேண்டும். மழையால் எங்காவது தண்ணீர் தேங்கியிருந்தால், அதை சுத்தம் செய்யுங்கள்.

வீட்டை சுத்தமாக வைத்திருங்கள்

மழைக்காலத்தில் மாலை நேரங்களில் வீட்டிற்குள் கொசுக்கள் அதிகமாக வரும். இதுவும் டெங்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். எனவே, வீட்டை சுத்தமாக வைத்திருங்கள். வீட்டிற்குள் கொசுக்கள் வராதவாறு மாலையில் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடவும்.

கொசுவர்த்திச் சுருள் பயன்படுத்தவும்

டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க, வீட்டிற்குள் கொசு சுருள், கொசுக் கொல்லி இயந்திரம் அல்லது கொசுவைக் கொல்லும் மின்சார ராக்கெட் ஆகியவற்றைப் பயன்படுத்துவது மிகவும் அவசியம். டெங்குவைத் தவிர்க்க இது ஒரு சிறந்த தீர்வாகும்.

முழுக்கை ஆடைகளை அணியுங்கள்

காலை மற்றும் மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். இந்த நாட்களில், முடிந்தவரை வீட்டிற்குள் இருங்கள். குறிப்பாக குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே செல்ல விடாதீர்கள். கட்டாயம் இருந்தாலோ அல்லது பூங்காவிற்கு குழந்தைகளை விளையாட அனுப்ப வேண்டியிருந்தாலோ, அவர்களை முழுக் கை ஆடைகளை அணியச் செய்யுங்கள்.

டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக, டெங்குவுக்கு நிலையான சிகிச்சை இல்லை. டெங்கு சிகிச்சையானது அதன் அறிகுறிகளைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது. டெங்குவுக்கு வலிநிவாரணிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரத்த அணுக்கள் அதிகரிக்க உணவும் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

கண் வலி, தசை வலி, மூட்டு வலி, வாந்தி, சொறி, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். சிகிச்சையின் போது, ​​இந்த அறிகுறிகளைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.

Image Source: FreePik

Read Next

→ Thyroid Problem: இந்த அறிகுறிகள் இருக்கா? தைராய்டு வரப்போகுதுனு அர்த்தம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

M Karthick

Senior Sub Editor

செய்தியாளர், செய்தி ஆசிரியர் என பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளேன். ஆரோக்கிய நலன், அழகு பராமரிப்பு, பெற்றோர் குழந்தைகள் நலன், சினிமா உள்ளிட்டவைகளை ஆராய்ந்து கற்றறிந்து எழுத விரும்புபவன். தான் பதிவிடும் செய்திகள் தெளிவாகவும், துல்லியமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவேன். கருத்தரங்கில் பங்கேற்கவும் புத்தகம் படிக்கவும் பிடிக்கும். தனது செய்தியை படிக்கும் பயனருக்கு அதுசார்ந்த தகவலில் தெளிவு பிறக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.