மழைக்காலம் வந்தாலே கொசுவால் பரவக் கூடிய வியாதிகள் என்பது பெரிய தலைவலியாக மாறக் கூடும். அப்படி மழைக்காலம் தொடங்கியதில் இருந்து பெங்களூருவில் டெங்கு பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. ஒரே வாரத்தில் 69 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமில்லை ஜூலை மாதத்தில் மட்டும் 442 பேர் எனவும், இந்த ஆண்டின் தற்போதைய நிலைப்படி மொத்தம் 1685 பேர் பெங்களூருவில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. இதையடுத்து லார்வா கொசு உட்பட அனைத்து கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பெங்களூரு மாநகராட்சி இறங்கி இருக்கிறது.
மேலும் படிக்க: Chocolate Cause Acne: அதிகமா சாக்லேட் சாப்பிடுவதால் பருக்கள் வருமா? டாக்டர் பதில் இங்கே!
பெங்களூருவில் தான் டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது என கவனக்குறைவாக இருக்க வேண்டும், தமிழகத்தில் விரைவாக மழைக்காலம் உச்சமாக உள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கையாக இப்போது இருந்தே நாமும்பாதுகாப்பாக இருப்பது நல்லது. தமிழகத்தில் பல இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு வருவதால் பல சாலைகளும் மேடும் பள்ளமுமாக உள்ளது. இதனால் எளிதாக தண்ணீர் தேங்கக் கூடும்.
தண்ணீர் தேங்கினால் என்ன என்று கடந்து செல்ல வேண்டும், கொசுக்கள் உற்பத்தியாக இதுபோன்ற தேங்கும் தண்ணீரே கொசுக்கள் உற்பத்திக்கு ஏசி பெட்ரூம் போன்ற இடமாகும். இப்படி பரவும் கொசுக்களால் எளிதாகடெங்கு பரவத் தொடங்குகிறது. அதேபோல் நம்மை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில், வீட்டில் தேக்கி வைத்திருக்கும் பொருட்களிலும் கவனமாக இருக்க வேண்டியது முக்கியம்.
டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?
டெங்கு காய்ச்சல் என்பது கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்று ஆகும், இது பாதிக்கப்பட்ட ஏடிஸ் கொசுவின் கடி மூலம் பரவுகிறது. டெங்கு உடலை பலவீனப்படுத்தும், எனவே சரியான நேரத்தில் அறிகுறிகளை அடையாளம் காண்பது முக்கியம். அதிக காய்ச்சலுடன் உடல் வலி, சோர்வு, தடிப்புகள் மற்றும் பிற அறிகுறிகளும் இதில் அடங்கும்.
டெங்கு எவ்வாறு பரவுகிறது?
டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரை ஏடிஸ் கொசு கடித்து மற்றவரை கடிக்கும் போது இந்த தொற்று வேகமாக பரவுகிறது. இந்த ஏடிஸ் கொசு தேங்கியுள்ள தண்ணீர் உரல்கல், வீட்டில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் பாத்திரங்கள், பூந்தொட்டி, வீட்டு ஓரமாக எப்போது தேங்கியிருக்கும் தண்ணீர் போன்றவற்றில் எளிதாக வந்து குடியேறும்.
- அதேபோல் டெங்குவைப் பரப்பும் கொசு பெரும்பாலும் பகலில் கடிக்கும்.
- கொசுவின் சிறப்பு என்னவென்றால், இது குளிர்விப்பான்கள், பானைகள், வாளிகள் போன்ற சுத்தமான மற்றும் தேங்கி நிற்கும் நீரில் இனப்பெருக்கம் செய்கிறது.
- டெங்கு காற்றின் மூலமாகவோ அல்லது தொடுதல் மூலமாகவோ பரவாது.
- இது கொசுக்கள் மூலமாக மட்டுமே பரவுகிறது.
- டெங்கு ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நேரடியாகப் பரவாது.

டெங்கு பாதிப்பு அறிகுறிகள்?
- அதிக காய்ச்சல் - 102°F முதல் 104°F வரை உயரலாம்.
- தலைவலி
- தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி
- சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்கிறேன்
- பசியின்மை
- குமட்டல் மற்றும் வாந்தி
- கண்களுக்குப் பின்னால் வலி
- தோலில் தடிப்புகள்
- கைகள் மற்றும் கால்களில் வீக்கம்
- இரத்தத் தட்டுக்கள் குறைதல்
மேலும் சில கடுமையான அறிகுறிகளும் இதில் அடங்கும். காய்ச்சல் அதிகமாக தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்து பிறருக்கு பரவாமல், பரவல் சங்கிலியை உடைக்கும் ஒரு நபராக நாமும் மாறுவோம்.
image source: meta