Things To Do If Suspect Dengue: பொதுவாக, குளிர்காலங்களில் நோய்த்தொற்றுக்கள் அதிகமாக பரவும். எனவே இந்த காலகட்டத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மழைக்காலத்தில் பல வைரஸ் தொற்றுகள், மலேரியா, காய்ச்சல் போன்றவற்றால் மிக விரைவாக பாதிக்கப்படுவர். குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுவர். இந்த நிலையில், டெங்கு அல்லது வேறு ஏதேனும் வைரஸ் தொற்று உள்ளதா என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியாது.
டெங்கு காய்ச்சல் வந்திருப்பதை உறுதி செய்திருப்பினும், இது சாதாரண தொற்று என கருதி, மருத்துவரிடம் உறுதி செய்வதில்லை. ஆனால், இது நாளடைவில் ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. ஏனெனில், டெங்குவை சரியான நேரத்தில் பரிசோதித்து உறுதி செய்யாவிடில், இது உயிருக்கே ஆபத்தான நிலையில் முடியலாம். டெங்கு என்பதை சந்தேகித்தால், என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகலை மேற்கொள்ள வேண்டும் மற்றும் எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பது குறித்து சனார் சர்வதேச மருத்துவமனையின் உள் மருத்துவம் மற்றும் நீரிழிவு நோய் மற்றும் மூத்த ஆலோசகர் டாக்டர் ஸ்பூர்த்தி மான் அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.

டெங்கு இருப்பதை சந்தேகித்தால் என்ன செய்ய வேண்டும்
டாக்டர் ஸ்புர்தி மான் அவர்களின் கருத்துப்படி, “ஒருவருக்கு அல்லது அவரது குடும்பத்தில் யாருக்காவது டெங்கு இருப்பதை சந்தேகித்தால், சில அறிகுறிகளை வைத்து டெங்கு இருப்பதை உறுதி செய்யலாம். டெங்கு காய்ச்சல் லேசானதாகவும், கடுமையானதாகவும் இருக்கலாம். இதில், அதிக காய்ச்ச்சல், தலைவலி, வாந்தி, உடல் வலி, தலை சுற்றல், பசியின்மை அல்லது இழப்பு போன்றவை ஏற்படலாம்”.
இந்த பதிவும் உதவலாம்: Frequent Cold and Cough: தொடர் இருமல், சளி என்பது சாதாரண விஷயமல்ல!
“சில தீவிரமான சூழ்நிலைகளில், காய்ச்சல் குணமான பிறகும், தீவிரமான அறிகுறிகள் நீடிக்கலாம். இதில் பிளாஸ்மா கசிவு, வயிற்று வலி போன்றவை அடங்கும். இது பொதுவாக வயிறு மற்றும் நுரையீரலில் திரவம் குவிதல் என அழைக்கப்படுகிறது. ஈறுகள் அல்லது மூக்கில் இருந்து இரத்தப்போக்கு, விவரிக்க முடியாத சோர்வு, மலத்தில் இரத்தம் மற்றும் மயக்கம் போன்றவை ஏற்படலாம். இந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.”
மருத்துவர்கள் பரிந்துரை
டெங்கு இருப்பதை உறுதி செய்தபின், மருத்துவரிடம் செல்லும் முன், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். நோயாளிக்கு தொடர்ந்து திரவங்கள் கொடுக்க முயற்சிக்க வேண்டும். இது தவிர இரத்த எண்ணிக்கை சோதனை, கல்லீரல் செயல்பாடு பரிசோதனை போன்றவற்றுடன் நோயின் நிலையை தொடர்ந்து அறியலாம்.
மேலே கூறப்பட்ட அறிகுறிகள் காணப்படுமாயின் குறிப்பாக தீவிர அறிகுறிகளாக இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். கடுமையான டெங்கு காய்ச்ச்சலுக்கு, அவசர சிகிச்சை அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Dengue Recovery Food: டெங்குவில் இருந்து விடபட இந்த உணவை சாப்பிடுங்கள்!
Image Source: Freepik