தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு பரவல்! மக்களே உடனே இத செய்யுங்க

  • SHARE
  • FOLLOW
தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு பரவல்! மக்களே உடனே இத செய்யுங்க

இந்த டெங்குவானது ஏடிஎஸ் இன வகையைச் சார்ந்த கொசுக்களால் பரவக்கூடியதாகும். இந்த கொசுக்களானது மழைநீர் தேங்கியிருக்கும் இடத்திலேயே இனப்பெருக்கம் அடைகிறது. மேலும், டெங்குவால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த கொசு உற்பத்தி அதிகமாகிறது. அதிலும் ஒருவர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது, டெங்கு நோய்த்தொற்று ஏற்பட்ட 3 முதல் 10 நாள்களுக்குப் பிறகு தான் அதன் அறிகுறிகளை வைத்துக் கண்டறிய முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Dengue Effect Platelets: டெங்கு பாதிப்பால் பிளேட்லெட் எண்ணிக்கை குறையுமா? நிபுணர் கூறும் விளக்கம்

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு

தற்போதைய மழைக்கால சூழ்நிலையில் கொசுக்களின் உற்பத்தி அதிகமாகி டெங்கு பரவலின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. அவ்வாறே தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் அவர்களின் கூற்றுப்படி, “தமிழகத்தில் சென்னை, மதுரை, தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த டெங்கு பரவலைக் கட்டுக்குள் வைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், டெங்கு உயிரிழப்புகள் கட்டுக்குள் உள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், காய்ச்சல் கண்டறியும் பணிகளை உள்ளாட்சித் துறை மற்றும் நல்வாழ்வுத்துறை இணைந்து மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். எனவே டெங்கு கொசுக்களின் பரவல் அதிகமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். குறிப்பாக இந்த காலகட்டத்தில் மக்கள் தங்களின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

டெங்குவால் மரணம்

டெங்கு நோய்த்தொற்றின் அறிகுறிகளைக் கண்டறிந்த உடனேயே மக்கள் சிகிச்சை பெறுவது கட்டாயமாகிறது. இதன் மூலம் மட்டுமே கடுமையான சூழ்நிலையைத் தவிர்க்க முடியும். ஏனெனில் டெங்கு காய்ச்சலுக்கு சரியாக சிகிச்சை பெறவில்லை எனில், அது இரத்தக்கசிவு காய்ச்சலாக மாறும் நிலை ஏற்படலாம். இதனால் இரத்தக்கசிவைத் தொடர்ந்து இரத்த அழுத்தம் குறைதல் நிகழ்ந்து மரணம் கூட ஏற்பட வாய்ப்புண்டு. எனவே டெங்கு பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Dengue Symptoms: பரவி வரும் டெங்கு., இந்த அறிகுறிகளை புறணக்கணிக்காதீர்கள்!

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்

ஏடிஸ் எஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் என்ற பெண் கொசுக்கள் கடிப்பதால் பரவக்கூடிய இந்த டெங்கு காய்ச்சலான உடலில் சில அறிகுறிகளைக் காட்டுகிறது. இதன் முதல் அறிகுறியாக காய்ச்சல் ஏற்படுகிறது. அதனைத் தொடர்ந்து பின்வரும் அறிகுறிகள் தென்படலாம்.

  • கடுமையான தலைவலி
  • சொறி பிரச்சனை
  • கண்களில் வலி
  • எலும்பு மற்றும் தசைகளில் வலி
  • மூட்டு வலி
  • குமட்டல் மற்றும் வாந்தி

இந்த அறிகுறிகளைக் கண்டால் மக்கள் உடனடியாக மருத்துவரிடம் சென்று டெங்குவை உறுதி செய்து, அதற்கான சிகிச்சை முறைகளைக் கையாள வேண்டும்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு முறைகள்

  • டெங்கு காய்ச்சலின் தடுப்பு முறையாக முதலில் அமைவது தனிமனித சுகாதாரமே ஆகும். இதில் தனி மனிதனாக ஒவ்வொருக்குமே அவர்களைப் பாதுகாப்பதில் பொறுப்பு உள்ளது.
  • டெங்கு அதிகரிப்பிற்கு மற்றும் பரவலுக்குக் காரணமாகும் கொசுக்கள் உருவாகும் இடங்களை அழித்து, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இவ்வாறு கொசுக்கள் உற்பத்தியைத் தடுப்பதன் மூலம் டெங்கு பரவலைக் குறைக்கலாம்.
  • வீட்டைச் சுற்றி நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக தேவையற்ற பொருள்களை வீடுகளில் வைத்தல் கூடாது. ஏனெனில், இவற்றில் நீர் தேங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • குடிக்கும் நீர் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். முடிந்த வரை இந்த காலகட்டத்தில் தண்ணீரை சூடாக்கி வெதுவெதுப்பான நீரைக் குடிக்கலாம்.
  • வீட்டினுள்ளேயும், வீட்டைச் சுற்றிலும் ஈரப்பதம் இல்லாமல் சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்திடிருக்க வேண்டும்.
  • டெங்கு நோய்த்தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்க, உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். எனவே நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

இது போன்ற ஏராளமான வழிகளை மேற்கொள்வதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவலிலிருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Dengue Fever: மழைக்காலத்தில் டெங்குவில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?

Image Source: Freepik

Read Next

Contact Lens Effects: கான்டாக்ட் லென்ஸ் பார்வையை பாதிக்குமா?

Disclaimer