$
பொதுவாக மழைக்காலங்களில் டெங்குவால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம். கொசுக்களால் உருவாகும் இந்த டெங்கு காய்ச்சல் உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதில் ஒன்று உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றமாகும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரின் பிளேட்லெட்டுகள் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றம் குறித்தும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான குறிப்புகள் குறித்தும் காணலாம்.
டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சல் பொதுவாக எலும்பு முறிவு காய்ச்சல் என அழைக்கப்படுகிறது. ஏடிஸ் என்ற கொசு வகைகள் குடிப்பதன் மூலம் இந்த வைரஸ் நோய் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை குறைக்கிறது. மேலும் ஆபத்தான டெங்கு பாதிப்புகள் கடுமையான தலைவலி, மூட்டுவலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் காய்ச்சலை ஏற்படுத்தும். இதன் மற்ற அறிகுறிகளாக தசை வலி, குமட்டல் அல்லது வாந்தி, கண் வலி, சொறி உள்ளிட்டவை அடங்கும். இதற்கு சரியான சிகிச்சை முறை செய்வதன் மூலம் குணப்படுத்த முடியும். இதில் டெங்கு ஒருவரின் இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை புனே அப்பல்லோ ஸ்பெக்ட்ரோ உள் மருத்துவ நிபுணர், மருத்துவர் சாம்ராட் ஷா விவரித்துள்ளார். இது குறித்து விரிவாக காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Liver Cirrhosis Symptoms: இந்த அறிகுறிகள் எல்லாம் கல்லீரல் சிரோசிஸ் ஏற்பட காரணமாம்..
இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை
உடலில் எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகும் சிறிய இரத்த அணுக்களே பிளேட்லெட்டுகள் எனப்படுகிறது. டெங்கு ஏற்படும் போது பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை குறைந்து விடுகிறது. இது தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு தடையாக உள்ளது. பொதுவாக இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை ஒருவருக்கு 1,50,000 uL முதல் 4,00,000 uL வரை இருக்கும். ஆனால், டெங்குவால் பாதிக்கப்பட்ட நபர்களின் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை 20,000 முதல் 40,000 வரை இருக்கும்.
டெங்குவில் பிளேட்லெட்டுகள் அளவு குறைவதற்கான காரணம்
டெங்கு நோய்த்தொற்றுக்கான முக்கிய காரணம் ஏடிஸ் கொசு வகையால் பரவக்கூடிய வைரஸ் ஆகும். இதில், ஏடிஸ் கொசு ஒருவரைக் கடித்த உடன், உடலில் பல்வேறு இடங்களுக்கு பரவத் தொடங்குகிறது. இது பிளேட்லெட்டுக்களின் எண்ணிக்கையைக் குறைகிறது. இவ்வாறு பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவதை 'த்ரோம்போசைட்டோபீனியா' எனப்படுகிறது. இது ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் பிளேட்லெட்டுகளுக்கு எதிர்வினையாக இருக்கலாம். இதில் பிளேட்லெட்டுகள் நேரடியாக அழைக்கப்படவில்லை எனினும் பிளேட்லெட் செயல்பாடு மற்றும் அதன் எண்ணிக்கையை பாதிக்கும் சிக்கலைத் தரும்.
குறைந்த பிளேட்லெட்டுக்கள் இருப்பதற்கான அறிகுறிகள்
பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது நோய்த்தொற்றுகள் ஏற்படுத்துவதுடன் குறிப்பிடத்தக்க சிக்கலை ஏற்படுத்தும். எனவே, டெங்கு நோயாளிகள் பிளேட்லெட்டுகளின் அளவைக் கண்காணிப்பது மிக அவசியமாகிறது. இவ்வாறு வழக்கமான சோதனைகளை மேற்கொள்ளும் பொது, ஏற்படும் பெரிய இழப்பைத் தடுக்க முடியும். அதிக அளவிலான பிளேட்லெட்டுகளின் இழப்பு இரத்தப்போக்கை ஏற்படுத்தும். அதாவது டெங்குவின் அதிக அளவிலான பாதிப்பில் பிளேட்லெட்டுக்கள் எண்ணிக்கை 10,000-க்குக் கீழ் குறைவதாகும். இந்த எண்ணிக்கையில் பிளேட்லெட்டுகள் உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தக் கூடிய இரத்தப்போக்கிற்கு வழிவகுக்கும். மேலும், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் பிளேட்லெட்டுகள் 20,000-க்குக் கீழ் குறையும் போது இரத்த மாற்றம் செய்யப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Dengue Recovery Food: டெங்குவில் இருந்து விடபட இந்த உணவை சாப்பிடுங்கள்!
இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை உயர்த்துவது எப்படி?
டெங்குவால் பாதிக்கப்பட்ட நபர்களில் குறைந்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இரத்தமாற்றம் செய்யலாம். ஆனால், இதற்கு முன்பாகவே நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டத்தில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதுடன், சத்தான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை அதிகரிக்க சாப்பிட வேண்டியவை
உடலில் இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் உணவுகளாக பப்பாளி இலைசாறு, பழங்கள், பச்சை இலைக் காய்கறிகள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம். மேலும், வைட்டமின் கே, சி மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள தக்காளி, காலிஃபிளவர், பூசணி விதைகள், பருப்பு வகைகள், முட்டை, பால் பொருள்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இந்த உணவு முறைகளுடன் மற்ற சிகிச்சை முறைகளையும் சேர்த்து பிளேட்லெட்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். மேலும், டெங்கு பாதிக்கப்பட்ட நபர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளைத் தெரிந்து கொள்ள நிபுணர்களின் உதவியைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Back Pain Relief: முதுகு வலி வரக் காரணமும், தீர்வும்.. சிம்பிள் டிப்ஸ்
Image Source: Freepik