HPV Infection: மனித பாப்பிலோமா வைரஸ் எனப்படும் ஹெச்பிவி தொற்று உடலுறவு மூலமாக பரவும் நோய்த்தொற்றுகளில் ஒன்றாகும். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் பாதிக்கும் இந்த தொற்று புற்றுநோய் தொடர்பான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. ஹெச்பிவியால் பாதிக்கப்பட்ட நபருடன் உடலுறவில் ஈடுபடும் போது ஹெச்பிவி வைரஸ் உடலில் நுழைகிறது. பாலியல் பரிமாற்றம் இல்லாத வகையில் பாதிக்கப்பட்ட நபரின் உடலில் உள்ள பாலுண்ணி அல்லது மருவைத் தொடுவதன் மூலம் பரவுகிறது. இந்த HPV வைரஸ் தொற்று குறித்து குறித்து பெங்களூர், பன்னர்கட்டா சாலை, ரெயின்போ மருத்துவமனை, மகப்பேறு ஆலோசகர் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் சுமன் சிங் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) என்றால் என்ன?
ஹெச்பிவி வைரஸ் சிறிய உறை இல்லாத டிஎன்ஏ வைரஸ் ஆகும். இந்த வைரஸ் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளில் காணப்படுகிறது. அதில் 30 முதல் 40 வகைகள் ஆண்கள் மற்றும் பெண்களின் பிறப்புறுப்புப் பகுதியை பாதிக்கிறது. இது குறைந்த மற்றும் அதிக ஆபத்து புற்றுநோயியல் வகையைக் கொண்டுள்ளது.
குறைந்த ஆபத்து வகைகள், பிறப்புறுப்பு மருக்களை ஏற்படுத்தும். இது ஹெச்பிவி 6 மற்றும் 11 வைரஸ் வகைகளால் ஏற்படுவதாகும். அதிக ஆபத்துள்ள புற்றுநோய் வகைகள் ஹெச்பிவி 16, 18, 31, 33, 45, 52, 58 ஆகியவை ஆகும்.

இந்த பதிவும் உதவலாம்: Lower Blood Pressure: இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?
இந்தியாவில் 55 மில்லியன் வகையான ஹெச்பிவி புற்றுநோய் மற்றும் தொற்றுக்களை இந்த 9 வகை சேரோடைப்களும் ஏற்படுத்தக்கூடும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை வீட்டா ஹெச்பிவி தோற்று அதிகமாக ஏற்படுகிறது. இதில் அதிக ஆபத்து ஏற்படுத்தும் செரோடைப்கள் பல்வேறு விதமான புற்றுநோய்களை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் இவை 73% குதப் புற்றுநோய், 77% பிறப்புறுப்பு புற்றுநோய், 95% பிறப்புறுப்பு புற்றுநோய், 98% கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றவை ஏற்பட வழிவகுக்கிறது.
ஹெச்பிவி நோய்த்தொற்று தன்மைகள்
இந்த நோய்த்தொற்று மிகவும் பொதுவான ஒன்றாகும். பெரும்பாலும் 80% பெண்கள் ஹெச்பிவி நோய்த்தொற்றைப் பெற்றிருப்பர். மேலும், இது நிலையற்ற தன்மை கொண்டதால், அறிகுறியற்றதாகவும், தன்னிச்சையாக தீர்க்கப்படும் ஒன்றாக அமைகிறது.
HPV நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மில்லியன் பெண்கலீல் சுமார் 1600 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை எனில், கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தும். இதிலிருந்து விடுபட சிறு வயதிலேயே தடுப்பூசி போட்டுக் கொள்வது சிறந்தது. மேலும், இது பெண்களில் கர்ப்பப்பை புற்றுநோயைத் தவிர பிறப்புறுபோப்பு புற்றுநோய், அனோஜெனிட்டல் மருக்கள், குதப்பி புற்றுநோய், போன்றவற்றையும் ஏற்படுத்துகிறது.
ஹெச்பிவி தொற்று ஆண்களை எவ்விதத்தில் பாதிக்கிறது
உலகளாவிய ஆய்வில் குறிப்பிட்ட படி, 10 ஆண்களில் 6.5 பேர் ஹெச்பிவி தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இது ஆண்களுக்கு அனோஜெனிட்டல் மருக்கள், குத மற்றும் ஆண்குறி புற்றுநோயை ஏற்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Liver Healthy Tips: கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்களுக்கான டிப்ஸ்!
ஹெச்பிவி தொற்றுக்கான தடுப்பூசி
இளம் வயதில் தடுப்பூசி செலுத்துவதன் மூலம், இந்த ஹெச்பிவி தொற்றிலிருந்து விடுபட முடியும். ஹெச்பிவி தொற்றுக்கான தடுப்பூசி விவரங்களைக் காணலாம்.
14 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் - 0 மற்றும் 6 மாதங்களில் இரண்டு தடுப்பூசிகள்
14 வயதுக்கு மேற்பட்டவர்கள் - 6 தடுப்பூசிகள் - 0, 2, மற்றும் 6 மாத கால இடைவெளியில் ஒரு வருட காலத்திற்குள் கொடுக்கப்பட வேண்டும்.
கர்ப்ப காலத்தில் தடுப்பூசிகள் போடப்படுவதில்லை.
இந்த பதிவும் உதவலாம்: Organ Donation: உடல் உறுப்பு தானம் செய்யும் முன் நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
Image Source: Freepik