Eye Care Tips: கண்ணுக்கு கண்ணாடி போடாமல் இருக்கனுமா? அப்போ இதை செய்யுங்கள்

  • SHARE
  • FOLLOW
Eye Care Tips: கண்ணுக்கு கண்ணாடி போடாமல் இருக்கனுமா? அப்போ இதை செய்யுங்கள்


கண்களை பராமரிப்பது எப்படி?

நம் கண்களை சரியாக பராமரிக்க வேண்டும். கண்கள் சரியாக இருந்தால் எந்த வேலையும் சரியாக செய்ய முடியும். என்ன உடை என்பதுடன் சேர்ந்து என்னமாதிரி கண்ணாடி என்பதும் ஒருவருக்கும் அங்கமாகி விட்டது. அந்தளவிற்கு கண்ணாடி அணிந்திருப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். நமது கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதும், கண் பிரச்சனைகளைத் தவிர்ப்பதும் மிகவும் அவசியம். வழக்கமான கண் பரிசோதனைகள் மற்றும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

இதையும் படிங்க: Kidney Infections: இருப்பதை எப்படி தெரிந்துக்கொள்வது

கண் உடற்பயிற்சி

தினமும் 10 நிமிடம் கண்களுக்கு சிறிது உடற்பயிற்சி செய்தால் கண் பிரச்சனைகள் வராது. முதலில் நிதானமாக உட்காருங்கள். இரண்டு கண்களையும் பெரிதாக்கி, தலையை அசைக்காமல், கண் இமைகளை மட்டும் மெதுவாக வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேல் நோக்கியும் நகர்த்த வேண்டும். பின்னர் கண் இமைகளை கண்ணின் முனைகளுக்கு எடுத்துச் சென்று திருப்பவும். மீண்டும் எதிர் திசையில் திரும்பவும். இதை 10 முதல் 20 முறை செய்யவும். இவ்வாறு செய்வதால் கண்ணில் உள்ள இரத்த நாளங்கள் சுறுசுறுப்பாக இயங்கும். கண்களில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்.

கண்களுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம்

ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்கும் இருபது வினாடி இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் 20 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பொருளின் மீது கவனம் செலுத்துங்கள். அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடங்கள் உங்கள் கண்களுக்கு போதுமான ஓய்வு கொடுங்கள். ஓய்வெடுக்கும் போது, ​​கண்களை கடிகார திசையிலும் எதிர் கடிகார திசையிலும் சுழற்ற வேண்டும். இல்லையென்றால் கண்களை மூடி அமருங்கள்.

ஆன்டி-ரிஃப்ளெக்டிவ் கோட்டிங் கண்ணாடி

ஒவ்வொரு நாளும் அதிக நீல ஒளியைப் பார்ப்பது கண் பிரச்சினைகளை ஏற்படுத்தும். கம்ப்யூட்டர், டிவி, லேப்டாப், செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தும் போது ஆன்டி-ரிஃப்ளெக்டிவ் கோட்டிங் கண்ணாடிகளை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

வைட்டமின் ஏ உணவுகள்

உங்கள் உணவில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதில் உள்ள ரெட்டினோல் மற்றும் பீட்டா கரோட்டின் கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த வைட்டமின் 'ஏ' கேரட் மற்றும் கீரைகளில் அதிகம் உள்ளது.

உணவு முறைகள்

கீரைகள் கண் ஆரோக்கியத்திற்கு நல்லது. மெகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள சால்மன், டுனா, மத்தி, ட்ரவுட் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களை அதிகம் சாப்பிடுங்கள். இவற்றுடன் அக்ரூட் பருப்புகள், பாதாம், வாழைப்பழம், திராட்சை, அவகேடோ போன்றவற்றைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். அப்போதுதான் நம் உடலில் போதுமான ஈரப்பதம் இருக்கும். இதனால் கண்கள் வறட்சி அடைவதையும் தடுக்கிறது.

இதையும் படிங்க: Common Monsoon Diseases: பருவமழையில் பரவும் நோய்த் தொற்றுகள்- முன்னெச்சரிக்கை அவசியம்

டீ, காபி, ஆல்கஹாலுக்கு நோ சொல்லுங்கள்

டீ, காபி மற்றும் ஆல்கஹால் போன்ற காஃபின் அதிகம் உள்ள உணவுகள் கண் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனவே இவைகளை தவிர்க்க வேண்டும். சர்க்கரை பானங்கள் மற்றும் இனிப்புகளை குறைவாக உட்கொள்ள வேண்டும். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை குறைக்கவும். இவை கண்களை வறட்சியடையச் செய்யும்.

இதுபோன்ற வழிகளை பின்பற்றும் போது கண் பாதிப்பு குறையும் என்றாலும் தீவிரத்தை உணர்ந்து மருத்துவரை அணுகி அவரது பரிந்துரையை பின்பற்றுவது அவசியம்.

image source: freepik

Read Next

Liver Function Tests: கல்லீரல் செயல்பாட்டு சோதனை பற்றி உங்களுக்கு தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்