$
கல்லீரல் செயல்பாடு சோதனை (LFT) என்பது, கல்லீரல் செயல்பாடு பேனல் என்றும் அழைக்கப்படும். இது கல்லீரலில் இருந்து வெளியேறும் புரதம் மற்றும் நொதிகளின் அளவை அளவிடும் இரத்தப் பரிசோதனை ஆகும். இந்த சோதனை கல்லீரலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கண்காணிக்க உதவுகிறது. ஒரு இரத்த மாதிரியில், வெவ்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். அதாவது கல்லீரலில் தயாரிக்கப்படும் அலனைன் டிரான்ஸ்மினேஸ் (ALT), அஸ்பார்டேட் டிரான்ஸ்மினேஸ் (AST), அல்கலைன் பாஸ்பேடேஸ் (ALP), காமா-குளூட்டமைல்ட்ரான்ஸ்ஃபெரேஸ் (GGT), அல்புமின் மற்றும் மொத்த புரதம் ஆகியவற்றை ஒரே மாதிரியில் பரிசோதிக்க முடியும். இவை அனைத்தும் கல்லீரலால் தயாரிக்கப்படும் ஒரு கழிவுப் பொருளாகும்.

மேலும் லாக்டேட் டீஹைட்ரஜனேஸ் (LD) என்பது உடலின் பெரும்பாலான செல்களில் காணப்படும் ஒரு நொதியாகும். நோய் அல்லது காயம் காரணமாக செல்கள் சேதமடையும் போது, இது இரத்தத்தில் வெளியிடப்படுகிறது. இந்த விஷயங்கள் வரம்பில் இல்லை என்றால், கல்லீரல் நோய் ஏற்படும். இதனை சோதிக்க கல்லீரல் செயல்பாடு சோதனை (LFT) செய்யப்படுகிறது. இந்த சோதனை குறித்து அப்போலோ மருத்துவமனையின் நோயியல் நிபுணர் மற்றும் ஆலோசகர், மருத்துவர் நிரஞ்சன் நாயக் விளக்கியுள்ளார்.
இதையும் படிங்க: Liver Healthy Tips: கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்களுக்கான டிப்ஸ்!
கல்லீரல் செயல்பாடு சோதனையால் என்ன பலன்?
கல்லீரல் செயல்பாடு சோதனையானது ஹெபடைடிஸைக் கண்டறியவும், கல்லீரல் நோய்க்கான சிகிச்சையை கண்காணிக்கவும் உதவுகிறது. மேலும் சிகிச்சை செயல்படுகிறதா என்பதைப் புரிந்துகொள்ளவும் இந்த சோதனை உதவுகிறது. குறிப்பாக கல்லீரல் சேதம் அல்லது சிரோசிஸ் ஆகியவற்றைக் கண்காணிக்க இது உதவுகிறது. சில மருந்துகளின் பக்க விளைவுகள் கூட இந்த சோதனை மூலம் அறிய முடியும்.
கல்லீரல் செயல்பாடு சோதனை எப்போது தேவைப்படுகிறது?
மஞ்சள் காமாலை, குமட்டல் மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, கருமையான சிறுநீர், வெளிர் நிற மலம் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளைக் கொண்ட ஒருவருக்கு இந்த சோதனைகள் தேவைப்படுகிறது. மேலும் மது அருந்துபவர்கள், குடும்ப வரலாறு மற்றும் கல்லீரல் பாதிப்புக்கு வழிவகுக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் இந்தப் பரிசோதனையை எடுக்க வேண்டும்.
கல்லீரல் செயல்பாடு பரிசோதனை எப்படி நடக்கும்?

கல்லீரலின் நிலையைப் பற்றி அறிய உங்கள் கையில் உள்ள நரம்பிலிருந்து ஒரு சிறிய ஊசியைப் பயன்படுத்தி இரத்த மாதிரி எடுக்கப்படும்.
முடிவுகளை எப்படி அறிவது?
உங்கள் கல்லீரல் செயல்பாடு சோதனை முடிவுகள் இயல்பானதாக இல்லாவிட்டால், கல்லீரல் சேதமடைந்துள்ளது அல்லது சரியாக வேலை செய்யவில்லை என்று அர்த்தம். இது ஹெபடைடிஸ் ஏ, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, மற்றும் மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் நோயால் ஏற்படலாம்.
கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டால் ஒருவர் உடனடியாக சிகிச்சையைத் தொடங்க வேண்டும். இல்லையெனில், கடுமையான சிக்கல்கள் அல்லது உயிரிழப்புக்கு வழிவகுக்கும்.
Image Source: Freepik