மனித உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்து வருகின்றன. அந்த வகையில், உடல் உறுப்புகளில் முக்கிய பங்கு வகிப்பது கல்லீரல் ஆகும். கல்லீரல் பாதிப்பால், உடலில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படலாம். இது மஞ்சள் காமாலை, ஒவ்வாமை, சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே, கல்லீரலை ஆரோக்கியமான உணவு முறைகள் மூலம் பாதுகாத்து வருவது நல்லது. இதில், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சில வழிகளைக் காணலாம்.
கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான வழிகள்
கல்லீரல் நோயை எதிர்த்துப் போராடுவதை விட, அதை வரவிடாமல் தவிர்ப்பதே முக்கியமான ஒன்றாகும். இதில், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கக் கூடிய சில வழிமுறைகளைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்

இந்த பதிவும் உதலாம்: நல்ல உறக்கம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்
தொடர் உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்வதன் மூலம், கல்லீரல் தொடர்பான நோய்களைத் தடுக்கலாம். உடற்பயிற்சி செய்யும் போது உடலில் உள்ள கொழுப்புகள் கரைக்கப்படுகிறது. எனவே, தொடர்ச்சியான உடற்பயிற்சியானது கல்லீரல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்க உதவும்.
ஆரோக்கியமான உடல் எடை
உடல் எடை அதிகமாக இருந்தால் கல்லீரல் நோய் உண்டாவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். ஏனெனில் அதிக அளவிலான உணவுகளை உட்கொள்வது செரிமானம் அடைவதில் பாதிப்பை ஏற்படுத்தும். இது கல்லீரல் நோயை ஏற்படுத்துகிறது.
இந்த பதிவும் உதலாம்: உணர்திறன் வாய்ந்த பற்களை பராமரிப்பதற்கான 5 வழிகள் இங்கே…
ஆரோக்கியமான உணவு முறைகள்
சில ஆரோக்கியமான உணவு முறைகளைக் கையாள்வதன் மூலமே கல்லீரல் தொடர்பான நோய்களிலிருந்து விடுபட முடியும். குறிப்பாக, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட உடலுக்கு நன்மை தரக்கூடியவற்றை உண்பதன் மூலம் கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
வைட்டமின் சி சார்ந்த உணவுகள்
கல்லீரைச் சுத்தப்படுத்துவதில், வைட்டமின் சி சார்ந்த உணவுகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த வகை உணவுப் பொருள்கள், கல்லீரலை பாதுகாப்பாக வைப்பதோடு உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும், இது கல்லீரலை வலிமையாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இந்த பதிவும் உதலாம்: பருவமழையில் பரவும் நோய்த் தொற்றுகள்- முன்னெச்சரிக்கை அவசியம்
பாதுகாப்பற்ற ஊசியைத் தவிர்த்தல்
கல்லீரல் பாதிப்புக்கு, பாதுகாப்பற்ற ஊசியைப் பயன்படுத்துவதும் முக்கிய காரணம் ஆகும். கூர்மையான கருவிகள் அல்லது ஊசிகள் எதுவாயினும், அவை சுத்தமாக இருப்பதை உறுதி கொள்ள வேண்டும். இந்த பாதுகாப்பற்ற ஊசி நடைமுறைகள் அரிதே நடப்பது என்றாலும், பாதுகாப்பற்றதாக இருக்கும்.
Image Source: Freepik