Healthy vegetarian recipes for liver health: உடலில் உள்ள பல்வேறு முக்கிய உறுப்புகளில் ஒன்றாக கல்லீரல் அமைகிறது. இது உடலிலிருந்து நச்சுகளை அகற்றவும், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும், ஆற்றலை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது. ஆனால், இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறைகளின் காரணமாக கல்லீரல் ஆரோக்கியம் எதிர்மறையாகப் பாதிக்கப்படுகிறது. இதனால் கல்லீரல் தொடர்பான நோய்களை இன்று பலரும் சந்திக்கின்றனர். எனவே கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க கூடுதல் கவனிப்பு அவசியமாகும்.
மகிழ்ச்சி தரும் விதமாக, இந்த கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சிறப்பு சுத்திகரிப்புகள் அல்லது சப்ளிமெண்ட்ஸ் தேவையில்லை. அதன் படி ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்ப்பதுடன், சீரான உணவுமுறையைக் கையாள்வதன் மூலம் கல்லீரல் தொடர்பான நோய்களிலிருந்து விடுபடலாம். ஒரு சில பொதுவான பொருட்கள் மட்டுமே அதை மீட்டமைக்க, ரீசார்ஜ் செய்ய மற்றும் அதன் வேலையைச் சிறப்பாகச் செய்ய உதவுகிறது. இதில் கல்லீரலை இயற்கையாகவே ஆதரிக்க உதவும் சைவ உணவுகள் சிலவற்றைக் காணலாம்.
கல்லீரலை சுத்தப்படுத்த உதவும் சைவ உணவுகள்
கேரட் மற்றும் ஆப்பிள் சாலட்
கேரட் மற்றும் ஆப்பிள் இரண்டுமே மொறுமொறுப்பான வகையைச் சார்ந்ததாகும். இதில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை இரண்டுமே நச்சுகளை வெளியேற்றி, உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில் எலுமிச்சையை பிழிந்து, சிறிது கல் உப்பு தூவி இந்த பச்சை சாலட்டை பிரகாசமாகவும், கல்லீரலுக்கு ஏற்றதாகவும் மாற்றலாம். இது சிறந்த சிற்றுண்டியாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: கல்லீரல் ஹெல்த்தியா இருக்க இந்த மூன்று உணவுகளிலிருந்து நீங்க தள்ளி இருக்கணும்.. மருத்துவர் சொன்னது
முக்கிய கட்டுரைகள்
பாலக் மற்றும் மேத்தி சூப்
கீரை, வெந்தயம் போன்ற இலைக் கீரைகளில் குளோரோபில் நிறைந்துள்ளது. இவை கல்லீரலில் உள்ள சுமையை குறைக்கவும், நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது. இதை சூடான, லேசான மசாலா சூப்பில் கலப்பது, அதன் நன்மைகளை அனுபவிக்க ஒரு எளிய வழியாகும். சுத்திகரிப்பை மேலும் அதிகரிப்பதற்கு ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு சேர்க்கலாம். இது இனிமையான, லேசான உணவாகும்.
மஞ்சள் பூசணி கறி
மஞ்சள் பூசணி குளிர்ச்சி மற்றும் நீரேற்றத்தைத் தரக்கூடியதாகும். அதே சமயத்தில், இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. லேசான கறியில் சேர்த்து சமைக்கப்படும் இந்த கலவையானது கல்லீரலை ஆற்றவும், மென்மையான சுத்திகரிப்பை ஆதரிக்கவும் உதவுகிறது. அமைதியான, சுவையான ஒன்றை விரும்பும் போது மதிய உணவிற்கு இது சரியான தேர்வாகும். எனினும், மஞ்சள் பூசணியை மிதமாக உட்கொள்வது நல்லது.
நெல்லிக்காய் மற்றும் கொத்தமல்லி சட்னி
நெல்லிக்காயில் வைட்டமின் சி உள்ளது. இது கல்லீரல் செயல்பாட்டை பலப்படுத்துகிறது. மேலும் அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்ற கொத்தமல்லி உதவுகிறது. இந்நிலையில், புதினா, பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சை சாறுடன் இவை இரண்டையும் சேர்த்து சட்னி தயாரித்து ரொட்டி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
பாகற்காய் வறுவல்
பாகற்காயின் கசப்புத் தன்மை அனைவருக்கும் பிடிக்காததாக இருப்பினும், இவை கல்லீரலுக்கு அதிக நன்மை பயக்கும். இது பித்தம் மற்றும் இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தி கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இதை மெல்லியதாக நறுக்கி, வெங்காயம் மற்றும் கடுகு சேர்த்து வறுக்க வேண்டும். எலுமிச்சை சாறுடன் இறுதியாக ஒரு காரமான, கூர்மையான பக்க உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: சமையலறையில் இருக்கக்கூடிய இந்த பொருட்களைக் கொண்டே கல்லீரை சுத்தப்படுத்தலாம் - எப்படி?
எலுமிச்சை இஞ்சி டீடாக்ஸ் பானம்
காலையில் ஒரு டம்ளர் சூடான எலுமிச்சை மற்றும் இஞ்சி தண்ணீர் குடிப்பது கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிப்பதுடன், பலவகையான நன்மைகளைத் தருகிறது. இது செரிமானத்தை ஆதரிக்கவும், பித்த ஓட்டத்தை ஆதரிக்கவும் உதவுகிறது. இதை மெதுவாக குடிப்பதன் மூலம் லேசான உணர்வைப் பெறலாம்.
ஜீரா பீட்ரூட் அரிசி
பீட்ரூட் கல்லீரல் நொதிகளை ஆதரிக்கவும், நச்சுத்தன்மையை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இதை சீரகம் கலந்த அரிசியுடன் சேர்த்து சாப்பிடுவது செரிமானத்திற்கு ஏற்ற உணவாக அமைகிறது. மேலும் இது முற்றிலும் திருப்திகரமான உணர்வைத் தருகிறது. இது செய்வது எளிதானது மற்றும் அனைவரும் விரும்பக்கூடியதாகும். பீட்ரூட்டில் அதிகளவிலான நைட்ரேட்டுகள் உள்ளது. இது உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாறுகிறது. இந்த நைட்ரிக் ஆக்சைடு இரத்த நாளங்களை தளர்த்தவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: கொழுப்பு கல்லீரல் நோய் அபாயத்தைக் குறைக்க உங்க சமையலில் இந்த எண்ணெய்களை சேர்த்துக்கோங்க
Image Source: Freepik