Foods to avoid to protect your liver: உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாக கல்லீரல் அமைகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும், இரத்தத்தை வடிகட்டவும், ஆற்றலை சேமிப்பது, உணவை செரிமானம் அடையச் செய்யவும் உதவும் முக்கிய உறுப்பாகக் கருதப்படுகிறது. மேலும் இது பல முக்கியமான வேதிப்பொருள் செயல்பாடுகளை மேற்கொள்கிறது. இது போன்ற பல்வேறு முக்கிய உடல் செயல்பாடுகளுக்கு உதவும் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதை ஆரோக்கியமான முறையில் பாதுகாப்பது அவசியமாகக் கருதப்படுகிறது.
பெரும்பாலும் ஆல்கஹால் அருந்துவது கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது பலருக்கும் தெரிந்த உண்மையாகும். ஆனால், ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கும் கல்லீரல் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? சில சமயங்களில், சில ஆரோக்கியமற்ற உணவுகள் கூட கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். ஆம். நாம் சாப்பிடக்கூடிய ஆரோக்கியமற்ற உணவுகள் கல்லீரலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து அமெரிக்க டாக்டர் ஒருவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் (doctor.sethi) குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: கொழுப்பு கல்லீரல் நோயா அவதியா? கல்லீரல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க இந்த உணவுகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க
கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் உணவுகள்
அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளக்கூடிய சில உணவுகளை அடிக்கடி தினமும் சாப்பிடுவது கல்லீரலைப் பாதிக்கலாம். இதில் கல்லீரலுக்கு மோசமான உணவுகளைக் காண்போம்.
முக்கிய கட்டுரைகள்
பிரக்டோஸ்-கனமான உணவுகள்
பொதுவாக பிரக்டோஸ் என்பது பழங்களில் இயற்கையாகவே காணப்படும் ஒரு வகை சர்க்கரை ஆகும். ஆனால் இந்த பிரக்டோஸ் தான் நமக்கு பிரச்சனையாக அமைகிறது. குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் இனிப்பு பானங்கள் நம் உடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். அதன் படி, பிரக்டோஸ் அதிகமாக உள்ள உணவுகளில் மிட்டாய்கள், சோடாக்கள், பேக்கரி பொருட்கள் மற்றும் பல பேக் செய்யப்பட்ட சிற்றுண்டிகள் போன்றவை அடங்கும்.
அதே போல, ஒரே நேரத்தில் அதிகளவு பிரக்டோஸை சாப்பிடும் போது, கல்லீரல் அதை கொழுப்பாக மாற்றுகிறது. இதனால், கல்லீரல் செல்களுக்குள் கொழுப்பை உருவாக்கி, ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கு (NAFLD) வழிவகுக்கலாம். காலப்போக்கில், இந்த கொழுப்பு படிவானது வடுக்கள், வீக்கம் மற்றும் கல்லீரல் செயலிழப்பு ஏற்படும் அபாயத்தைக் கூட உண்டாக்கலாம்.
சர்க்கரை வகையான பிரக்டோஸ் இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். இதனால் உடல் இன்சுலினுக்கு நன்கு பதிலளிப்பதை நிறுத்தப்படுகிறது. மேலும் இது வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், அதிகப்படியான பிரக்டோஸ் காரணமாக ட்ரைகிளிசரைடு அளவு உயர்த்தப்பட்டு இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
தொழில்துறை விதை எண்ணெய்கள்
சோள எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் மற்றும் கனோலா எண்ணெய் போன்ற தொழில்துறை விதை எண்ணெய்கள் இன்று பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் உணவகங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய் வகைகளில் அதிகளவிலான ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. இது அதிகமாக இருப்பதால், உடலில் ஒமேகா-3களுடன் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது. இந்த ஏற்றத்தாழ்வு காரணமாக உடலில் நாள்பட்ட வீக்கம் ஏற்படுவதுடன், கல்லீரல் பாதிப்பு உட்பட பல நோய்களுக்கும் மூல காரணமாக அமைகிறது. இந்த தொழில்துறை விதை எண்ணெய்கள் மிகவும் நிலையற்றவையாகும்.
இந்த பதிவும் உதவலாம்: ரொம்ப நாளைக்கு கல்லீரல் எந்தப் பிரச்சனையும் இல்லாம இருக்கணுமா? அப்ப நீங்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ
இது சூடாக்கப்படும்போது எளிதில் ஆக்ஸிஜனேற்றம் அடைவதுடன், லிப்பிட் பெராக்சைடுகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் போன்ற தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை உருவாக்குகிறது. இந்த நச்சு துணைப் பொருள்கள் ஆனது கல்லீரல் செல்களை சேதப்படுத்துகிறது. மேலும் இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை அதிகரிப்பதுடன், வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த எண்ணெய்களை மீண்டும் மீண்டும் சூடாக்குவது, ஆழமாக வறுக்கும்போது பொதுவாகக் காணப்படுகிறது. ஆனால் இவை மிகவும் ஆபத்தானதாக அமைகிறது. மேலும் இன்டஸ்ட்ரியல் விதை எண்ணெய்களைப் பயன்படுத்துவது இதய நோய், நீரிழிவு, மூட்டுவலி மற்றும் கல்லீரலைக் கஷ்டப்படுத்தும் வளர்சிதை மாற்றப் பிரச்சினைகளுடன் தொடர்புடையதாகும்
பழச்சாறுகள்
பெரும்பாலும், ஆரோக்கியமான பானமாகவே பழச்சாறுகள் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அடிப்படையில் இது முழு பழத்திலும் காணப்படும் நார்ச்சத்து இல்லாத திரவ சர்க்கரையாகும். இந்த பழச்சாற்றைத் தொடர்ந்து குடிப்பதன் காரணமாக கல்லீரலில் பிரக்டோஸ் நிரப்பப்படுகிறது. இது கொழுப்பு படிதல் மற்றும் கல்லீரல் திரிபுக்கு வழிவகுக்கலாம்.
முழுப் பழத்தையும் போலல்லாமல், சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறு அருந்துவது இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை விரைவாக உயர்த்துகிறது. இவை கல்லீரலில் கொழுப்பு சேமிப்பை ஊக்குவிப்பதுடன், கொழுப்பு கல்லீரல் நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும் பல பழச்சாறுகள் கூடுதல் சர்க்கரைகள் உள்ளது. இவை சிக்கலை அதிகரிக்கலாம். எனவே பழச்சாறு சாப்பிட விரும்புபவர்கள் சர்க்கரை சேர்க்காத வீட்டிலேயே தயார் செய்து அருந்தலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: இந்த உணவுகள் மதுவை காட்டிலும் ஆபத்து.? கல்லீரல் போயிடும்..
Image Source: Freepik