Human metapneumovirus in india: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக சீனாவிலிருந்து பரவிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் சீனாவிலிருந்து வரும் அறிக்கைகளில் பெரும்பாலானோர் சுவாச நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. குறிப்பாக, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே தொற்றுநோய்களின் எழுச்சியை ஏற்படுத்திய இந்த வைரஸ் ஆனது மனித மெட்டாப்நியூமோவைரஸ் (Human metapneumovirus) என்று கூறப்படுகிறது.
அதிர்ச்சியூட்டும் தகவலாக, இந்த ஹெச்எம்பிவி வைரஸ் இந்தியாவில் பெங்களூருவில் முதல் வழக்கு பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீனாவில் இந்த வைரஸ் தொற்று வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இதன் முதல் வழக்கு கண்டறியப்பட்டுள்ளது. தி ஹெல்த் சைட்-ன் படி, குழந்தை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளதாகவும், வழக்கமான இரத்த பரிசோதனையின் போது வைரஸ் உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், குழந்தை சீனாவுக்கு பயணம் செய்யவில்லை எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: ஆஸ்திரேலியா ஆய்வகத்தில் இருந்து காணமால் போன கொடிய வைரஸ் மாதிரிகள்.. COVID ஐ விட 100 மடங்கு ஆபத்தானது!
HMPV வைரஸ் என்றால் என்ன?
ஹெச்எம்பிவி வைரஸ் ஆனது மனிதர்களுக்கு ஏற்படும் ஜலதோஷம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக் கூடியதாகும். இந்த வைரஸால் குழந்தைகள், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் போன்றோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான HMPV வழக்குகள் லேசான இயல்புடையவை என்று ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.
HMPV வைரஸ் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்
ஹெல்த் சர்வீசஸ் டைரக்டர் ஜெனரல் (டிஜிஹெச்எஸ்) டாக்டர் அதுல் கோயல் நியூஸ் 18 இடம் கூறுகையில், “இந்த HMPV வைரஸ் அல்லது மனித மெட்டாப்நியூமோவைரஸ் மற்ற சுவாச வைரஸைப் போன்றது. இது ஜலதோஷத்தை ஏற்படுத்துவதாகவும், சிறியவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
எனவே, ஒருவருக்கு இருமல் மற்றும் சளி இருப்பின், தொற்று பரவாமல் இருக்க மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், நோய்த்தொற்றுகளைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் பொது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். கூடுதலாக, மக்கள் சுவாச நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும், சளி மற்றும் காய்ச்சலுக்கு மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: HMPV: மீண்டும் ஒரு புதிய வைரஸ்.! நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.!
ஒன் இந்தியா தளத்தின் படி, HMPV வைரஸ் பற்றிய கவலைகளுக்கு மத்தியில், கர்நாடகாவில் உள்ள சுகாதாரத் துறை, அதன் குடியிருப்பாளர்களின் நல்வாழ்வை உறுதிசெய்ய தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் (IDSP) திட்ட இயக்குனரான டாக்டர் அன்சார் அகமது, குளிர்கால மாதங்களில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் வைரஸ் காய்ச்சல் மற்றும் சளி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பிட்டத்தை ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, அரசு தடுப்பு வழிகாட்டுதல்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், காய்ச்சல், கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் உள்ளிட்ட குளிர்கால நோய்கள் அதிகரிப்பதற்கான நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், HMPV நடவடிக்கைகளுக்கான தடுப்பு நடவடிக்கைகளில் சுவாச சுகாதாரத்தை கடைபிடிப்பது, நெரிசலான இடங்களில் இருந்து விலகி இருப்பது, சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது சானிடைசரைக் கொண்டு வழக்கமான கைகளை கழுவுதல் போன்றவற்றைக் கையாள வேண்டும் எனக் கூறப்படுகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: HMPV Symptoms: HMPV வைரஸ் தொற்று பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது?
Image Source: Freepik