ஒரு சிகரெட் பிடித்தால் சராசரியாக உங்கள் ஆயுட்காலத்தில் இருந்து 20 நிமிடங்கள் குறையும், இதில் ஆண்களை விட பெண்கள் அதிக நேரத்தை இழக்கிறார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் (யுசிஎல்) ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வில், பெண்கள் சராசரியாக ஒரு சிகரெட்டிற்கு 22 நிமிடங்களையும், ஆண்கள் 17 நிமிடங்களையும் இழக்கிறார்கள் என கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பான முந்தைய மதிப்பீடுகளின்படி, ஒவ்வொரு சிகரெட்டும் சுமார் 11 நிமிடங்கள் ஆயுளை குறைக்கும் என கண்டறியப்பட்டது. ஆனால் தற்போதைய மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் சுகாதார தரவுகளின் அடிப்படையின்படி, சமீபத்திய ஆய்வில், புகைப்பிடிப்பதால் ஒரு சிகரெட்டுக்கு சராசரியாக 20 நிமிடங்கள் ஒருவரின் ஆயுட்காலம் குறையும் என கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பேகேஜ் உணவுகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கும்?
சிகரெட் பிடித்தால் ஆயுட்காலத்தில் 20 நிமிடங்கள் குறையும்
இங்கிலாந்தின் உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையால் நியமிக்கப்பட்ட ஆராய்ச்சி, புகைபிடிப்பதால் ஏற்படும் சேதங்கள் குறித்த ஒட்டுமொத்த தகவலையும் எடுத்துக்காட்டுகிறது. இதன்மூலம் ஒருவர் எவ்வளவு விரைவாக புகைப்பிடிப்பதை கைவிடுகிறாரோ அவ்வளவு அதிகமாக வாழலாம் எனவும் ஆரோக்கியமாக வாழலாம் என்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.
ஒருவர் எவ்வளவு வேகமாக சிகரெட்டை கைவிடுகிறாரோ அவ்வளவு நாள் ஆரோக்கியமாக வாழ முடியும். சராசரியாக நீங்கள் ஒரு நாளைக்கு 5 சிகரெட் பிடிக்கிறீர்கள் என்று எடுத்துக் கொண்டால் அதை கைவிடும்பட்சத்தில் ஒரு மணிநேரம் 40 நிமிடங்கள் உங்களால் உங்கள் வாழ்நாளில் கூடுதலாக வாழ முடியும். இப்படி மாதங்கள் அளவில் கணக்கெடுத்தால் நாட்கள் கணக்கில் உங்களால் கூடுதலாக வாழ முடியும்.
சிகரெட் பிடித்தால் ஏற்படும் பாதிப்புகள்
UCL ஆல்கஹால் மற்றும் புகையிலை ஆராய்ச்சி குழுவின் முதன்மை ஆராய்ச்சியின் சக டாக்டர் சாரா ஜாக்சன் இதுகுறித்து கூறுகையில், ஒரு நபர் புகைபிடிப்பதை எவ்வளவு சீக்கிரம் நிறுத்துகிறாரோ, அவ்வளவு நீண்ட காலம் வாழ்கிறார். எந்த வயதிலும் கைவிடுவது ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தும், மேலும் பலன்கள் உடனடியாகத் தொடங்குகிம் என குறிப்பிட்டார்.
மேலும் இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையின் இறுதிக் காலத்தைக் குறைப்பதற்குப் பதிலாக, புகைபிடித்தல் வாழ்க்கையின் நடுத்தர காலத்தையே பாதிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்கூட்டியே வயதான பண்புகளையும் அடைகின்றனர்.
UK சுகாதார அதிகாரிகள், இந்த ஆய்வின் மூலம் புகைப்பிடிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர், NHS Quit Smoking app மற்றும் Personal Quit Plan போன்ற ஆப்ளை பயன்படுத்தும்படியும், இது புகைபிடிப்பதை வெற்றிகரமாக கைவிட உதவும் ஆலோசனைகளையும் ஆதரவையும் வழங்கும் என அறிவித்துள்ளது.
அதிகம் படித்தவை: வளர்சிதை மாற்ற நோய்களை குறிக்கும் 5 ஆபத்தான அறிகுறிகள்?
எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஒருவரின் ஆயுளை நீடிக்க முடியாது, விலை மதிப்பற்றது மனித வாழ்வு என்பது. இதை ஏன் அற்ப சந்தோஷத்திற்காக வீணாக்க வேண்டும். புகை பிடிப்பது உங்களின் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படும். உங்கள் ஆரோக்கியத்தையும், உங்கள் குடும்பத்தாரையும் குறித்து சற்று சிந்தித்து புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீண்டு வாருங்கள், மனின் நினைத்தால் முடியாது என்பதே இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
pic courtesy: freepik