Organ Donation: தானங்களில் தன்னலமற்ற தானமாக விளங்கும் உடல் உறுப்பு தானம் மிக அற்புதமான ஒன்றாகும். ஒருவர் தன் முழு மனதுடன் தன்னுடைய உடல் உறுப்புகளை, செயலிழந்த உறுப்புகளைக் கொண்ட நபருக்கு உறுப்பு தானம் செய்வதாகும். இதனை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் நாள் உடல் உறுப்பு தான தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உடல் உறுப்பு தானம் குறித்த தவறான கருத்துகளை மக்களுக்கு உணர்த்தவும் கடைபிடிக்கப்படுகிறது.

உடல் உறுப்பு தானம்
உடல் உறுப்பு தானம் செய்ய பெரும்பாலானோர் விரும்பினாலும், அது குறித்த தனிப்பட்ட நடைமுறைகள் பற்றிய விவரங்கள் பலருக்கும் தெரியாத ஒன்றாகும். உடல் உறுப்புகளைத் தானம் செய்யும் நபர்கள் சில முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்வது அவசியம் அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.
உடல் உறுப்பு தானத்தை இரண்டு வழிகளில் செய்யலாம். ஒன்று உயிருடன் இருக்கும் போது செய்யும் தானம், மற்றொன்று இறந்த பின்பு செய்யும் தானம்.
உயிருள்ள ஒரு நபர், தனது உடல் உறுப்புகளில் ஒன்றைத் தேவைப்படும் நபருக்கு தானமாக வழங்குவதைக் குறிக்கிறது. ஒருவர் இறந்த பிறகு உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் அல்லது மூளைச்சாவு என அறிவிக்கப்பட்ட ஒரு நபரிடம் இருந்து தானம் பெறுதலை இறந்தவுடன் செய்யும் உடல் உறுப்பு தானம் எனப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Tooth Decay: தீரா பல் வலியை தடுக்க உகந்த வைத்தியம்!
உறுப்பு தானம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
- ஒரு உடல் உறுப்பு மற்றும் திசு தானம் அளிப்பவர்கள் 8 உயிர்களை காப்பாற்றுவதுடன், 50-க்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும். இதன் மூலம், சேதமடைந்த திசுக்கள், கண்பார்வை மற்றும் முக்கிய செயல்பாடுகளை மீட்டெடுக்கலாம்.
- நன்கொடையாளர் முன்னரே உடல் உறுப்பு தானம் செய்வதற்கான உரிமம் ஒன்றை பெற்றிருக்க வேண்டும். இந்த நன்கொடையாளர் அட்டை நீங்கள் உறுப்பு தானம் செய்ய விரும்புவதாகக் குறிப்படுவதாகும். உறுப்பு தானம் செய்பவர்கள், உயிர் தானம் மூலம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும்.
- வயது, மருத்துவ வரலாறு என எதையும் பொருட்படுத்தாமல், யார் வேண்டுமானாலும் சாத்தியமான நன்கொடையாளராக இருக்கலாம். இதில், நன்கொடை நிபுணர்கள் ஒருவரின் மருத்துவ வரலாற்றைப் பகுப்பாய்வு செய்து, அவர் நன்கொடை வழங்க முடியுமா என்பதைத் தீர்மானிக்க முடியும்.
- இறந்த பின் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்திற்கு எந்த செலவும் இல்லை. உறுப்பு தானத்துடன் தொடர்புடைய செலவுகள், பெறுநரின் காப்பீட்டால் ஈடு செய்யப்படும்.
- ஒருவர் உயிருடன் இருக்கும் போது தானம் செய்ய விரும்பினால், இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று, கல்லீரலின் இரண்டு மடல்களில் ஒன்று, கணையம், குடல், நுரையீரல் ஆகியவற்றின் ஒரு பகுதி போன்றவற்றை தானம் செய்யலாம்.
- ஒருவர் இறந்த பிறகு கல்லீரல், நுரையீரல்கள், சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், இதயம், குடல்கள் போன்றவற்றைத் தானம் செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Boost Brain Power: மூளை ஆற்றலை அதிகரிப்பது எப்படி? சிம்பிள் டிப்ஸ்
Image Source: Freepik