Stomach Health: வயிறு ஆரோக்கியமாக இருக்க இதை கட்டாயம் செய்யவும்!

  • SHARE
  • FOLLOW
Stomach Health: வயிறு ஆரோக்கியமாக இருக்க இதை கட்டாயம் செய்யவும்!

வயிறை சுத்தப்படுத்தும் உணவுகள்

பெரும்பாலான உடல்நலப் பிரச்சனைகள் வயிற்றில் இருந்து தொடங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். வயிறு ஆரோக்கியமாக இருந்தால், நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என அர்த்தம். வயிற்றின் ஆரோக்கியம் பராமரிக்கப்படாவிட்டாலே உடல்நல சிக்கல் தொடங்கிவிடுகிறது.

இதையும் படிங்க: மலச்சிக்கல் இத்தனை பாதிப்பை ஏற்படுத்துமா?

உடலில் ஏற்படும் பிரச்சனைகள்

உடலில் ஏற்படும் எந்த பிரச்சனையையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதனால் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட வாய்ப்புண்டு. வயிற்று பிரச்சனையால் பெருங்குடல் புற்றுநோய், மூல நோய், பாலிப்ஸ், தொற்று, செலியாக் நோய், கிரோன் நோய், அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி என பல கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரும். வயிற்றை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பல வழிகள் உள்ளன.

சோம்பு

சோம்பு வாயை புத்துணர்ச்சியாக வைக்க பெருமளவு உதவும். கடுமையான வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து விடுபட சோம்பு உதவுகிறது. 100 கிராம் சோம்பில் 40 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது உணவை ஜீரணிக்க உதவுகிறது. செரிமானக் கோளாறால் அவதிப்படுபவர்கள் உணவுக்குப் பின் சோம்பை சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும். மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்கிறது.

சோம்பு சாப்பிட்டால், தொப்பை கொழுப்பு கரைந்து, வளர்சிதை மாற்றம் மேம்படும். சோம்பு டீ செய்தும் குடிக்கலாம். சோம்பு விதைகளை எடுக்காமல் 5 நிமிடம் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பிறகு இந்த சோம்பு தண்ணீரை வடிகட்டவும். இந்த தண்ணீரை காலையில் குடிப்பது நல்லது. விருப்பமுள்ளவர்கள் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.

சீரகம்

சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்று பிரச்சனைகள் தீரும். சீரக நீரை உட்கொண்டால் மலச்சிக்கல், குமட்டல் போன்ற நோய்களில் இருந்து விடுபடலாம். இதில் உள்ள கூறுகள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. நீங்கள் செரிமான பிரச்சனையால் அவதிப்பட்டால் கண்டிப்பாக இந்த பானத்தை காலையில் குடிக்க வேண்டும். இதில் கார்போஹைட்ரேட், குளுக்கோஸ் மற்றும் கொழுப்பை உடைக்கும் என்சைம்கள் உள்ளன. இவை வயிற்றுப் பிரச்சனைகளை எளிதில் கட்டுப்படுத்தும்.

பெருங்காயம்

உங்கள் உணவில் பெங்காயத்தை சேர்த்துக் கொள்வது கூடுதல் சிறப்பு. பெங்காயம் செரிமானக் கோளாறுகளை சரி செய்ய பெருமளவு உதவும். பெங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அஜீரணம், நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை தடுக்கவும் இது உதவும், இதனுடன் சிறிது குங்கமப்பூ சேர்த்து சாப்பிடுவது மேலும் நல்லது. பெங்காயத்தை ஒரு கிளாஸ் மோரில் போட்டு குடித்தால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஏலக்காய்

இனிப்பு மற்றும் வேறு சில உணவுகளில் சுவைக்காக ஏலக்காய் பயன்படுத்துகிறோம். ஏலக்காய் வயிற்று ஆரோக்கியத்திற்கு நல்லது. சாதம் சாப்பிட்ட பின் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டால் போதும், உணவு முழுவதுமாக ஜீரணமாகும். இதன் மருத்துவ குணம் பாக்டீரியாவை எதிர்த்து போராடுகிறது. வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துகிறது. ஏலக்காய் அல்சரை குணப்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: உணர்திறன் வாய்ந்த பற்களை பராமரிப்பதற்கான 5 வழிகள் இங்கே…

இந்த பதிவு பெருமளவு உதவியாக இருந்தாலும், பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்து உடனே மருத்துவரை அணுகுவது மிக நல்லது.

image source: freepik

Read Next

Organ Donation: உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை எப்படி அதிகரிப்பது?

Disclaimer

குறிச்சொற்கள்