$
வாழ்க்கையில் ஒருவருக்கு எத்தனை முறை இரண்டாவது வாய்ப்பு கிடைக்கிறது? எத்தனை ஆர்வத்துடன் வாழ்க்கையை பற்றி பேசினாலும், ஏதாவது ஒரு ரூபத்தில் மரணம் நிகழ்கிறது. ஆனால் இப்போதைய மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் மரணம் கடந்த இரண்டாவது வாய்ப்புகள் சாத்தியமாக்கியுள்ளன. இது உடல் உறுப்பு தானம் மூலம் நிகழ்கிறது. ஆனால் இது குறித்த விழிப்புணர்வு மக்கள் இடையே போதவில்லை. உடல் உறுப்பு தானம் அறியானை மற்றும் தவறான தகவல்களே இதற்கு காரணமாக உள்ளன. குறிப்பாக இந்தியாவில் உடக் உறுப்பு தானம் குறித்த தெளிவு போதவில்லை.
புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் உறுப்பு தானம் செய்ய யாரும் முன்வராததால், ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் உயிரை இழக்கின்றனர். இறந்தவர்களின் உடல் உறுப்பு தானம் பட்டியலில் இந்தியா மிகக் குறைந்த இடத்தில் உள்ளது. அதாவது மில்லியன் மக்கள்தொகையில் வெறும் 0.34 சதவீதம் தான் தானம் செய்யப்படுகிறது. இதற்கு விழிப்புணர்வு மற்றும் உள்கட்டமைப்பு இல்லாமை, தவறான எண்ணங்கள், அறியாமை மற்றும் குடும்ப சம்மதமின்மை ஆகியவை முக்கிய காரணமாக இருக்கிறது.
இதையும் படிங்க: Organ Donation: "இறந்த பின்பும் வாழலாம்" உடல் உறுப்பு தானத்தின் வகைகள், நன்மைகள் மற்றும் வயது வரம்பு
உறுப்பு தானம் தொடர்பான தவறான தகவல்களை சமாளிப்பது எப்படி?

உடல் உறுப்பு தானம் குறித்து பல கட்டுக்கதைகளும், தவறான தகவல்களும் பரவி வருகின்றன. உடல் உறுப்பு தானம் பற்றிய போதிய விவரம் தெரிந்தவர்கள், இதனை புறக்கணிக்கிறார்கள். இருப்பினும் சிலர் இந்த தவறான தகவல்களின் சுழற்சியில் சிக்கிக் கொள்கிறார்கள். உறுப்பு தானம் ஒருவருக்கு வாழ இரண்டாவது வாய்ப்பை அளிக்கும் என்பதை அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
இதில் நிதி பரிமாற்றம் இல்லை
உறுப்பு தானத்திற்கு பதிவு செய்யும் போது மிக முக்கியமான விஷயம், இது தன்னார்வ தானம் என்பதை அறிந்து புரிந்துகொள்வது ஆகும். மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுச் சட்டம், 1994-ன்படி உறுப்பு தானம் தொடர்பான எந்தவொரு நிதி பரிவர்த்தனைகளும் சட்டவிரோதமாகக் கருதப்படுகின்றன. உறுப்புகளை வாங்குவது அல்லது விற்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதில் நிதி பரிமாற்றத்திற்கு இடமே இல்லை.
கடைசி நிமிடத்தில் மறுப்பு
உடல் உறுப்பு தானம் செய்வதால் உடல் தோற்றம் மாறி, இறுதிச் சடங்குகளின் போது சிரமம் ஏற்படும் என குடும்பத்தினர் கவலைப்படுகின்றனர். மேலும், சில சமயங்களில் உறுப்பு தானம் செய்வதற்கு உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளது பற்றி அவர்களது குடும்பத்திற்கு தெரிவதில்லை. இதனால் உறுப்பு தானத்திற்கு அவர்கள் சம்மதிக்காமல் போகலாம். ஆகையால் உடல் உறுப்பு தானம் குறித்து குடும்பத்தாருடன் பேசுவது நல்லது. நன்கொடையாளரின் உடல் எப்போதும் மிகுந்த மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படுகிறது. குடும்பத்தாரின் விருப்பப்படி இறுதிச் சடங்குகள் செய்யலாம்.
உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு

விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றியுள்ளது. இணையம் உலகெங்கிலும் உள்ள மக்களை இணைத்துள்ளது மற்றும் கவனம் தேவைப்படும் பல காரணங்களை அவர்களுக்கு உணர்த்தியுள்ளது. இன்று மக்கள் உறுப்பு தானம் பற்றிய யோசனைக்கு வருகிறார்கள். பலர் இதைப் பற்றி இன்னும் தெரியாமல் இருக்கிறார்கள். உறுப்பு தானம் மூலம் இறந்தவரை வேறு ஒரு ரூபத்தில் நீங்கள் மீண்டும் கொண்டு வருகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இன்று, இளம் தன்னார்வலர்கள் அமைப்பு போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தங்கள் உறுப்பு தான முயற்சிகள் மூலம், சாத்தியமான நன்கொடையாளர்களுடன் மக்கள் தொடர்பு கொள்ள உதவுகின்றன. YVO இன் சச்சி உறுப்பு தானம் தளம் வெற்றிகரமாக பல நன்கொடைகளை எளிதாக்கியுள்ளது மற்றும் இந்தியாவில் அதிகமான நன்கொடையாளர்கள் உறுப்புகளை உறுதியளிக்கும் நோக்கில் விழிப்புணர்வு மற்றும் உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதில் தீவிரமாக செயல்படுகிறது.
Image Source: Freepik