Sleeping Disorder: தூக்கக் கோளாறுகளின் வகைகள், காரணங்கள் மற்றும் அறிகுறிகள்

  • SHARE
  • FOLLOW
Sleeping Disorder: தூக்கக் கோளாறுகளின் வகைகள், காரணங்கள் மற்றும் அறிகுறிகள்


Sleeping Disorder: மனிதனின் அன்றாட வாழ்வில் மிக முக்கியமானதாக இருப்பதில் தூக்கமும் ஒன்றாகும். நடைமுறை வாழ்க்கையில் நாம் வேலை செய்யும் சூழல் போன்ற பல்வேறு காரணங்களால் தூக்கத்தின் நிலைமைகள் பாதிக்கப்படுவதாக உள்ளது. தூக்கத்தின் அளவு, தரம் மற்றும் நேரம் ஆகியவற்றைப் பொறுத்து தூக்க கோளாறுகள் ஏற்படும். இந்த தூக்கக் கோளாறு பிரச்சனை உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் என இரண்டையும் பாதிப்பதாக அமைகிறது. இந்த தூக்கக் கோளாறு பிரச்சனைகள் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இதில் தூக்கக் கோளாறு ஏற்படுவதற்கான காரணங்களையும், அதன் அறிகுறிகளையும் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: நல்ல உறக்கம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்

தூக்கக் கோளாறுகளின் வகைகள்

தூக்கக் கோளாறுகள் பல்வேறு வகைகளில் காணப்படுகிறது. இது உடல் அமைப்பை பாதிக்கக் கூடியதாக அமையலாம்.

இயக்கக் கோளாறுகள்

உடல் அசைவு அல்லது நகர்வதற்கான தூண்டுதல், தூக்கத்தைக் கடினமாக்குவதாக அமைகிறது.

மிகை தூக்கமின்மை

மிகை தூக்கமின்மை என்பது இரவில் நீண்ட நேரமாக தூங்காமல் இருப்பதைக் குறிக்கிறது. இதனால், பகலில் விழிப்புடன் இருப்பதில் சிக்கலை ஏற்படுத்துவதுடன், உடல் சோர்வை ஏற்படுத்தும்.

சுவாசக் கோளாறுகள்

தூங்கும் போது ஏற்படும் சில சுவாசக் கோளாறுகள் காரணமாக தூக்கம் தடைபடுகிறது. இது தூக்கமின்மையை ஏற்படுத்தும் தூக்கக் கோளாறு ஆகும்.

தூக்கம் விழிப்பு கோளாறுகள்

இந்த வகை பிரச்சனையில் சரியான நேரத்தில் தூங்குவதையும், சரியான நேரத்தில் எழுந்திருப்பதையும் கடினமாக்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Tooth Decay: தீரா பல் வலியை தடுக்க உகந்த வைத்தியம்!

தூக்கக் கோளாறுகள் ஏற்படுவதற்கான காரணம்

உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் தூக்கக் கோளாறுகளை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைகிறது.

  • மனக்கவலை அல்லது மனச்சோர்வு போன்றவற்றால் தூக்கக் கோளாறு ஏற்படும்.
  • இரவு நேரத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தூக்கக் கோளாறு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
  • உறங்கும் முன் ஆல்கஹால் அல்லது காஃபின் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் தூக்கக் கோளாறுகள் ஏற்படலாம்.

தூக்கக் கோளாறுகளின் அறிகுறிகள்

பொதுவாக தூக்கக் கோளாறுகள், அதன் அறிகுறிகளின் வகையைப் பொறுத்து மாறுபடும்.

  • தூங்குவதில் சிரமம் ஏற்படுவது அல்லது தொடர் தூக்கத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது.
  • இரவு முழுவதும் தூங்குவதில் சிக்கல்கள் ஏற்படுவதும் தூக்கக் கோளாறின் காரணம் ஆகும்.
  • நள்ளிரவில் அடிக்கடி எழுந்திருப்பதால் தூங்க முடியாத சூழ்நிலை உண்டாகும்.

இரவில் போதுமான தூக்கம் இல்லாததால், பகல் நேரத்தில் அனுபவிக்கும் அறிகுறிகள்

  • இரவு முழுவதும் தூக்கம் பெறாதவர்கள், பகல்நேரத்தில் தூங்குவதற்கான நிலை ஏற்படும்.
  • மேலும், வேலை அல்லது பிற நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Back Pain Relief: முதுகு வலி வரக் காரணமும், தீர்வும்.. சிம்பிள் டிப்ஸ்

Image Source: Freepik

Read Next

Brain Aneurysm: மூளை அனீரிசம் என்றால் என்ன? அதன் அறிகுறிகள், காரணங்கள், மற்றும் சிகிச்சை முறைகள் என்ன?

Disclaimer

குறிச்சொற்கள்