$
உலகளவில் ஏற்படும் புற்றுநோய் இறப்புகளில் 25 சதவீதம் நுரையீரல் புற்றுநோயால் ஏற்படுகிறது. அதனால்தான் இது மிகவும் ஆபத்தான புற்றுநோய் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
நுரையீரல் புற்றுநோய் நம் நாட்டில் மிகவும் பொதுவான ஐந்து புற்றுநோய்களில் ஒன்றாகும். உலகளவில் ஏற்படும் புற்றுநோய் இறப்புகளில் 25 சதவீதம் நுரையீரல் புற்றுநோயால் ஏற்படுகிறது. அதனால்தான் இது மிகவும் ஆபத்தான புற்றுநோய் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த புற்றுநோய்க்கான சரியான காரணங்களை சொல்ல முடியாது. இதற்கு புகைபிடித்தல் முக்கிய காரணம் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
புகை பிடிக்கும் பழக்கம் இல்லாததால், இந்த புற்றுநோய் வராது என்று நிம்மதியாக இருக்க முடியாது. புகைபிடிக்காதவர்களுக்கும் இந்த புற்றுநோய் வரும். நோயெதிர்ப்புத் தாக்குதல், எக்ஸ்-கதிர்கள், சுற்றுச்சூழலில் ஏற்படும் கதிர்வீச்சு மற்றும் அரிதாக மரபியல் ஆகியவற்றால் ஏற்படும் நோய்களும் இந்த புற்றுநோயை ஏற்படுத்தும்.
நுரையீரல் புற்றுநோய் என்றால் என்ன?
நுரையீரல் புற்றுநோய் என்பது உங்கள் நுரையீரலில் கட்டுப்பாடற்ற செல் பிரிவினால் ஏற்படும் ஒரு நோய். புற்றுநோய் பொதுவாக மூச்சுக்குழாய்களின் செல்கள், மூச்சுக்குழாய்கள் போன்ற நுரையீரலின் பாகங்களில் தொடங்குகிறது. நுரையீரலின் எபிடெலியல் செல்களில் புற்றுநோய் முதலில் தோன்றினால், அது 'முதன்மை நுரையீரல் புற்றுநோய்' என்று அழைக்கப்படுகிறது.

உடலின் மற்ற பாகங்களில் இருந்து நுரையீரலுக்கு புற்றுநோய் பரவும் போது, அது இரண்டாம் நிலை நுரையீரல் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக, மார்பகப் புற்றுநோய் பல சமயங்களில் நுரையீரலுக்கு பரவுவதை குறிப்பிடலாம்.
முதன்மை நுரையீரல் புற்றுநோயில் இரண்டு வகைகள் உள்ளன. சிறிய செல் நுரையீரல் புற்றுநோய் (SCLC), சிறிய அல்லாத உயிரணு நுரையீரல் புற்றுநோய் (NLCLC) என்பதாகும்.
சிறிய செல் நுரையீரல் புற்றுநோய் (SCLC):
புகைப்பிடிப்பவர்களுக்கு இது மிகவும் பொதுவானது. நுரையீரல் புற்றுநோய்களில் 14 சதவிகிதம் இந்த வகையைச் சார்ந்ததாகும். இந்த புற்றுநோய் வேகமாக பரவுக்கூடியது. இது வேகமாக, நிணநீர் கணுக்கள், எலும்புகள், மூளை, அட்ரீனல் சுரப்பி மற்றும் கல்லீரல் ஆகியவற்றிற்கு பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சிறிய அல்லாத செல் நுரையீரல் புற்றுநோய் (NLCLC):
நுரையீரல் புற்றுநோய்களில் 80 முதல் 85 சதவீதம் சிறிய உயிரணு நுரையீரல் புற்றுநோயாகும். இது முக்கியமாக அடினோகார்சினோமா, ஸ்குவாமஸ் செல் கார்சினோமா, பெரிய செல் கார்சினோமா ஆகியவற்றால் ஏற்படுகிறது.
என்னென்ன அறிகுறிகள் தோன்றும்?
கடுமையான இருமல், நெஞ்சு வலி, சுவாசிப்பதில் சிரமம், இருமல் இரத்தம், சோர்வு, விவரிக்க முடியாத எடை இழப்பு, எலும்பு வலி, விரிந்த விரல் நகங்கள், காய்ச்சல், உணவின் சுவை இழப்பு. இந்த அறிகுறிகளில் ஏதேனும் தோன்றினால் மருத்துவரை அணுகி முறையான பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை பெற வேண்டும்.