Doctor Verified

Brain Aneurysm: மூளை அனீரிசம் என்றால் என்ன? அதன் அறிகுறிகள், காரணங்கள், மற்றும் சிகிச்சை முறைகள் என்ன?

  • SHARE
  • FOLLOW
Brain Aneurysm: மூளை அனீரிசம் என்றால் என்ன? அதன் அறிகுறிகள், காரணங்கள், மற்றும் சிகிச்சை முறைகள் என்ன?

மூளை அனீரிசத்தை எப்படி கண்டறிவது

ஒரு நபருக்கு மூளை அனீரிசம் இருப்பதை ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவரால் இமேஜிங் சோதனை செய்து கண்டறிய உத்தரவிடப்படுகிறது. கம்ப்யூட்டட் டோமோகிராபி, காந்த அதிர்வு இமேஜிங், காந்த அதிர்வு ஆஞ்சியோகிராபி, உள்ளிட்ட சில சோதனைகளின் மூலம் மூளையில் உள்ள அனீரிசத்தின் வடிவம், அளவு மற்றும் அதன் இடத்தைக் கண்டறியலாம். இருப்பினும், இந்த ஆரம்ப சோதனையில் மூளை அனீரிசம் கண்டறிய முடியாமல் போகலாம். இந்த நேரங்களில் மருத்துவர் லம்பர் பஞ்சரை பரிந்துரைக்கலாம். இது செரிப்ரோஸ்பைனல் திரவத்தில் இரத்தம் உள்ளதா இல்லையா என்பதை ஆய்வில் வெளிப்படுத்தும்.

மூளை அனீரிசத்திற்கான அறிகுறிகள்

மூளை அனீரிசம் இருப்பதற்கான முக்கிய அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம். இதன் முக்கிய அம்சமாக, கடுமையான தலைவலி ஏற்படும். மேலும், இது தொடர்பாக வாந்தி, வலிப்பு ஏற்படுதல், மூட்டு பலவீனமடைவது அல்லது நரம்பியல் சிக்கல்கள் ஏற்படலாம். சில சமயங்களில் அனீரிசம்கள் மூளை சுருக்கத்தை ஏற்படுத்தி, நரம்பியல் சார்ந்த சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Liver Healthy Tips: கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்களுக்கான டிப்ஸ்!

மூளை அனீரிசம் ஏற்படுவதற்கான காரணங்கள்

மூளை அனீரிசம் உண்டாவதற்கு சில குறிப்பிட்ட காரணிகள் உள்ளன. அதிர்ச்சி காரணமாக மூளையில் ஏற்படும் பாதிப்புகள், உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் தொற்று இருப்பது, புகைபிடித்தல், பெருந்தமனி தடிப்பு அதாவது இரத்த நாளங்களின் சுவர்களில் கொழுப்பு குவிந்து இருப்பது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.

மூளை அனீரிசத்தால் யார் பாதிக்கப்படுவார்கள்

  • இந்த மூளை அனீரிசத்தால் வயதான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, 40 முதல் 60 வயது வரை உள்ள நபர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
  • மார்ஃபேர் சின்ட்ரோம் என்ற இணைப்பு திசு தொடர்பான மரபணு நிலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மூளை அனீரிசத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
  • சிறுநீரக பாலிசிஸ்டிக் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மூளை அனீரிசம் நோயால் பாதிக்கப்படுவர்.
  • ஃபைப்ரோமஸ்குலர் டிஸ்ப்ளாசியா அல்லது தமனி சிதைவு, பெருமூளை தமனி அழற்சி போன்ற அசாதாரண இரத்த நாளங்களின் நிலையைக் கொண்டவர்கள் மூளை அனீரிசத்தால் பாதிக்கப்படுவர்.

மூளை அனீரிசத்திலிருந்து எப்படி தப்பிப்பது

ஒரு நபரின் வாழ்நாள் முழுவதும் சிதைவடையாத மூளை அனீரிசிம்கள் கண்டறியப்படாமல் இருக்கும். அனீரிசத்தின் அளவு, இடம் மற்றும் பிற கூறுகளின் அடிப்படையிலேயே இந்த சிதைவின் ஆபத்து இருக்கும். இந்த அனீரிசம் வெடித்து, மூளையைச் சுற்றியுள்ள பகுதியில் இரத்தக்கசிவு ஏற்படுமாயின் அது பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது.

எனவே சிதைந்த மூளை அனீரிசத்திற்கு அவசர மருத்துவ பராமரிப்பு தேவைப்படுகிறது. இந்த சிதைந்த அனீரிசத்திற்கு சிகிச்சை ஏதும் அளிக்கப்படாத போது இறப்பு ஏற்படலாம் அல்லது உடல் இயலாத நிலையை அடைந்து விடுவதற்கான ஆபத்து ஏற்படுகிறது. இந்த சிதைந்த மூளை அனீரிசம் ஏற்பட்டவர்களுள் சுமார் 75 சதவீதம் அளவிலான நோயாளிகள் 24 மணி நேரத்திற்கும் மேலாக உயிர் வாழ்கின்றனர். இருப்பினும், இந்த உயிர் பிழைத்தவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் ஆறு மாதங்களுக்குள்ளேயே அபாயகரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

இந்த பதிவும் உதவலாம்: Back Pain Relief: முதுகு வலி வரக் காரணமும், தீர்வும்.. சிம்பிள் டிப்ஸ்

சிதைந்த மூளை அனீரிசத்தின் சிக்கல்கள்

  • அனீரிசம் சிதையும் போது அல்லது வெடிக்கும் போது மூளைக்குள் இரத்தம் பாய்கிறது. இதில் இரத்தம் தேங்குவதால் மூளை திசு மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தி எரிச்சல் தரும். இது நிரந்தரமான மூளை காயம், பக்கவாதம் போன்ற சிக்கல்களை உண்டாக்கும்.
  • அனீரிசம் சிதைவால் இரத்த நாளங்கள் சுருங்கி, மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கும்.
  • மேலும், மூளையில் நீர் அல்லது ஹைட்ரோகெபாலஸ் என்றழைக்கப்படும் நிலை உண்டாகும். இது மூளையைச் சுற்றி முதுகுத்தண்டு திரவத்தை ஏற்படுத்தி, அழுத்தத்தை உண்டாக்குகிறது.
  • இந்த சிதைந்த மூளை அனீரிசம், பல நாள்கள் முதல் வாரங்கள் வரை கோமா அல்லது சுயநினைவு இல்லாத நிலைமையை உண்டாக்குகிறது.
  • இதன் மூலம் உண்டாகும் தசைப்பிடிப்புகள், ஏற்கனவே இருக்கக் கூடிய மூளைக் காயத்தை அதிகப்படுத்தும்.
  • திடீரென ஏற்படும் மண்டையோடு அழுத்தம், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை நிறுத்தி சுயநினைவை இழக்க செய்கிறது. மேலும், இது இறப்பிற்கும் வழிவகுக்கும்.

மூளை அனீரிசியத்திற்கான சிகிச்சை முறைகள்

மூளையில் ஏற்படும் ஒரு அனீரிசியத்திற்கான வெடிப்புக்கு இரு சிகிச்சை முறைகள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றில் சிகிச்சை அளிக்கப்படலாம்.

என்டோவாஸ்குலார் நுட்பம்

இந்த வகை சிகிச்சை முறையில் வடிகுழாய் ஒன்று ஒரு தமனிக்குள் வைக்கப்படும். பொதுவாக மணிக்கட்டு அல்லது இடுப்பு பகுதியில், உடல் வழியாக அனீரிசிம்க்கு அனுப்பபடுகிறது. இதில், ஒரு ஃப்ளோ டைவர்டர், ஒரு இன்ட்ராலூமினல் ஃப்ளோ டிஸ்ரப்டர், சுருள்கள், ஒரு ஸ்டெண்ட், அல்லது இந்த சாதனங்களின் வெவ்வேறு சேர்க்கைகள் அனீரிசத்தைத் தடுக்க உதவுகின்றன.

கிளிப்பிங்

இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி மூளையில் உள்ள அனீரிசம் அறுவை சிகிச்சை மூலம் மூடப்படுகிறது. இதற்கு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரால் மண்டையோட்டின் பகுதியளவு அகற்றப்படுகிறது. இதில், அனீரிசத்திற்கு உணவளிக்கும் இரத்த நாளம் கண்டறியப்பட்டு அனியூசிசத்தில் இரத்த ஓட்டத்தை நிறுத்த சிறிய உலோக கிளிப்பை வைப்பர்.

இந்த இரண்டு சிகிச்சைகளும் பாதுகாப்பாக செய்யக் கூடியதாகவும், பயனுள்ளவையாகவும் அமையும்.

மூளை அனீரிசத்தை எப்படி நிர்வகிப்பது

அனீரிசம் கண்டறிந்த பின், அது தானாகவே போய் விடும் என்பது சாத்தியமற்றதாகும். இருப்பினும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் அனீரிசத்தின் வளர்ச்சி, சிதைவு அல்லது புதிய அனீரிசம் உருவாவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.

  • வழக்கமான உடற்பயிற்சி மேற்கொள்வது
  • ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல்
  • புகைபிடித்தலை தவிர்த்தல்

இந்த முறைகள் மூளை அனீரிசத்தை நிர்வகிக்கக்கூடிய வாழ்க்கை முறைகள் ஆகும்.

இந்த பதிவும் உதவலாம்: Kidney Infections: இருப்பதை எப்படி தெரிந்துக்கொள்வது

Image Source: Freepik

Read Next

Bronchial Asthma: ஆஸ்துமா: அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை

Disclaimer

குறிச்சொற்கள்