கிளியோமா.. மூளை நரம்புகளை தாக்கும் Silent Killer.. உயிரிழந்த நடிகை.!

மூளை நரம்புகளை தாக்கும் கிளியோமா புற்றுநோயால் நடிகை கெல்லி மேக் உயிரிழந்தார். கிளியோமா அறிகுறிகள், சிகிச்சை, மற்றும் விழிப்புணர்வு பற்றிய முழு விவரம் இங்கே.
  • SHARE
  • FOLLOW
கிளியோமா.. மூளை நரம்புகளை தாக்கும் Silent Killer.. உயிரிழந்த நடிகை.!


தலைவலி, மயக்கம், நினைவிழப்பு… இவை சாதாரண உபாதைகள் போலத் தோன்றினாலும், சில சமயங்களில் அது மிக ஆபத்தான நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். அந்த வகையில், மனித மூளை மற்றும் மயிர்க்குழாயின் நரம்புகளை தாக்கும் ஒரு அரிய புற்றுநோய் வகை தான் கிளியோமா (Glioma)

கிளியோமா என்றால் என்ன?

கிளியோமா என்பது மூளையில் உள்ள glial cells எனப்படும் ஆதரவு நரம்பு செல்களில் உருவாகும் ஒரு வகை மூளை புற்றுநோய். இது மெதுவாக வளரக்கூடியதாகவும் அல்லது விரைவாக பரவக்கூடியதாகவும் இருக்கலாம். இந்த புற்றுநோய், மூளையின் செயல்பாடுகளை மெதுவாக மங்கச் செய்து, இறுதியில் மூளை செயலிழப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான நிலைக்கே இட்டுச் செல்லும்.

artical  - 2025-08-07T204523.160

கிளியோமா எப்படி உருவாகிறது?

மூளையில் உள்ள glial cells, நரம்பு செல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் மற்றும் ஊட்டச்சத்துக்களை பரிமாறும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய glial cells கட்டுப்பாடின்றி வளரத் தொடங்கினால், கிளியோமா உருவாகிறது. இது மூளையின் அழுத்தத்தை அதிகரிக்கிறது, நரம்பியல் செயல்பாடுகளை முடக்குகிறது மற்றும் பல்வேறு உடல் உறுப்புக்களில் இயக்கத் தடைகளை ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க: ஐயோ.. இது தெரியாம போச்சே.! மொபைலோடு தூங்கும் பழக்கம்.. பேராபத்தா.?

கிளியோமாவின் முக்கிய அறிகுறிகள்

  • தொடர்ந்து தலைவலி
  • பார்வை மற்றும் ஒலி உணர்வில் மாற்றம்
  • ஒருபுறம் உடல் ஊனமடைதல்
  • மயக்கம்
  • நினைவிழப்பு
  • மனநிலை மாற்றங்கள்
  • பேச்சு மற்றும் ஒருங்கிணைப்புத் திறனில் குறைபாடு

sign-and-symptoms-of-migraine-in-tamil-main

அறிகுறிகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

நரம்பியல் நிபுணரை உடனே சந்திக்க வேண்டும். மூளை ஸ்கேன் (MRI), பயோப்ஸி போன்ற பரிசோதனைகள் மூலம் கிளியோமா உறுதி செய்யப்படும். ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், சிகிச்சை வாய்ப்புகள் அதிகம்.

கிளியோமாவால் உயிரிழந்த நடிகை!

‘தி வாகிங் டெட்’ மற்றும் ‘9-1-1’ போன்ற பிரபல அமெரிக்க தொடர்களில் நடித்திருந்த நடிகை கெல்லி மேக் (Kelley Mack), கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி அவரது சொந்த ஊரான சின்சிநாட்டி, ஓஹையோவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 33. அவரது குடும்பம் வெளியிட்ட அறிக்கையின்படி, கெல்லி மேக் கிளியோமா எனும் மூளை நரம்பியல் புற்றுநோயால் பல மாதங்களாக போராடி வந்தார் என்பது தெரியவந்தது. இவரது மரணம் இந்த அரிய வகை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் தூண்டியுள்ளது.

artical  - 2025-08-07T204412.025

கிளியோமாவுக்கான சிகிச்சைகள்

அறுவை சிகிச்சை (Surgery):

* கேன்சர் கட்டியை அகற்ற இது ஒரு முயற்சி.

* இது மூளையின் செயல்பாடுகள் பாதிக்கப்படாமல் கவனிக்கப்படுகிறது.

கதிர்வீச்சு சிகிச்சை (Radiation Therapy):

புற்றுநோய் செல்கள் அழிக்கப்படும்.

கீமோதெரப்பி (Chemotherapy):

புற்றுநோய் வளர்ச்சி கட்டுப்படுத்த மருந்துகள்.

தற்காலிக நிவாரணம் (Palliative care):

நோயாளியின் வாழ்வத் தரம் மேம்படுத்தப்படுகிறது.

artical  - 2025-08-07T204549.703

மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கை

கிளியோமா அறிகுறிகள் தவறாக புரிந்து கொள்ளப்படலாம். தலைவலி, மூச்சுத் திணறல் போன்றவை பொதுவாகக் கருதப்படுவதால், காலதாமதம் ஏற்படுகிறது. திடீர் மனநிலை மாற்றங்கள், மயக்கம் போன்றவை நிகழ்ந்தால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

யார் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்?

  • 30–50 வயதுக்குள் உள்ளவர்கள்
  • மூளை கதிர்வீச்சு சிகிச்சை பெற்றவர்கள்
  • மரபணு காரணிகள்
  • ஆண்களுக்கு ஓரளவுக்கு அதிக வாய்ப்பு

sign-and-symptoms-of-migraine-in-tamil-02

நம்மால் என்ன செய்ய முடியும்?

  • தொடர்ந்து நீடிக்கும் தலைவலி/மயக்கம் இருந்தால் மருத்துவரை சந்திக்க வேண்டும்
  • மனநிலை மாற்றங்கள் இருந்தால் அவதானிக்க வேண்டும்
  • கணினி, மொபைல் முன் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும்
  • ஆரோக்கியமான உணவு பழக்கம், ஒழுங்கான தூக்கத்தை பின்பற்ற வேண்டும்

குறிப்பு

கிளியோமா.. நம்முள் பெரும்பாலானோர் அறிந்திராத, உயிருக்கு மிகப்பெரும் ஆபத்தான நோய். நம் உடலின் சிறிய மாற்றங்களையும் கவனித்துப் பராமரிக்க வேண்டும். முன்கூட்டியே அறிந்தால், கிளியோமாவை எளிதில் தடுக்கலாம்.

Read Next

எலும்பில் ஏற்படும் இந்த பிரச்சனையை லேசுல விட்ராதீங்க! எலும்பு புற்றுநோயா இருக்கலாம்..

Disclaimer

குறிச்சொற்கள்