Brain Cancer: மூளை புற்றுநோய் என்பது மூளையில் ஏற்படும் ஒரு நோயாகும், இது மூளை திசுக்களில் புற்றுநோய் செல்களை உருவாக்குகின்றன. இந்த புற்றுநோய் செல்கள் வளர்ந்து மூளையின் பல்வேறு பகுதிகளுக்கு பரவுகின்றன, இது மிகவும் ஆபத்தானது.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து பிரிவினருக்கும் மூளை புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மூளை புற்றுநோயின் அறிகுறிகள் சரியான நேரத்தில் புரிந்து கொள்ளாபடாவிட்டால் இது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். ஏன் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கலாம்.
மூளை புற்றுநோய் ஏற்படும் முன் சில அறிகுறிகள் தென்படும். அதை அறிந்துக் கொள்வது நல்லது. மூளை புற்றுநோயின் அறிகுறிகள் கட்டியின் இருப்பிடம் மற்றும் அளவைப் பொறுத்து மாறுபடும். இருப்பினும் அடிப்படை அறிகுறிகள் சிலவற்றை தெரிந்துக் கொள்ளலாம்.
மூளை புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?

அடிக்கடி தலைவலி
தலைவலி என்பது ஒரு பொதுவான பிரச்சனை, ஆனால் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் அடிக்கடி தலை வலி ஏற்படலாம். குறிப்பாக காலையில் எழுந்தவுடந் தலைவலி வரலாம்.
வலிப்பு பிரச்சனை
மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளையில் உள்ள நியூரான்கள் செயல்படுவதால் வலிப்பு ஏற்படலாம். வலிப்புத்தாக்கம் என்பது மூளைப் புற்றுநோயின் அறிகுறி என்பதை அறியாததால், பல நேரங்களில் மக்கள் அதை சாதாரண வலிப்பு பிரச்சனை என தவறாக எண்ணுகிறார்கள்.
குமட்டல் மற்றும் வாந்தி
மூளை புற்றுநோய் காரணமாக, உங்கள் மூளை மற்றும் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன, இது உங்களுக்கு வாந்தி மற்றும் குமட்டலை ஏற்படுத்தும். உச்சந்தலையில் புற்றுநோய் வளரும் போது, அது மூளை திசுக்களில் அழுத்தம் கொடுக்கலாம், மூளைக்குள் திரவ ஓட்டம் தடைபடுவதால் நோயாளிக்கு குமட்டல் மர்றும் வாந்தி பிரச்சனை ஏற்படலாம்.
கண் தொடர்பான பிரச்சனைகள்
மூளை புற்றுநோய் உங்கள் பார்வை நரம்புக்கு போதுமான அழுத்தத்தை ஏற்படுத்தினால், அது உங்கள் கண்களில் அழுத்தத்தை அதிகரிக்கும். மூளைப் புற்றுநோயின் போது, மங்கலான பார்வை, குறைந்த பார்வை மற்றும் ஒளிரும் விளக்குகளைப் பார்ப்பது போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்.
இதை கண்டு கொள்ளாவிட்டால் புற்றுநோய் வளர வளர, அது மூளையில் உள்ள பார்வை நரம்பை பாதித்து முழுமையாக கண் பார்வையை பாதிக்கும்.
உடல் உணர்வின்மை
புற்றுநோய் உடலின் மற்ற பகுதிகளில் நரம்பியல் நோயை ஏற்படுத்தும். உடலின் பல பாகங்களின் நரம்புகள் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளன, இதன் காரணமாக புற்றுநோய் ஏற்பட்டால், மூளை உடலின் பிற பாகங்களை உணர்ச்சியடையச் செய்து பலவீனத்தையும் ஏற்படுத்தும்.
நினைவாற்றல் இழந்து போகும்
மூளை புற்றுநோய் நமது மூளையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இதன் காரணமாக பெயர்கள், வார்த்தைகள் அல்லது தேதிகளை மறந்துவிடுவது போன்ற மக்களின் நினைவாற்றல் பலவீனமடையும். என்ன பேசினோம் என்ற ஞாபகம் கூட வராது. நோயாளி விஷயங்களை நினைவில் கொள்வதில் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
பேசுவதில் சிரமம் வரும்
மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பேசவோ அல்லது புரிந்துகொள்வதற்கோ கடினமாக இருக்கலாம். மூளை புற்றுநோய் மூளையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இது நினைவாற்றலை பலவீனப்படுத்துகிறது மற்றும் பேச்சையும் பாதிக்கும்.
இதுபோன்ற ஏதேனும் அறிகுறிகள் தீவிரமாக தென்பட்டால் சற்றும் சிந்திக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: FreePik