$
Tips To Help You Prevent Yourself Against Brain Tumor: உலகம் முழுவதும் ஜூன் மாதம் மூளை கட்டி மாதம் என்றழைக்கப்படுகிறது. மூளை கட்டி ஒரு அரிதான நோயாக இருப்பினும், இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது அவசியமாகும். மூளை கட்டி ஒரு ஆபத்தான நோயாகும். ஒவ்வொரு நாளும் 500-க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் மூளை கட்டியால் பாதிப்படைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 500-க்கும் அதிகமான நோயாளிகள் இரண்டாம் நிலை கட்டிகள் அபாயத்தால் பாதிப்படைகின்றனர்.
இதில் முதன்மை மூளைக் கட்டி என்பது மூளையில் தொடங்கக்கூடிய கட்டியாகும். இந்த கட்டிகள் வீரியம் மிக்கதாக இருக்கலாம். அதாவது இது புற்றுநோய் செல்கள் அல்லது புற்றுநோய் செல்கள் இல்லாதவையாக இருக்கலாம். இரண்டாம் நிலை அல்லது மெட்டாஸ்டேடிக் மூளைக்கட்டி பொதுவாக புற்றுநோயாகக் கருதப்படுகிறது. இது உடலின் மற்ற இடங்களில் தொடங்கி, மூளையில் வளரும் புற்றுநோய் செல்களை அனுப்பலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Eye Stroke: உயர் இரத்த அழுத்தம் கண் பக்கவாதத்தை ஏற்படுத்துமா? தடுப்பு நடவடிக்கை இங்கே!
மூளைக்கட்டி நோய் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை
- பொதுவாக மூளைக்கட்டி நோய் எந்த வயதிலும் ஏற்படலாம்.
- தரம் I, தரம் II, அல்லது தரம் III அல்லது தரம் IV என மூளைக் கட்டிகள் வகைப்படுத்தப்படுகிறது.
- மூளைக்கட்டிகள் எதனால் ஏற்படுகிறது என்பது நமக்குத் தெரியாது. இது குடும்ப வரலாறு மற்றும் எக்ஸ்ரே போன்ற அதிக அளவு கதிர்வீச்சு போன்ற ஆபத்தை அதிகரிக்கிறது.
- மருத்துவர்கள் மூளைக் கட்டிகளை கிரேடு மூலம் தொகுக்கின்றனர். அதாவது மூளை செல்கள் நுண்ணோக்கியின் கீழ் எப்படி இருக்கும் என்று அர்த்தமாகும்.

மூளைக்கட்டியின் பொதுவான அறிகுறிகள்
மூளைக்கட்டியின் அறிகுறிகளானது அதன் அளவு, வகை மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து அமைகிறது. இதன் புறக்கணிக்கக்கூடாத சில பொதுவான அறிகுறிகளைக் காணலாம்.
- தலைவலி
- கண் பார்வையில் சிக்கல்கள்
- பேசுவதில் சிக்கல்கள்
- வலிப்புத் தாக்கம்
- வாந்தி
- மன மற்றும் ஆளுமை மாற்றங்கள்
- சமநிலை மற்றும் நடைபயிற்சி பிரச்சனை
மூளைக்கட்டி நோயைக் கண்டறிவது எப்படி
உடல் பரிசோதனை, மருத்துவ வரலாறு மற்றும் நரம்பு மண்டலத்தின் சிறப்பு சோதனைகள் போன்றவற்றின் அடிப்படையில் மூளை கட்டி மருத்துவரால் கண்டறியப்படுகிறது.
அதன் படி, கதிர்வீச்சு சிகிச்சை, அறுவை சிகிச்சை, கீமோதெரபி, ஸ்டீராய்டுகள், வலிப்பு எதிர்ப்பு மருந்துகள், வென்ட்ரிகுலர் பெரிட்டோனியல் ஷன்ட் போன்ற சிகிச்சை முறைகள் மூளைக்கட்டி நோய்க்குக் கண்டறியப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Bhumi Amla: கொழுப்பு கல்லீரலுக்கு உதவும் சூப்பரான பூமி ஆம்லா! இப்படி எடுத்துக்கோங்க
மூளைக்கட்டி நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?
மூளைக் கட்டிகளைத் தடுப்பதற்கான முதன்மையான வழியாக அமைவது, வாழ்க்கை முறையைக் கட்டுப்படுத்துவதாகும். இதில் உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, சூழலில் அறியப்பட்ட புற்றுநோய்களைத் தவிர்ப்பது மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பது போன்றவை அடங்கும்.
புற்றுநோய் எதிர்ப்பு உணவு
மூளைக் கட்டிகளைத் தவிர்க்க ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்வது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
நல்ல தூக்கம்
மூளை ஆரோக்கியத்திற்கு தூக்கம் சிறந்த தேர்வாகும். எனவே கண்களை மூடிக் கொண்டு போதுமான அளவு ஓய்வெடுப்பது மூளை ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது.

கெட்டோஜெனிக் உணவு
கெட்டோஜெனிக் உணவு என்பது அதிகளவு புரதச்சத்துக்கள் நிறைந்த உணவாகும். இது மூளைக்கட்டிகளுடன் தொடர்புடைய, மூளையில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது கட்டிகள் உருவாக்கத்தைத் தடுத்து நிறுத்துகிறது.
மன அழுத்தத்தைக் குறைப்பது
மூளைக் கட்டிகளுடன் தொடர்புடைய மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, தியானம் மற்றும் சுவாசப் பயிற்சிகள் செய்யலாம். மேலும் தூப எண்ணெயை உள்ளிழுப்பதும் மூளையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
மொபைல் போன் பயன்பாட்டைத் தவிர்ப்பது
செல்போன்களின் அதிக பயன்பாடு மூளைக்கட்டிகளின் அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே செல்போன் பயன்பாட்டைத் தவிர்ப்பது மூளைக்கட்டிகளின் அபாயத்தைக் கட்டுப்படுத்துகிறது.
கலோரி கட்டுப்பாடு
கெட்டோஜெனிக் உணவு முறைகளைக் கையாள்வது அதாவது கலோரி கட்டுப்பாடு புற்றுநோயைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.
இந்த வகை வாழ்க்கை முறைகளைக் கையாள்வதன் மூலம், மூளைக்கட்டி பிரச்சனையைத் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: H5N1 Bird Flu: பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் மரணம்; மக்களை எச்சரிக்கும் WHO!
Image Source: Freepik