கர்ப்பத்தின் ஆரம்பத்தில் கருவில் உருவாகும் முதல் உறுப்பு எது தெரியுமா?

First organ to develop in a fetus in the early stages of pregnancy: கருப்பையில் குழந்தை வளரும் போது, ஒவ்வொரு உறுப்புகளாகத் தோன்ற ஆரம்பிக்கிறது. ஆனால் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் எந்த உறுப்பு முதலில் உருவாகிறது தெரியுமா? இது குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ள தகவல்களைப் பற்றிக் காண்போம்.
  • SHARE
  • FOLLOW
கர்ப்பத்தின் ஆரம்பத்தில் கருவில் உருவாகும் முதல் உறுப்பு எது தெரியுமா?


What is the first organ that develops in a baby during pregnancy: ஒவ்வொரு பெண்ணும் தங்களது வாழ்க்கையில் சந்திக்ககூடிய சிறப்பு வாய்ந்த நேரமாக கர்ப்பகாலம் அமைகிறது. இந்த சமயத்தில் பெண்கள் தங்களுடைய உடலில் பல வகையான மாற்றங்களைச் சந்திக்கத் தொடங்குகின்றனர். அதே சமயம், அவர்கள் உணர்ச்சி ரீதியான மாற்றங்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். இந்த சமயத்தில் முதல் முறையாக கருத்தரிக்கும் பெண்களுக்கு இன்னும் கொஞ்சம் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கருத்தரித்த உடனேயே, பெண்கள் சில தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

அதன் பின்னரே பெண்களின் கர்ப்பம் உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு கர்ப்பம் உறுதி செய்த பின் மருத்துவர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால், முதல் முறையாக தாய்மை அடையும் பெண்களின் மனதில் கர்ப்பம் தொடர்பான பல கேள்விகள் எழும். இந்த கேள்விகளில் ஒன்றாக கர்ப்பத்திற்குப் பிறகு, குழந்தையின் எந்தப் பகுதி முதலில் உருவாகும் என்ற கேள்வி அவர்களின் மனதில் எழுகிறது. இது குறித்து, மும்பையில் உள்ள NH-SRCC குழந்தைகள் மருத்துவமனையின் மகளிர் மருத்துவ நிபுணரும் ஆலோசகருமான டாக்டர் ருஜுல் ஜாவேரி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Omega-3 During Pregnancy: கர்ப்ப காலத்தில் ஒமேகா-3 எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதா?

கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் கருவின் வளர்ச்சி

கர்ப்ப காலத்தில் பெண்களின் மனதில் எழும் முதல் கேள்வியாக, அவர்களின் வயிற்றில் குழந்தையின் எந்த உறுப்பு முதலில் உருவாகத் தொடங்குகிறது என்பது தான். உண்மையில், இது மிகவும் மென்மையான நேரமாகக் கருதப்படுகிறது. இந்த சமயத்தில், கருவின் நரம்புக் குழாய் உருவாகிறது. இதில் மூளை மற்றும் முதுகெலும்பு உருவாகிறது. அதன் பிறகு, குழந்தையின் கண்கள், வாய், கீழ் தாடை மற்றும் கழுத்து உருவாகத் தொடங்குகிறது.

இது தவிர, இரத்த அணுக்கள் உருவாகத் தொடங்குகிறது. இதனுடன், இரத்த ஓட்டமும் தொடங்குகிறது. முதல் மாதத்தில், கருவின் வடிவம் அரிசி தானியத்தைப் போன்றதாக இருக்கும். அதன் பின்னர், இரண்டாவது மாதத்தில் முகம் வடிவம் பெறத் தொடங்குகிறது. இதற்குப் பிறகு கைகள், காதுகள் மற்றும் கால்கள் போன்ற உறுப்புகள் படிப்படியாக உருவாகத் தொடங்குகின்றன. அதன் பிறகு, உணவுக்குழாய் மற்றும் எலும்புகள் உருவாகத் தொடங்குகிறது.

9 முதல் 13 வது வாரத்தில் குழந்தையின் எந்த உறுப்பு உருவாகிறது?

கர்ப்பத்தின் 9 முதல் 13 வது வாரத்திற்குள் குழந்தையின் முகம், காதுகள், கைகள், கால்கள் மற்றும் விரல்கள் முழுமையாக உருவாகிறது. அதன் பின்னரே, நகங்கள் உருவாகத் தொடங்கி பிறப்புறுப்பு உறுப்புகள் உருவாகத் தொடங்குகிறது. மூன்றாவது மாத இறுதியில் இதயம், நரம்புகள், கல்லீரல் மற்றும் சிறுநீர் பாதை போன்றவை செயல்படத் தொடங்குகிறது. அதன் பிறகு மூன்றாவது மாத இறுதியில் குழந்தையின் நீளம் 5.4 சென்டிமீட்டரை எட்டுகிறது. இந்த சமயத்தில், குழந்தையின் எடை 4 கிராம் வரை எட்டக்கூடும்.

இந்த பதிவும் உதவலாம்: X-ray During Pregnancy: கர்ப்பகாலத்தில் எக்ஸ்ரே எடுக்கலாமா? இது நல்லதா?

ஐந்தாவது மாதத்தில், குழந்தையின் பற்கள் மற்றும் எலும்புகள் வலுவடையத் தொடங்குகிறது. இந்த சமயத்தில், குழந்தை தாயின் கருப்பையில் தலையைத் திருப்புவது, கட்டைவிரலை உறிஞ்சுவது போன்றவற்றைச் செய்யத் தொடங்குகிறது. பின் 13 மற்றும் 15 வது வாரங்களில், குழந்தையின் முடி வளரத் தொடங்குகிறது.பின்னர், ஆறாவது மாதத்தில், குழந்தையின் நிறம் சிவப்பு நிறமாக இருக்கும். அதில் தமனிகள் தெரியும். இதற்குப் பிறகு குழந்தையின் கேட்கும் திறன் அதிகரிக்கத் தொடங்குகிறது.

எட்டாவது மாதத்தில், தாயின் கருப்பையில் குழந்தை நகரத் தொடங்குகிறது. பின்னர் ஒன்பதாவது மாதத்தில், குழந்தை இமைக்கத் தொடங்குகிறது. அதே சமயம், அவரது நுரையீரலும் வளர்ச்சியடைகிறது.

கர்ப்ப காலத்தில் பெண்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த சமயத்தில், கருவின் அளவு அதிகரிக்கும் போது, பெண்களுக்கு தலைவலி, வாந்தி, வயிற்று வலி, மார்பக வலி, கால்களில் வீக்கம் போன்ற பல்வேறு அறிகுறிகள் தோன்றலாம். கர்ப்ப காலத்தின் போது ஒவ்வொரு பெண்ணும் வெவ்வேறு அறிகுறிகளை அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இது பிரசவத்திற்குப் பிறகு தானாகவே குணமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Pregnancy Care: கர்ப்பிணிப் பெண்கள் காஃபி குடிப்பது நல்லதா? டாக்டர் கூறுவது இங்கே?

Image Source: Freepik

Read Next

கர்ப்ப காலத்தில் கோழிக்கறி சாப்பிடுவது நல்லதா? அதை எப்படி பாதுகாப்பாக சாப்பிடுவது? மருத்துவர் தரும் விளக்கம் இதோ

Disclaimer

குறிச்சொற்கள்