Sat Sep 12, 2026 | 12:05 AM IST

Pregnancy Care: கர்ப்பிணிப் பெண்கள் காஃபி குடிப்பது நல்லதா? டாக்டர் கூறுவது இங்கே?

Is it safe to drink coffee during pregnancy: கர்ப்பம் ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியமான காலகட்டம். என்னதான் சந்தோஷமும், இனிமையும் நிறைந்திருந்தாலும் கர்ப்பிணிகள் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். எனவே, கர்ப்பகாலத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். குடிப்பாக உணவு வழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

நீங்கள் செய்யும் சிறிய கவனக்குறைவு கூட தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். பலருக்கு கர்ப்ப காலத்தில் கூட காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், பலமுறை நாம் யோசித்திருப்போம் கர்ப்பகாலத்தில் காஃபி குடிக்கலாமா? என. இந்த கேள்விக்கான பதிலை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

இந்த பதிவும் உதவலாம் : Spicy Food in Pregnancy: கர்ப்ப காலத்தில் காரமாக சாப்பிடுவது குழந்தையின் பார்வையை பாதிக்குமா?

கர்ப்ப காலத்தில் காபி குடிப்பது பாதுகாப்பானதா?

மருத்துவர்களின் கருத்துப்படி, காபியில் காஃபின் உள்ளது, இது ஒரு தூண்டுதலாகும். இது நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது. இதனால், கர்ப்ப காலத்தில் கருச்சிதைவு ஏற்படலாம். அதே போல, கர்ப்பிணிகள் அதிகமாக காபி குடித்தால் குழந்தைகளின் வளர்ச்சி தடைபடும்.

நிபுணர்களின் கூற்றுப்படி, காஃபின் நஞ்சுக்கொடியைக் கடந்து குழந்தையை அடையலாம். இது குழந்தையின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காஃபின் குழந்தையின் மூளைக்குள் நுழையலாம், இது மன வளர்ச்சியையும் பாதிக்கலாம். இது குறைந்த பிறப்பு விகிதத்திற்கு வழிவகுக்கும். அதே நேரத்தில், தூக்கமின்மை, அதிகரித்த இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு போன்ற பிரச்சனைகளை தாய் சந்திக்க வேண்டியிருக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : கர்ப்பிணிகள் இளநீர் குடிக்கக்கூடாதா? - உண்மையை முழுசா தெரிஞ்சிக்கோங்க!

எவ்வளவு காபி குடிப்பது நல்லது?

நிபுணர்களின் கூற்றுப்படி, கர்ப்பிணிப் பெண்கள் ஒரு நாளைக்கு ஒரு கப் காபிக்கு மேல் அதாவது 200 மில்லிகிராம் காஃபி வரை உட்கொள்ளலாம். சிலர் ப்ளாக் மற்றும் ஓயிட் ஆகிய இரண்டு வகையான காபிகளை குடிப்பார்கள். எனவே, நீங்கள் கருப்பு காபியை விரும்புகிறீர்கள் என்றால், இந்த நெருக்கடியான நேரத்தில், பாலின் அளவை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே காபியை உட்கொள்ளுங்கள்.

இது தீமைக்கான வாய்ப்பைக் குறைக்கிறது. நீங்கள் ஆற்றலுக்காக காபி குடிப்பவராக இருந்தால், அதற்கு பதிலாக எலுமிச்சை ஜூஸ் அல்லது பழ சாறு அல்லது மூலிகை தேநீர் சாப்பிடுவது நல்லது.

Pic Courtesy: Freepik

Read Next

Juice for Pregnancy: கர்ப்ப காலத்தில் தினமும் ஃப்ரூட் ஜூஸ் குடிப்பது நல்லதா? நிபுணர்கள் கூறுவது இங்கே!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content