Can Spicy Foods During Pregnancy affect Baby's Vision: கர்ப்பம் ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியமான காலகட்டம். கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த காலகட்டத்தில், நாம் செய்யும் சிறிய தவறு கூட கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும். கர்ப்பகாலத்தில் உணவு குறித்து கூறப்படும் தவறான தகவல்களால், பெண்கள் பெரும்பாலும் தவறான உணவு பழக்கத்தை மேற்கொள்கின்றனர்.
பெரும்பாலும் கர்ப்ப காலத்தில் இதை சாப்பிட கூடாது, அதை சாப்பிடக்கூடாது என கூறுவது வழக்கம். கர்ப்ப காலத்தில் காரமான உணவுகளை சாப்பிடுவது கடுமையான தீங்கு விளைவிக்கும் என்று பலர் கூறி கேள்விப்பட்டிருப்போம். குறிப்பாக, கர்ப்ப காலத்தில் காரமான உணவுகளை உட்கொள்வது பிறக்காத குழந்தையின் கண்களை சேதப்படுத்தும் அல்லது குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும் என்ற கருத்து மக்கள் மத்தில் நம்பிக்கையாக உள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த கருத்து குறித்து மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Pregnancy Gas: கர்ப்ப காலத்தில் வாயுத்தொல்லையா.? சூப்பர் வீட்டு வைத்தியம்..
கர்ப்ப காலத்தில் காரமாக சாப்பிட்டால் குழந்தையின் கண் பாதிக்கப்படுமா?

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பல வகையான உணவுகளை சாப்பிட ஆசை ஏற்படும். இந்த காலகட்டத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக இது நிகழ்கிறது. இது தவிர, கர்ப்ப காலத்தில் உடலுக்கு சிறப்பு ஊட்டச்சத்து தேவை. இந்த தேவையை பூர்த்தி செய்ய, மூளை உணவுக்கான ஏக்கத்தை அதிகரிக்கும் சமிக்ஞைகளை அனுப்புகிறது.
இந்த காலகட்டத்தில், சத்துள்ள உணவுகளை சீரான அளவில் உட்கொள்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கர்ப்ப காலத்தில் காரமான உணவை உட்கொள்வது கடுமையான தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், இதன் பின்னணியில் உள்ள உண்மை வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்.
சமூக வலைதளங்களில் தனது பதிவுகள் மூலம் விழிப்புணர்வை பரப்பி வரும் பிரபல மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் அஞ்சலி குமார், கர்ப்ப காலத்தில் காரமான உணவுகளை உண்பது குறித்த தகவலையும் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “கர்ப்ப காலத்தில் காரமான உணவுகளை சாப்பிடுவது குழந்தையின் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற கூற்று முற்றிலும் தவறானது. இதற்குப் பின்னால் எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்க, பெண்கள் குறைந்த அளவு காரமான உணவுகளை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்”.
இந்த பதிவும் உதவலாம் : Pregnancy Tips: கர்ப்பிணிகள் மறந்தும் இந்த பழங்களை சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?
கர்ப்ப காலத்தில் காரமான உணவுகளை சாப்பிடலாமா?

கர்ப்ப காலத்தில் காரமான உணவுகள் அல்லது உணவை சீரான மற்றும் குறைந்த அளவில் உட்கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது. காரமான உணவுகளை உட்கொள்வதால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கர்ப்ப காலத்தில் சில மசாலாப் பொருட்களை உட்கொள்வதும் நன்மை பயக்கும். இருப்பினும், இந்த காலகட்டத்தில், காரமான உணவை சீரான அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் ஜாதிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஜாதிக்காயை அதிக அளவில் உட்கொள்வது மாயத்தோற்றம் போன்ற பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. கர்ப்ப காலத்தில் உணவு மற்றும் பராமரிப்பு தொடர்பான எதையும் கண்மூடித்தனமாக நம்புவதற்கு முன், மருத்துவரை அணுக வேண்டும்.
Pic Courtesy: Freepik