Doctor Verified

Sapota During Pregnancy: கர்ப்ப காலத்தில் சப்போட்டா சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Sapota During Pregnancy: கர்ப்ப காலத்தில் சப்போட்டா சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா?


சப்போட்டாவில் நல்ல அளவிலான இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், தாமிரம், மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இது தவிர, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள் போன்ற பல்வேறு மருத்துவ குணங்களும் நிறைந்து காணப்படுகின்றன. எனவே, இந்த பழத்தை குளிர்காலத்தில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Twins Pregnancy Foods: இரட்டைக் குழந்தை பெற வேண்டுமா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க.

கர்ப்பிணி பெண்கள் சப்போட்டா சாப்பிடலாமா?

கர்ப்ப காலத்தில் பெண்கள் சப்போட்டா சாப்பிடலாமா என்ற சந்தேகம் எழும். இது பெண்களுக்கு மிகவும் பிடித்த பழமாகும். ஆனால், இந்த பழம் இயற்கையில் சூடான தன்மையைத் தருகிறது. எனவே இதை கர்ப்பிணி பெண்கள் உட்கொண்டால் கர்ப்பத்தின் அறிகுறிகள் கடுமையானதாக மாறலாம் அல்லது கருச்சிதைவு உண்டாகலாம் என்று பொதுவாக நம்பப்படுகிறது.

ஆனால், இது உண்மையா? கர்ப்ப காலத்தில் சப்போட்டா சாப்பிடுவது குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் தீங்கு விளைவிக்குமா? இந்த கேள்விகளுக்கு நொய்டாவின் முன்னணி மூத்த மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் உமா மிஸ்ரா (MD, Obs & Gyne, மூத்த ஆலோசகர் மகப்பேறு மருத்துவர்) அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

மருத்துவர் விளக்கம்

டாக்டர் உமா மிஸ்ரா அவர்களின் கூற்றுப்படி, கர்ப்ப காலத்தில் பெண்கள் சப்போட்டா சாப்பிடக்கூடாது என்பது இல்லை. ஆனால், மிகக் குறைந்த அல்லது குறைந்த அளவிலேயே சப்போட்டாவை உட்கொள்ள வேண்டும். குறைந்த அளவு உட்கொள்வது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இது அவர்களுக்கு நன்மை பயக்கும்.

சப்போட்டாவில் வைட்டமின் சி மற்றும் இன்னும் சில அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளதால், தாம் மற்றும் குழந்தை இருவருமே இதன் ஊட்டச்சத்துகளைப் பெறலாம். இதில் உள்ள பொட்டாசியம், இரும்பு போன்றவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும், இது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. எனினும் மருத்துவர் ஆலோசனையின்றி, கர்ப்பிணி பெண்கள் சப்போட்டாவை எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும், சரியான அளவு மற்றும் சில முன்னெச்சரிக்கைகளுடன் சப்போட்டாவை சாப்பிட வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Oral Health During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் வாய்வழி ஆரோக்கியத்தை கடைபிடிப்பது எப்படி?

கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு

சப்போட்டா அலர்ஜியா?

சிலருக்கு பழங்கள் அல்லது பிற உணவுகளால் ஒவ்வாமை ஏற்படுவது பொதுவானதாகும். சப்போட்டா சாப்பிட்ட பின் பலருக்கு அலர்ஜி ஏற்படும். எனவே பெண்கள் சப்போட்டா ஒவ்வாமை பிரச்சனை கொண்டிருந்தால், கர்ப்ப காலத்தில் சப்போட்டா சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு

சப்போட்டா நல்ல கலோரி நிறைந்த பழமாகும். இது உடல் எடையை அதிகரிக்கலாம். கூடுதலாக, இந்த சப்போட்டா பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. மேலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். எனவே மருத்துவரிடன் ஆலோசனையின்றி நீரிழிவு நோய் உள்ள கர்ப்பிணி பெண்கள் சப்போட்டாவை உட்கொள்ளக் கூடாது.

நன்றாக சுத்தம் செய்தல்

சப்போட்டாவை உட்கொள்ளலாம் என மருத்துவர் அறிவுறுத்தியிருப்பின், பழத்தை உண்ணும் முன்னதாக எப்போதும் நன்கு கழுவ வேண்டும். ஏனெனில், பூச்சிக் கொல்லிகள் தூசி போன்றவை சப்போட்டாவில் காணப்படலாம். முடிந்தவரை ஆர்கானிக் சப்போட்டாவை உட்கொள்ள முயற்சிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Pregnancy Health Drinks: கர்ப்பிணி பெண்கள் குளிர்காலத்தில் அருந்த வேண்டிய பானங்கள் இது தான்.!

மருத்துவ நிலைமைகளுடன் சப்போட்டா?

கர்ப்பிணி பெண்கள் வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனையால் அவதிப்பட்டாலோ அல்லது அதிக ஆபத்துள்ள கர்ப்ப சமயமாக இருந்தாலோ சப்போட்டா சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது இந்த காலகட்டத்தில் மருத்துவரின் ஆலோசனையின் படியே சாப்பிடலாம்.

உணவுத்திட்டத்தின் படி

டாக்டர் உமா மிஸ்ராவின் கூற்றுப்படி, “கர்ப்பிணி பெண்கள் தங்கள் சொந்த உணவுத் திட்டத்தை உருவாக்க வேண்டும். இதில், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இரும்பு,கால்சியம் போன்ற அனைத்து அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாத்துக்கள் இருக்கலாம். மேலும், இயற்கை மூலங்கள் அல்லது பழங்களைச் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. டயட்டீஷியன் அல்லது மருத்துவரை அணுகி ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுத் திட்டத்தை உருவாக்கலாம்” என்று கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Fennel Water During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் சீரகத் தண்ணீர் குடிக்கலாமா? மருத்துவர் தரும் விளக்கம்

Image Source: Freepik

Read Next

Pregnancy Gas: கர்ப்ப காலத்தில் வாயுத்தொல்லையா.? சூப்பர் வீட்டு வைத்தியம்..

Disclaimer