Twins Pregnancy Foods: இரட்டைக் குழந்தை பெற வேண்டுமா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க.

  • SHARE
  • FOLLOW
Twins Pregnancy Foods: இரட்டைக் குழந்தை பெற வேண்டுமா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க.


இரட்டைக் குழந்தை பெற சாப்பிட வேண்டிய உணவுகள்

சில உணவுப் பழக்க வழக்கங்கள் இரட்டைக் குழந்தையைப் பெறுவதற்கு உதவுகின்றன. அவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.

ஃபோலிக் அமிலம்

கருவில் உள்ள குழந்தைகளின் முக்கிய தேவைகளில் ஒன்றாக விளங்குவது ஃபோலிக் அமிலம் ஆகும். வெண்ணெய், ப்ரோக்கோலி, கீரை வகைகள் போன்றவை ஃபோலிக் அமிலத்தை உள்ளடக்கிய மூலமாகும். எனவே, கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும் பெண்கள் ஃபோலிக் அமிலத்தை உள்ளடக்கிய உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஃபோலிக் அமிலம் சார்ந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் போது இரட்டைக் குழந்தைகள் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஃபோலிக் அமிலத்தை அதிகமாக உட்கொள்வதற்கு மருத்துவரிடம் உறுதிப்படுத்திக் கொள்வது சிறப்பு.

மக்கா வேர்

கருவுற விரும்பும் பெண்களுக்கு மிகவும் நன்மை தருவதாக அமைவது மக்கா வேர். அதிலும் இரட்டைக் குழந்தைகளைப் பெற விரும்பும் பெண்கள், கூடுதலாக மக்கா வேரை உட்கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக, இது கருவுறுதலை அதிகரிக்கக் கூடிய ஒன்றாகும். எனினும், இதனை உறுதிபடுத்த ஆதாரங்கள் அதிகம் கிடைக்கவில்லை. இந்த மக்கா வேரை பச்சையாகவோ, பொடியாகவோ எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Dengue During Pregnancy: கர்ப்ப காலத்தில் டெங்கு நோய்க்கான அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்

கருணைக்கிழங்கு

உணவில் கணிசமான அளவில் கருணைக்கிழங்கு சேர்ப்பதன் மூலம் இரட்டைக் கருவுறுதலைப் பெற முடியும். இது ஒரு ஆய்வு மூலமாக தெரிவிக்கப்பட்டது. அதாவது, நைஜீரியாவில் யோருபா பழங்குடியினருக்கு அதிக அளவிலான இரட்டை பிறப்பு விகிதம் கண்டறியப்பட்டது. இதற்கு உணவில் கருணைக்கிழங்கு சேர்ப்பதே காரணம் என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டது. கருணைக்கிழங்குகள், பைட்டோ ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்ட்டிரோனின் மூலங்களாகும். இது அதிக அண்ட விடுப்பிற்கு வழிவகுக்கிறது. எனவே, உணவில் கருணைக்கிழங்கு சேர்ப்பதன் மூலம் இரட்டைக் குழந்தைகள் பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

பால் பொருள்கள்

கர்ப்பம் தரிக்கும் பெண்கள் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெற பால் பொருள்களை உட்கொள்ளலாம். ஆய்வின் படி, குறைவான பால் பொருள்கள் எடுத்துக் கொள்ளும் பெண்களுடன் ஒப்பிடும் போது, அதிக பால் பொருள்களை உட்கொள்ளும் பெண்களுக்கு இரட்டைக்குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம் என நிறுவப்பட்டது. பால் பொருள்களின் நுகர்வு, குறிப்பிட்ட புரதத்தை அதிகரிக்கிறது. இது இன்சுலின் போன்ற வளர்ச்சிக் காரணி என அழைக்கப்படுகிறது. இந்த புரதங்கள் பசும்பாலில் அதிகம் உள்ளது மற்றும் பிற விலங்குகளிடமிருந்தும் பெற முடியும். எனவே, அதிக பால் பொருள்களை உட்கொள்ளும் போது கருப்பைகள் அதிக முட்டைகளை வெளியிடுவதற்கான வாய்ப்பு அதிகம். இது இரட்டைக் குழந்தைகளைப் பெறுவதை அதிகரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Miscarriage Symptoms: கருச்சிதைவு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் மற்றும் அறிகுறிகள்

காம்பிளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள்

இரட்டைக் குழந்தை பெற திட்டமிடுபவர்களுக்கு, காம்பிளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் ஒரு நல்ல தீர்வாகும். கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு மிகவும் நல்லதாகும். அதிலும், எளிய கார்போஹைட்ரேட்டுகளை விட சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. எனவே பீன்ஸ், காய்கறிகள் மற்றும் தானியங்கள் போன்ற கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

ஜிங்க் உணவுகள்

ஜிங்க் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கருவுறுதலை மேம்படுத்த முடியும். இது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், இரட்டைக் கருத்தரித்தலையும் எளிதாக்குகிறது. ஜிங்க் என்ற துத்தநாகத்தின் ஆதாரங்களில் பீன்ஸ், மட்டி, நண்டுகள் போன்றவை அடங்கும். எனினும், துத்தநாகச் சத்துக்கள் எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Pregnancy Foods: கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல்

Image Source: Freepik

Read Next

Pregnancy Foods: கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல்

Disclaimer

குறிச்சொற்கள்