Symptoms of Miscarriage: கர்ப்ப காலத்தில் 20 ஆவது வாரத்திற்கு முன்பு, தன்னிச்சையாக ஏற்படும் ஒரு நிகழ்வே கருச்சிதைவு ஆகும். கர்ப்பத்தின் ஆரம்ப காலத்திலேயே பல கருச்சிதைவுகள் நிகழ்கின்றன. கருவைச் சுமப்பதில் தவறுகள் நடந்திருப்பின், இது போல கருச்சிதைவு ஏற்படலாம். அதிலும் கரு எதிர்பார்த்தபடி வளர்ச்சியடையாத போது இந்த கருச்சிதைவுகள் ஏற்படுகின்றன. இப்போது கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் சிலவற்றைக் காண்போம்.
கருச்சிதைவு ஏற்படுவதற்கான அறிகுறிகள்
கருச்சிதைவுக்கான அறிகுறிகளாக உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது வயிறு வலி, முதுகு வலி, பிறப்புறுப்பில் இரத்தபோக்கு உள்ளிட்டவை கருச்சிதைவுக்கான பொதுவான அறிகுறியாகும். மேலும், இதன் மற்ற உடல் அறிகுறியாக குமட்டல், சோர்வு போன்றவை ஏற்படும்.

இந்த பதிவும் உதவலாம்: Pregnancy Test: லெமன் ஜூஸில் கர்ப்ப பரிசோதனை செய்யலாமா?
பிறப்புறுப்பில் இரத்தப்போக்கு
கருச்சிதைவின் பொதுவான அறிகுறியாக விளங்குவது பிறப்புறுப்பில் இரத்தப்போக்கு ஏற்படுதல் ஆகும். கருப்பைச் சுவரில் இருந்து, நஞ்சுக்கொடி கருச்சிதைவுக்குப் பின் இரத்தப்போக்கை ஏற்படுத்துகிறது. சில சமயம், கரு கருப்பை வாய் வழியாகச் செல்லும் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படலாம்.
கரு திசுக்கள் வெளியேறுதல்
கருச்சிதைவு ஏற்படும் போது, ஹார்மோன்கள் அளவு சரிந்து, யோனி வெளியேற்றத்தை அதிகரிக்கும். இது துர்நாற்றத்துடன் இளஞ்சிவப்பு, சிவப்பு அல்லது பழுப்பு நிறமாக வெளியேறும். மேலும், இது அரிப்பு அல்லது எரிச்சல் தன்மையை ஏற்படுத்தும். இவ்வாறு யோனி வெளியேறுவது தடினமாக இருப்பின் இதனுடன் கட்டிகள் அல்லது கரு திசுக்களைக் கொண்டிருக்கலாம்.
தசைப்பிடிப்பு மற்றும் வலி ஏற்படுதல்
கருச்சிதைவின் அறிகுறியாக வயிற்றுவலி, முதுகுவலி மற்றும் தசைப்பிடிப்பு போன்றவையும் அடங்கும். இந்த சமயத்தில் வரும் தசைப்பிடிப்பு சிறியதாகவும் இருக்கலாம் அல்லது கடுமையானதாகவும் இருக்கலாம். பெரும்பாலும் அடிவயிற்றுப்பகுதியில் இந்த வகை பிடிப்பு மற்றும் வலி ஏற்படும்.
உணர்ச்சி அறிகுறிகள்
இது ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வாக இருப்பதால், உணர்ச்சி அறிகுறிகளாக தூக்கம் வராமல் இருப்பது, மனச்சோர்வு, குற்ற உணர்வு போன்றவை உண்டாகும். இது போன்ற பல்வேறு உணர்ச்சி அறிகுறிகளை கருச்சிதைவு ஏற்படும் போது அனுபவிப்பர்.
இந்த பதிவும் உதவலாம்: Premature Birth Symptoms: குறைபிரசவம் ஏற்படுவதற்கான காரணங்களும், அறிகுறிகளும்
கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள்
சில அசாதாரணமான நிலைகள் குழந்தை பிறப்பதை கடினமாக்கி, கருச்சிதைவை ஏற்படுத்துகிறது. இப்போது கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்களைக் காணலாம்.
சமநிலையற்ற ஹார்மோன்
தாயின் கருச்சிதைவு, ஹார்மோன் கோளாறுகளால் ஏற்படும். இது குழந்தை கருப்பையில் வளர்வதைக் கடினமாக்குவதுடன், குழந்தை உயிர் வாழ்வதைக் கடினமாக்குகிறது. இது கருச்சிதைவை ஏற்படுத்துவதாக அமைகிறது.
நோய்த்தொற்று
கர்ப்ப காலத்தில் வைரஸ் அல்லது பாக்டீரியா போன்ற தொற்றுகள் ஏற்படுவதன் மூலம் கருச்சிதைவு ஏற்படலாம். அதாவது, தாய்க்கு ஏற்படும் தொற்று கருவுக்கு பரவி, நோய்வாய்ப்பட்டு உயிர்வாழ முடியாத நிலை ஏற்படும்.
அசாதாரண குரோமோசோமால்
கருவில் குரோமோசோமால்களின் அசாதாரண நிலையால் கருச்சிதைவு ஏற்படும். இதனால், குழந்தை அசாதாரணமாக வளரும். இதுவே கருச்சிதைவுக்கு வழிவகுக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Dengue During Pregnancy: கர்ப்ப காலத்தில் டெங்கு நோய்க்கான அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்
Image Source: Freepik