கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல், கர்ப்ப காலத்தில் தனிப்பட்ட ஆபத்துகள் மற்றும் சவால்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இந்த நேரங்களில் கர்ப்பிணி பெண்கள் டெங்கு காய்ச்சல்களின் அறிகுறிகளைத் தெரிந்து கொள்வது, அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம் ஆகும். இது தாய் மற்றும் கருவில் இருக்கும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பை அளிக்கும்.
கர்ப்பிணி பெண்களுக்கான டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்
சாதாரண மக்களுக்கு ஏற்படும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளே, கர்ப்பிணி பெண்களுக்கும் இருக்கும். இருப்பினும், அதிக அளவிலான காய்ச்சல், தசை வலி, சொறி, கடுமையான தலைவலி, மற்றும் லேசான இரத்தப் போக்கு போன்றவை ஏற்படும். எனவே, கர்ப்பிணி பெண்கள் இது போன்ற அறிகுறிகளில் ஏதாவது ஒன்றை அனுபவித்தால், உடனே மருத்துவரை நாட வேண்டும். ஆரம்ப காலத்திலேயே இந்த டெங்கு காய்ச்சலை அறிவதன் மூலம், முறையான மருத்துவ பராமரிப்பை மேற்கொண்டு கர்ப்ப காலத்தில் டெங்குவால் ஏற்படும் விளைவுகளைக் குறைக்கலாம்.
முக்கிய கட்டுரைகள்

இந்த பதிவும் உதவலாம்: First Month Pregnancy Symptoms: கர்ப்பத்தின் முதல் மாத அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
கர்ப்பிணி பெண்கள் டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும் முறைகள்
டெங்கு காய்ச்சல் இருந்து தப்பிக்க, கர்ப்பிணி பெண்கள் சில பொதுவான தடுப்பு முறைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இப்போது, கர்ப்பிணி பெண்கள் ஆபத்தைக் குறைக்க எடுக்க வேண்டிய சில முக்கிய படிகளைக் காண்போம்.
கொசுக்கடி தடுப்பு
டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கு மூலக் காரணமாக விளங்கும் கொசுக்கடியைத் தவிர்ப்பதற்கான முறைகளை மேற்கொள்ள வேண்டும். கொசுக்கள் அதிகம் செயல்படும் நேரங்களில் குறிப்பாக, அதிகாலை, பிற்பகல் நேரங்களில் கொசுக்களை அண்ட விடாமல் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதற்கு நீண்ட கையுறை கொண்ட ஆடைகளை அணிவது மற்றும் கொசு விரட்டிகளைப் பயன்படுத்துதல் போன்றவை கொசுக்கடியைக் குறைப்பதற்கான சிறந்த வழிகளாகும்.
வலையமைப்பது
கர்ப்பிணி பெண்கள் மிகப்பெரிய பாதுகாப்புடன் ஜன்னலில் திரைகளை வைப்பது மற்றும் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட படுக்கை வலைகளின் மீது உறங்குவது நோய்த் தொற்று அபாயத்தைக் குறைக்கும்.
நீர்த்தேங்க விடாமல் பாதுகாத்தல்
வீட்டின் உள்ளேயும், சுற்றுப்புறத்திலும் டெங்குவைப் பரப்பும் கொசுக்களில் இருந்து விடுபட நீர்த்தேங்க விடாமல் பாதுகாக்க வேண்டும். ஏனெனில் டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் நீர்த்தேக்கங்களிலேயே இனப்பெருக்கம் செய்கின்றன. கர்ப்பிணி பெண்கள் பூந்தொட்டிகள், திறந்த கொள்கலன்கள் மற்றும் தேங்கி நிற்கும் நீர் போன்ற இடங்கள் இல்லாமல் இருக்கும் சூழலை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
முறையான மருத்துவ பரிசோதனை
கர்ப்பம் தரித்த பெண்கள் வழக்கமான சோதனைகளை செய்வதுடன், டெங்கு நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறிந்த பிறகு முறையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Avoid Pregnancy Fruits: கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடவே கூடாத பழங்கள் என்னென்ன தெரியுமா?
Image Source: Freepik