$
திருமணமான பெண்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நாள், கர்ப்பதம் தரித்தலை உறுதி செய்யும் நாள் ஆகும். தான் கர்ப்பமாக இருப்பதை முதலிலேயே அறிந்து கொள்வதை ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்க்கும் ஒன்றாகும். குறிப்பாக, வாந்தி எடுப்பது, மாதவிடாய் தள்ளிப் போவது போன்றவை கருத்தரிப்பை உறுதி செய்யும் என பெண்கள் பலரும் நினைத்திருப்பர். ஆனால், கருத்தரித்த பெண்ணின் உடலில் ஆரம்பத்திலேயே சில அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும். இந்த அறிகுறிகளைத் தெரிந்து கொள்வதன் மூலம் கர்ப்பம் தரித்தலை உறுதி செய்யலாம். மேலும் மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பதன் மூலம், கர்ப்பமானதை உறுதி செய்து கொள்ளலாம். இதில் பெண் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்வதற்கான சில அறிகுறிகளைக் காணலாம்.
பெண் கர்ப்பமாவதை உறுதி செய்வதற்கான அறிகுறிகள்
பெண்களின் ஆரம்ப கால கர்ப்ப அறிகுறிகளாக உடலில் ஏற்படக்கூடிய சில மாற்றங்களை அனுபவிக்கலாம். இதில் பெண்ணின் முதல் மாத கர்ப்ப அறிகுறிகள் சிலவற்றைக் காண்போம்.
மனநிலை மாற்றங்கள்
கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் பெண்ணின் ஹார்மோனில் வியத்தகு முறையில் மாற்றம் ஏற்படும். அதிலும் குறிப்பாக, வழக்கத்தை விட அதிகமாக சில நேரங்களில் உணர்ச்சிவசப்படத்தூண்டும். கவலை, அதிக மன உளைச்சல் போன்றவற்றில் இருந்து விடுபட்டு உற்சாகத்துடனும், பரவசமூட்டும் நிலையிலும் காணப்படுவீர்கள்.
மாதவிடாய் காலம் தவறுதல்
வழக்கமான மாதவிடாய் சுழற்சி முறையானது சரியாக இருப்பின், இது கர்ப்பத்தின் முக்கிய அறிகுறியாக கருதப்படுகிறது. அதாவது மாதவிடாய்காலம் தாமதமாவதை கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறியாகக் கருதலாம். இருப்பினும், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Avoid Pregnancy Fruits: கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடவே கூடாத பழங்கள் என்னென்ன தெரியுமா?
அடிக்கடி சிறுநீர் கழிப்பது
பெண் கர்ப்பமாக இருக்கும் போது, உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். அதாவது உடலில் சிறுநீரகங்கள் கூடுதல் திரவத்தைச் செயலாக்க கூடுதல் நேரத்தில் வேலை செய்ய வேண்டும். சில ஆரம்ப கால கர்ப்ப அறிகுறிகள், காலப்போக்கில் குறைவதாக இருந்தாலும், இந்த அறிகுறி அவற்றில் ஒன்றாக இருக்காது. இந்த நேரத்தில் திரவ உட்கொள்ளுதலைக் குறைக்கக் கூடாது. மேலும், உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது அவசியம்.
குமட்டல்
வாந்தி அல்லது வாந்தி இல்லாத குமட்டல், கர்ப்பத்தின் முதல் மாத அறிகுறியாக இருக்கலாம். ஒரு சில தாய்மார்கள் இந்த அறிகுறிகளை விரைவாகவே உணர்வார்கள். இந்த நேரத்தில் வயிற்றில் எரிச்சல் உண்டாவது போல் இருந்தால், வயிற்றை ஆறுவதற்கு இஞ்சி டீயை எடுத்துக் கொள்ளவும்.

இந்த பதிவும் உதவலாம்: Thyroid in Pregnancy: கர்ப்ப காலத்தின் தைராய்டு அளவுகளும், தீர்வுகளும்!
வீக்கம் ஏற்படுதல்
கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களின் அதிகரிப்பு காரணமாக வீக்கம் உண்டாகலாம். இந்த வீக்கத்திலிருந்து விடுபட அதிகம் நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், வழக்கமான உடற்பயிற்சி செய்வதன் மூலமும், இந்த வகையான வீக்கத்திலிருந்து விடுபடலாம்.
பிடிப்புகள்
கர்ப்பத்தின் ஆரம்ப நாள்கள் அல்லது வாரங்களின் அறிகுறியாக, சில தாய்மார்களுக்கு கருப்பைப் பிடிப்பு உண்டாகிறது. இது சில நேரங்களில் மாதவிடாய் பிடிப்பு ஏற்படுவதை போல உணரலாம். இந்த நேரத்தில் மாதவிடாய் வரப்போகிறது என்று தோன்றும். இருப்பினும், இந்த பிடிப்புகள் அதிகமான வலி அல்லது தொந்தரவு தந்தால் மருத்துவ ஆலோசனையுடன் வலி நிவாரணி மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Pregnancy Foods: கர்ப்ப காலத்தில் மீன் சாப்பிடலாமா?