Pregnancy Tips: கர்ப்ப காலத்தில் பெண்கள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக மாறிவரும் காலநிலையில் நோய் தாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு கர்ப்பிணிப் பெண் நோய்வாய்ப்பட்டால், அவளது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையக்கூடும், இது கருப்பையில் உள்ள குழந்தைக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
கர்ப்ப காலத்திலும் சரி, குழந்தை பருவத்திலும் சரி எப்போதும் ஒன்றே ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கர்ப்பத்திலும், குழந்தை பருவத்திலும் எப்போதும் சமரசம் என்பதே வேண்டாம்.
ஏதேனும் அசௌகரியத்தை சந்திக்க நேரும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. சரி, கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதத்தில் இருமல், சளிக்கு மருந்து சாப்பிடலாமா என்பது குறித்து பார்க்கலாம்.
கர்ப்பிணிகள் மருந்துகள் சாப்பிடலாமா?
ஒவ்வொரு பருவத்திலும் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது முக்கியம். இதுவும் முக்கியமானது, ஏனெனில் பெரும்பாலும் கர்ப்பிணிப் பெண்கள் நோய்வாய்ப்படும்போது மருந்துகளை எடுத்துக்கொள்ள முடியாது. மருந்துகள் குழந்தையின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நீண்ட நாட்களாக எந்த மருந்தை உட்கொண்டாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் மோசமான விளைவை ஏற்படுத்தும். அவரது மன மற்றும் உடல் ஆரோக்கியம் மோசமடையலாம். இத்தகைய சூழ்நிலையில், கர்ப்பிணிப் பெண்களின் முதல் மூன்று மாதங்களில் சளி ஏற்பட்டால் மருந்து எடுத்துக் கொள்ளலாமா, வேண்டாமா என்பது குறித்து பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் இருமல் மருந்து சாப்பிடலாமா?
புது தில்லியில் உள்ள மதர்ஸ் லேப் ஐவிஎஃப் மையத்தின் மகளிர் மருத்துவ இயக்குநர் மற்றும் ஐவிஎஃப் நிபுணரான டாக்டர் ஷோபா குப்தா இதுகுறித்து கூறிய தகவலை பார்க்கலாம்.
சளி மற்றும் இருமல் இயல்பானதாக இருந்தால், மருந்து சாப்பிட வேண்டிய அவசியமில்லை. வலுவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் தானாகவே இந்த நோய்த்தொற்றில் இருந்து மீண்டு வருவார்கள்.ஆனால், கர்ப்பிணிப் பெண்களைப் பற்றி பேசினால், இந்த காலகட்டத்தில் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மருத்துவர் ஆலோசனை அவசியம்
கர்ப்பத்தின் எந்த நிலையிலும் மருந்துகளை உட்கொள்வது சரியல்ல. ஆனால் ஒரு பெண் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கடுமையான சளி பிரச்சனையை எதிர்கொண்டால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்து எடுத்துக் கொள்ளலாம்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகக் குறைந்த அளவு மருந்துகள் மட்டுமே வழங்கப்படுகின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
கர்ப்ப காலத்தில் சளிக்கு என்ன செய்ய வேண்டும்?
கர்ப்பிணிப் பெண்கள் சளி மற்றும் இருமல் ஏற்பட்டால் வீட்டு வைத்தியத்தின் உதவியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சளி மற்றும் இருமலில் இருந்து விடுபட, கர்ப்பிணிப் பெண்கள் சூடாக இருக்க வேண்டும் மற்றும் முடிந்தவரை குறைவாக வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும்.
சளி , இருமல் போன்ற பிரச்சனைகளில் கர்ப்பிணிகள் ஆரோக்கியமான பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் . அசைவமாக இருந்தால் முட்டை சாப்பிடலாம்.
கர்ப்பிணிப் பெண் சளியால் அவதிப்பட்டால், அவள் வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.
அதேபோல் வீட்டு வைத்தியம் எடுத்துக் கொண்டாலும் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எதையும் அளவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். மிகையாக எந்தவொரு சிக்கலையும் உணரும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
Pic Courtesy: FreePik