$
Pregnancy Food Tips: கர்ப்ப காலம் என்பது எந்த ஒரு பெண் தன் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலம். கர்ப்ப காலத்தில் நீங்கள் எதைச் செய்தாலும், சாப்பிட்டாலும் அது நேரடியாக குழந்தையிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் பெண்கள் விழிப்புணர்வு இல்லாமல் குறிப்பிட்ட உணவுப் பொருட்களை உட்கொள்வதால், அவர்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பை உண்டாக்கிறது. அதனால்தான் கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் உணவுப் பழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கருச்சிதைவு அபாயத்தை குறைக்க அல்லது தவிர்க்க கர்ப்ப காலத்தில் எந்தெந்த உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து பெண்களின் ஆரோக்கியம் மற்றும் கருவுறுதல் நிபுணர் மெஹக் கன்னா தனது இன்ஸ்டா பதிவில் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.
கருச்சிதைவு அபாயத்தைத் தவிர்க்க என்ன சாப்பிடக்கூடாது?

வேம்பு
கருச்சிதைவை உண்டாக்கும் குணம் வேம்புக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. கர்ப்ப காலத்தில் வேப்பம் பொருளை உட்கொள்வது கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தும், இது கருச்சிதைவுக்கு வழிவகுக்கும்.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டையை அதிக அளவில் உட்கொள்வது கருப்பைக்கு தீங்கு விளைவிக்கும், இது கருச்சிதைவு அல்லது முன்கூட்டிய பிரசவத்திற்கு வழிவகுக்கும்.
இஞ்சி
இஞ்சியானது சூடான தன்மை கொண்டது, எனவே இதை அதிகமாக உட்கொள்வது கருச்சிதைவை ஏற்படுத்தும்.
பப்பாளி
பச்சை பப்பாளியில் இருக்கும் சில நொதிகள் கருப்பைச் சுருக்கத்தை ஏற்படுத்தும், இது கருச்சிதைவு அல்லது முன்கூட்டிய பிரசவத்தின் அபாயத்தை அதிகரிக்கும்.
அன்னாசி
அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் உள்ளது, இது ஒரு வகை நொதியாகும், இது கருப்பை வாயை மென்மையாக்கும் மற்றும் கருப்பைச் சுருக்கங்களை ஏற்படுத்தும், கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும்.
அதிக அளவு காபி
காபியில் அதிக அளவு காஃபின் உள்ளது, இது கருச்சிதைவு ஆபத்தை அதிகரிக்கும், எனவே கர்ப்ப காலத்தில் காபி உட்கொள்வதை குறைக்க அல்லது தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
ஒன்றே ஒன்றை மட்டும் கர்ப்ப காலத்திலும், குழந்தைகள் விஷயத்திலும் நியாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது கர்ப்ப காலத்திலும், குழந்தைகள் விஷயத்திலும் சமரசம் என்பதே வேண்டும். உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் அல்லது சந்தேகம் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: FreePik