Raspberry During Pregnancy: கர்ப்ப காலத்தில் இந்த பிரச்சனை எல்லாம் வராமல் தடுக்க ராஸ்பெர்ரி பழத்தை சாப்பிடுங்க

  • SHARE
  • FOLLOW
Raspberry During Pregnancy: கர்ப்ப காலத்தில் இந்த பிரச்சனை எல்லாம் வராமல் தடுக்க ராஸ்பெர்ரி பழத்தை சாப்பிடுங்க


Raspberry Benefits During Pregnancy: கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் பலரும் பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் பெண்கள் உடல் மற்றும் மன ரீதியாக நிறைய மாற்றங்களுக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் பெண்கள் தங்களது ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இது தாய் மற்றும் சேய் இருவருக்கும் மிகவும் நன்மை பயக்கும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகளின் மூலம் தாய் மற்றும் குழந்தைகள் இருவரும் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறலாம். இந்த சூழ்நிலையில் சமச்சீரான மற்றும் சத்தான உணவை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ராஸ்பெர்ரியைச் சேர்த்துக் கொள்ளலாம். ராஸ்பெர்ரியில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் கூறுகள் நிறைந்துள்ளன. மேலும் கர்ப்ப காலத்தில் ராஸ்பெர்ரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உணவியல் நிபுணர் ஷிவாலி குப்தா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Fennel Water During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் சீரகத் தண்ணீர் குடிக்கலாமா? மருத்துவர் தரும் விளக்கம்

கர்ப்பிணி பெண்கள் ராஸ்பெர்ரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

ராஸ்பெர்ரியில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கர்ப்பத்திற்குத் தேவையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் இதில் உள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. ராஸ்பெர்ரி சாப்பிடுவது திசுக்களை சீக்கிரம் சரி செய்ய உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஃபோலேட், நரம்புக்குழாய் நோயிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது.

ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த

ராஸ்பெர்ரியில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் உடலில் தீங்கு விளைவிக்கக் கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களின் விளைவுகளைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது ஆக்ஸிஜனேற்ர அழுத்த மற்றும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்கிறது. மேலும் இதில் பாலிபினால்கள் மற்றும் ஃபிளவனாய்டுகள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது பல்வேறு நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு

கர்ப்ப காலத்தில் இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பது அவசியமாகும். கர்ப்ப காலத்தில் குழந்தையைப் பாதுகாக்க குழந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இதயத்தைக் கடினமாக உழைக்கிறது. மேலும் ராஸ்பெர்ரியில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால், இவை இதய செயல்பாட்டை ஆதரிக்க உதவுகிறது. உணவில் ராஸ்பெர்ரிகளைச் சேர்ப்பது இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Knee Pain During Pregnancy: கர்ப்ப காலத்தில் முழங்கால் வலியா? இந்த குறிப்புகளை ஃபாலோப் பண்ணுங்க

கர்ப்ப கால நீரிழிவு

கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று நீரிழிவு நோயாகும். இது பெண்கள் மற்றும் குழந்தை இருவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம். ராஸ்பெர்ரி குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ், அதிக நார்ச்சத்து போன்றவற்றால் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கலாம். இதன் நார்ச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்.

நார்ச்சத்துக்கள் நிறைந்த

கர்ப்ப காலத்தில் பெண்கள் பலரும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படும். ராஸ்பெர்ரியில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது கர்ப்ப காலத்தில் குடல் இயக்கத்தை மேம்படுத்துவதுடன், மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் தருகிறது.

கர்ப்பிணி பெண்கள் ராஸ்பெர்ரியை சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு உதவும் ராஸ்பெர்ரியின் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கருவின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ராஸ்பெர்ரி உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: High BP During Pregnancy: கர்ப்ப கால இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஆயுர்வேத வைத்தியங்கள் இதோ

Image Source: Freepik

Read Next

Karadaiyan Nombu 2024: காரடையான் நோன்பிருக்கும் கர்ப்பிணிகள் கவனத்திற்கு… இதையெல்லாம் மனதில் கொள்ளுங்கள்!

Disclaimer