
$
Jaggery Benefits For Pregnancy Women: கர்ப்ப காலத்தில், பெண்கள் பல்வேறு பொருள்களை சாப்பிட விரும்புவர். அது போலவே கர்ப்பிணி பெண்களுக்கு இனிப்பு எடுத்துக் கொள்ளும் ஆசையும் அதிகமாகவே இருக்கும். ஆனால், கர்ப்ப காலத்தில் இனிப்புகளை அதிகம் சாப்பிடுவது நல்லதல்ல. எனினும் சில பெண்கள் இந்த நாள்களில் சாக்லேட் அல்லது ஐஸ்கிரீம் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவார்கள்.
அதே சமயம், கர்ப்பிணி பெண்களுக்கு இது போன்ற பொருள்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது மிகச்சிறிய அளவில் சாப்பிட அறிவுறுத்துகின்றனர். ஒருவருக்கு இனிப்புகள் மீது அதிக ஆசை இருப்பின், வெல்லத்தை மிதமாக எடுத்துக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் வெல்லம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்தும் விருந்தாவன் மற்றும் புதுதில்லியில் அமைந்துள்ள அன்னையர் மடி ஐவிஎஃப் மையத்தின் மகளிர் மருத்துவ இயக்குநர் மற்றும் ஐவிஎஃப் நிபுணர் டாக்டர் ஷோபா குப்தா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Sapota During Pregnancy: கர்ப்ப காலத்தில் சப்போட்டா சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா?
கர்ப்பிணி பெண்கள் வெல்லம் சாப்பிடுவதன் நன்மைகள்
கர்ப்ப காலத்தில் பெண்கள் வெல்லம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் கர்ப்பிணி பெண்கள் வெல்லம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்துக் காணலாம்.
இரத்த அழுத்தம் குறைய
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த அழுத்த பிரச்சனைகள் உண்டாகலாம். இது ஒரு ஆபத்தான சுகாதார பிரச்சனையாகும். இவற்றைச் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், பிரசவத்தின் போது பல வகையான சிக்கல்கள் ஏற்படலாம். எனவே, கர்ப்ப காலத்தில் ஏற்படும் சீரற்ற இரத்த அழுத்தத்தைக் குறைக்க, சீரான இரத்த அழுத்தத்தைப் பராமரிக்க வேண்டும். இதற்கு உதவியாக கர்ப்பிணி பெண்கள் வெல்லம் சாப்பிடலாம். ஏனெனில், வெல்லம் ஆனது உடலில் உள்ள சோடியத்தின் உள்ளடக்கத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது.

எலும்புகள் வலுவடைய
கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவில் கால்சியத்தின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். இது வயிற்றில் உள்ள குழந்தைகளின் கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியமானதாகும். இதற்கு வெல்லம் சாப்பிடுவது சிறந்த வழியாகும். கால்சியம் நிறைந்த சிறந்த ஆதாரமாக வெல்லம் உள்ளது. எவ்வாறாயினும், தாய் மூலமாக மட்டுமே குழந்தைக்கு கால்சியம் வழங்க முடியும். இந்த சூழ்நிலையில் கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்துக்களை வழங்க வெல்லத்தை சாப்பிடலாம். இது குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கும் அவசியமானதாகும்.
மலச்சிக்கல்லை நீக்க
கர்ப்பிணி பெண்கள் பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் வயிற்றில் குழந்தையின் எடை அதிகரிக்கும் போது, பெண்களின் வயிற்றின் கீழ் பகுதியில் அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கலாம். இதன் காரணமாக, பெண்களுக்கு வீக்கம், வாய்வு மற்றும் மலச்சிக்கல் வரையிலான பிரச்சனைகளைத் தொடர்ந்து சந்திப்பர். இந்த காலகட்டத்தில் பெண்கள் வெல்லம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து பெருமளவு நிவாரணம் பெறலாம். இது தவிர, கர்ப்பிணி பெண்கள் வெல்லம் சாப்பிடுவது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, செரிமான திறனை மேம்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Back Pain in Pregnancy: கர்ப்பத்தின் போது தீரா முதுகு வலியை தீர்க்க இதை செய்யுங்க!
மூட்டு வலி நிவாரணத்திற்கு
கர்ப்ப காலத்தில் பெண்கள் பல வகையான உடல் பிரச்சனைகளைச் சந்திக்கலாம். இதில் ஒன்றே உடல் வலி. குறிப்பாக மூட்டுவலி பிரச்சனை இந்த நாள்களில் மிகவும் பொதுவானதாகும். கர்ப்ப காலத்தில் பெண்கள் முழங்கால் முதல் இடுப்பு பகுதி வரையில் வலியை அனுபவிக்கின்றனர். சில சமயங்களில் முதுகில் வலி அதிகமாக இருக்கும். இந்த பிரச்சனைகளுக்கும் நிவாரணம் தரும் விதமாகவே வெல்லம் காணப்படுகிறது. வெல்லத்தை எடுத்துக் கொள்வது உடல் வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
கர்ப்பிணி பெண்கள் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது மிகவும் அவசியம் ஆகும். எனவே மாறிவரும் காலநிலையில் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளால் பெண் பாதிக்கப்படலாம். பலவீனமான நோயெதிர்ப்புச் சக்தி கொண்ட கர்ப்பிணி பெண்கள் சிறிய நோய்கள் ஏற்படலாம். இத்தகைய நிலைமைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம். இதற்கு வெல்லத்தை எடுத்துக் கொள்ளலாம். இவை ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளின் நல்ல ஆதாரமாக கருதப்படுகிறது. இவற்றை உட்கொள்வதால், குழந்தைக்கு பாதுகாப்பு கிடைப்பதோடு, தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
பொதுவான கர்ப்பிணி பெண்கள் வெல்லத்தை எடுத்துக் கொள்ளலாம். எனினும், இதை சிறிய அளவில் உட்கொள்வது நல்லது. எனினும் ஒவ்வாமை போன்ற வேறு ஏதேனும் பிரச்சனை இருப்பின், அவர்கள் வெல்லத்தை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Fennel Water During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் சீரகத் தண்ணீர் குடிக்கலாமா? மருத்துவர் தரும் விளக்கம்
Image Source: Freepik
Read Next
Spicy Food in Pregnancy: கர்ப்ப காலத்தில் காரமாக சாப்பிடுவது குழந்தையின் பார்வையை பாதிக்குமா?
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version