Which Health Drink Is Good During Pregnancy: எந்த காலத்திலும் கர்ப்பகால பராமரிப்பு என்பது கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். இதில் குளிர்காலத்தில் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஏனெனில், இந்த காலகட்டத்தில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. இதனால் சிறு கவனக் குறைவும் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்.
குறிப்பாக, குளிர்காலத்தில் சளி, தொற்றுநோய் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் கர்ப்பிணிகளின் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அதன் படி நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் வகையில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உணவுகள் மற்றும் பானங்களைச் சேர்த்து கொள்ளலாம். இதில், டில்லியின் எக்சென்ட்ரிக் டயட்ஸ் கிளினிக்கின் டயட்டீஷியன், ஷிவாலி குப்தா அவர்கள் கர்ப்பிணி பெண்கள் குளிர்காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய பானங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Back Pain in Pregnancy: கர்ப்பத்தின் போது தீரா முதுகு வலியை தீர்க்க இதை செய்யுங்க!
கர்ப்பிணி பெண்களுக்கான ஆரோக்கியமான பானங்கள்
குளிர்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் இந்த பானங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், பல்வேறு நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மஞ்சள் பால்
கர்ப்ப காலத்தில் பெண்கள் மஞ்சள் பால் அருந்தலாமா என்ற கேள்வி பலரின் மனதிலும் எழும். உண்மையில் கர்ப்பிணி பெண்கள் மஞ்சள் பால் அருந்தலாம். ஆனால், குறைந்த அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் உணவில் மற்ற பொருள்களுடன் குறைவான அளவில் மஞ்சளைச் சேர்க்க வேண்டும். அதிகளவு மஞ்சளை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும் என்பதால் மஞ்சள் பாலை மிதமான அளவில் எடுத்துக் கொள்ளலாம்.
குளிர்காலத்தில் மஞ்சள் பால் குடிப்பதால் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகர்ப்பதுடன், வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்கும். இதற்கு மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளே காரணமாகும். குளிர்காலத்தில் கர்ப்பிணிகள் மஞ்சள் பால் அருந்துவது உடலை உட்புறமாக சூடாக மற்றும் இதமாக வைக்க உதவுகிறது. இவை செரிமானத்தை மேம்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Healthy Pregnancy Foods: கர்ப்பிணி பெண்கள் குளிர்காலத்தில் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் இதுதான்.!
இஞ்சி கலந்த பால்
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அடிக்கடி வயிறு சம்பந்தமான தொந்தரவுகள் வர ஆரம்பிக்கும். இந்த சூழ்நிலையில், கர்ப்பிணிகள் குளிர்காலத்தில் இஞ்சி சேர்த்த வெதுவெதுப்பான பாலைக் குடித்து வர பல்வேறு நன்மைகள் கிடைக்கும். பாலில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், எலும்புகளை வலுப்படுத்துகிறது.
மேலும், இஞ்சி ஆனது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. குளிர்காலத்தின் போது ஏற்படும் சளி, இருமல் மற்றும் காய்ச்சலைத் தடுக்க இஞ்சி கலந்த பாலை அருந்தலாம். இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, செரிமான மேம்பாட்டிற்கும் உதவுகிறது.
சீரகத் தண்ணீர்
குளிர்காலத்தில் பெண்கள் அருந்த வேண்டிய பானங்களில் சீரக நீரும் அடங்கும். சீரக தண்ணீர் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இதை குடிப்பதன் மூலம் அஜீரணம், வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகளைக் குறைக்கலாம். மேலும், கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை சீரகத் தண்ணீர் வழங்குகிறது. மேலும், கர்ப்பகாலத்தில் பெண்களுக்குத் தேவையான இரும்புச்சத்துக்களை சீரகத் தண்ணீர் கொண்டுள்ளதால் பெண்கள் இதை அருந்தலாம். மேலும், இந்த நீரானது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
கர்ப்பிணி பெண்கள் குளிர்காலத்தில் இந்த ஆரோக்கியமான பானங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதுடன், பல்வேறு குளிர்காலத் தொற்றுக்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Oral Health During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் வாய்வழி ஆரோக்கியத்தை கடைபிடிப்பது எப்படி?
Image Source: Freepik