Expert

Healthy Pregnancy Foods: கர்ப்பிணி பெண்கள் குளிர்காலத்தில் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் இதுதான்.!

  • SHARE
  • FOLLOW
Healthy Pregnancy Foods: கர்ப்பிணி பெண்கள் குளிர்காலத்தில் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் இதுதான்.!


இந்த உணவுகள், உடலுக்கு நோயெதிர்ப்புச் சக்தியை வழங்குவதுடன், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் இது கர்ப்பிணி பெண்களுக்கும், கருவுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதாக அமைகிறது. இதில், குளிர்காலத்தில் பெண்கள் எந்தெந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஃபிட் கிளினிக்கின் டயட்டீஷியன் சுமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Intelligent Baby Birth: புத்திச்சாலித்தனமான குழந்தை பெற கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டியவை

குளிர்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

பருப்பு வகைகள்

கர்ப்ப கால ஆரோக்கியத்திற்கு பெண்கள் தங்களது உணவில் பீன்ஸ், கொண்டைக்கடலை, சோயாபீன், வேர்க்காலை போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை பெண்களுக்கு உடல் வலிமையைத் தருவதுடன், குழந்தையை சரியாக வளர வைக்கிறது. ஏனெனில் இதில் உள்ள புரதம், ஃபோலேட், இரும்பு, நார்ச்சத்துக்கள், கால்சியம் போன்றவை உடல் பலவீனத்தை நீக்குகிறது.

வெந்தய இலைகள்

இவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதுடன், பல்வேறு பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. இதில் உள்ள இரும்புச்சத்துகள் இரத்த சோகை பிரச்சனையை நீக்க உதவுகிறது. மேலும், வெந்தய இலைகளில் புரதம், வைட்டமின் சி, மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு உதவுகின்றன.

மீன்

மீன் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகளைத் தருகிறது. கர்ப்பிணி பெண்கள் குளிர்காலத்தில் மீன்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குழந்தையின் கண்கள் மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Oral Health During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் வாய்வழி ஆரோக்கியத்தை கடைபிடிப்பது எப்படி?

இனிப்பு உருளைக்கிழங்கு

குளிர்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் இனிப்பு உருளைக்கிழங்கை அதிகம் விரும்புகின்றனர். இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு ஆற்றலைத் தருவதுடன், இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இதில் அதிகளவு வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால் கரு வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனை உட்கொள்வது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுவதுடன், சருமம் மற்றும் கண்களுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.

பச்சை பட்டாணி

கர்ப்ப காலத்தில் பச்சை பட்டாணி உட்கொள்வது கர்ப்பிணி பெண்களுக்குத் தேவையான ஃபோலேட்டுகளைத் தருகின்றன. இது குழந்தையின் மூளை மற்றும் முதுகுத் தண்டின் பிறப்பு குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது. இதற்கு கர்ப்பிணி பெண்கள் பச்சைப் பட்டாணியை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம். கர்ப்ப காலத்தில் பெண்கள் பச்சை பட்டாணியை எடுத்துக் கொள்வது, பெண்களுக்கு தாய்ப்பாலை அதிகரிக்க உதவுகிறது.

குளிர்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் இந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் குளிர்ச்சியான சூழ்நிலையிலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். எனினும், கர்ப்பிணி பெண்களுக்கு ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சனை இருப்பின், உணவுகளை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவருடன் கலந்தாலோசிப்பது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Pregnancy Sleep: கர்ப்பிணி பெண்கள் நிம்மதியாக உறங்க தவிர்க்க வேண்டிய தவறுகள்

Image Source: Freepik

Read Next

கர்ப்பிணிகள் கவனத்திற்கு… ரத்த சோகை ஏற்படுவதற்கான காரணங்கள், தீர்வுகள் இதோ!

Disclaimer