Good Sleep During Pregnancy: கர்ப்ப காலத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெற விரும்புபவர்கள், சில வாழ்க்கை முறை தொடர்பான தவறுகளைத் தவிர்ப்பதன் மூலம் பெற முடியும். கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்ல தூக்கம் பெறுவது அவசியமாகும். இந்த நிம்மதியான உறக்கம் முழு நாளையும் மன அழுத்தமில்லாத நிலையை உருவாக்கும். ஆனால், கர்ப்ப காலத்தில் நிம்மதியாக தூங்குவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. உடல்நல மற்றும் பழக்க வழக்கங்களில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், தூக்க சுழற்சியைப் பாதிப்பதாக அமைகிறது. இது பிறக்காத குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. கர்ப்பிணி பெண்கள் நல்ல மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியாததற்கு அவர்கள் செய்யும் சில தவறுகள் காரணமாக இருக்கலாம். உதாரணமாக உடலில் நீரேற்றம் இல்லையெனில், தூக்கமின்மை அறிகுறிகள் தோன்றலாம். இது போன்ற வேறு சில தவறுகள் குறித்து லக்னோவிலுள்ள ஜல்கரிபாய் மருத்துவமனையின் மகளிர் மருத்துவ நிபுணரான டாக்டர் தீபா சர்மா அவர்கள் பகிர்ந்துள்ளார்.
கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள்
மோசமான தூக்கத்திற்கு கர்ப்பிணி பெண்கள் செய்யும் சில தவறுகள் குறித்துக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Miscarriage Symptoms: கருச்சிதைவு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் மற்றும் அறிகுறிகள்
அதிக மன அழுத்தம்
கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக சிந்தித்தல் அல்லது அதிக மன அழுத்தத்தை எடுத்துக் கொள்வது போன்றவற்றால் அவர்களின் தூக்க சுழற்சி பாதிக்கபப்டலாம். எதிர்பார்ப்புள்ள தாய் தனது குழந்தையின் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படுவர். இதனால் அவர்களின் தூக்கம் பாதிக்கப்படலாம். நல்ல தூக்கம் பெற விரும்பினால் கர்ப்பிணி பெண்கள் மன அழுத்தத்தைக் குறைக்க, யோகா, உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடலாம். இதன் மூலம் மனதை அமைதியாக வைத்திருக்கலாம்.
வசதியான மெத்தையைப் பயன்படுத்தாதது
கர்ப்ப காலத்தில் பெண்கள் வசதியான மெத்தையில் தூங்காத போது தூக்கம் பாதிக்கப்படலாம். ஒவ்வொரு 6 முதல் 7 வருடங்களுக்கும் மெத்தையை மாற்ற வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனுடன், மென்மையான மற்றும் நெகிழ்வான மெத்தையை வாங்க வேண்டாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இது இடுப்பு மற்றும் முகுது வலி ஏற்பட வழிவகுக்கும். எனவே ஒருவர் எப்போதும் உறுதியான மெத்தையை வாங்க வேண்டும்.
வயிற்றில் தூங்குதல்
கர்ப்ப காலத்தில் பெண்கள் தூங்கும் நிலையை கவனித்துக் கொள்வது அவசியம். கர்ப்ப காலத்தில் வயிற்றில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதே சமயம் அதிக நேரம் முதுகில் தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். முதுகில் தூங்குவது முதுகுத்தண்டு, இடுப்பு, குடல்களில் கருப்பை அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும் முதுகு அல்லது வயிற்றில் தூங்குவது உடலில் இரத்த ஓட்டத்தைப் பாதிக்கலாம். மேலும் தசைகளில் வலியை ஏற்படுத்தலாம். எனவே கர்ப்பிணி பெண்கள் ஒரு பக்கத்தில் தூங்குவது நல்லது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் இடப்பக்கம் தூங்குவது நன்மை தரும்.
இந்த பதிவும் உதவலாம்: Avoid Pregnancy Fruits: கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடவே கூடாத பழங்கள் என்னென்ன தெரியுமா?
தவறான மருந்து உட்கொள்ளும் முறை
மருந்துகளின் தவறான நுகர்வு, தூக்கத்தைப் பாதிக்கலாம். சில நேரங்களில் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு மருந்துகளை உட்கொள்வதால் தூக்கமின்மை ஏற்படலாம். உணவுக்கு சற்று முன் மருந்தை உட்கொண்டாலும், உடல்நிலை பாதிப்பாக இருக்கலாம் அல்லது ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே மாலை நேரம் வரை மருந்து எடுத்துக் கொள்ளலாம். இரவு உணவுக்குப் பின் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டுமெனில், சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் இடையில் குறைந்த 4 மணி முதல் 5 மணி நேரம் வரை இடைவெளி இருக்க வேண்டும்.
காரமான உணவு
கர்ப்ப காலத்தில் இரவில் காரமான உணவுகளைச் சாப்பிடுவது தூக்கத்தைப் பாதிக்கலாம். அதிக காரமான உணவுகள் வயிற்றில் அமிலத்தன்மை மற்றும் வாயுவை ஏற்படுத்துகிறது. ஆனால் கர்ப்ப காலத்தில் காரமான உணவுகளைச் சாப்பிடுவதன் ஆர்வம் அதிகரிக்கும். ஆனால் புளிப்பு மற்றும் காரமான விஷயங்கள் தூக்கத்தைப் பாதிக்கலாம். எனவே, சுத்தமான வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை மட்டும் அளிப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Pregnancy Test Kit: கர்ப்ப பரிசோதனை கருவியை பயன்படுத்துவது எப்படி?
Image Source: Freepik