Expert

Pregnancy Exercise Benefits: கர்ப்ப காலத்தில் பெண்கள் உடற்பயிற்சி செஞ்சா எவ்வளவு நல்லது தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Pregnancy Exercise Benefits: கர்ப்ப காலத்தில் பெண்கள் உடற்பயிற்சி செஞ்சா எவ்வளவு நல்லது தெரியுமா?


Importance Of Exercise During Pregnancy: பொதுவாக, கர்ப்பம் என்பது எந்தவொரு பெண்ணின் வாழ்க்கையிலும் நிகழக்கூடிய ஒரு சிறப்பான தருணம் ஆகும். இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்களின் ஆரோக்கியத்தில் மிகவும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். கர்ப்பிணி பெண்கள் கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியம் என்பது தாய் மற்றும் சேய் இருவரது நலத்தையும் குறிக்கிறது.

அவ்வாறே கர்ப்ப காலத்தில் பெண்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என்று அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் கர்ப்பிணிப் பெண்களுக்கு உடற்பயிற்சி செய்வது தீங்கு விளைவிக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இது உண்மை கிடையாது. ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பாத்ராவின் கூற்றுப்படி, “கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்” என்று கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Fetal Weight: கர்ப்ப காலத்தில் கருவின் எடையை அதிகரிப்பது எப்படி?

கர்ப்பிணி பெண்களுக்கு உடற்பயிற்சியின் முக்கியத்துவம்

இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பாத்ரா அவர்கள் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “கர்ப்பிணி உடற்பயிற்சி செய்ய பயப்படுவதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். எனினும், கர்ப்ப காலத்தில் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது, அவர்களின் ஆற்றலை அதிகரிக்க அல்லது வலிமையை வளர்ப்பதற்கு மட்டுமல்லாமல் உடலில் ஏற்படும் நிலையான மாற்றங்களின் போது உணர்ச்சிகளை நிர்வகிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

குறிப்பாக, மன அழுத்தத்தைக் குறைக்க இது ஒரு இயற்கை வழியாகக் கருதப்படுகிறது. இது இரவில் நன்றாக தூங்குவதற்கு உதவுகிறது. இதன் மூலம் வீக்கம், முதுகுவலி போன்ற கர்ப்பம் தொடர்பான அசௌகரியங்களைக் குறைக்கலாம். எனவே கர்ப்பிணி பெண்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன் மருத்துவரை அணுகலாம். மேலும் நிபுணரின் மேற்பார்வையின் கீழ் மட்டுமே உடற்பயிற்சி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் உடற்பயிற்சி செய்வது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

  • கர்ப்பிணி பெண்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் போதுமான ஆக்ஸிஜனைப் பெறுவதற்கு உதவுகிறது. மேலும் இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
  • கர்ப்ப கால உடற்பயிற்சி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் ஆற்றலை வழங்க உதவுகிறது.
  • சில வகையான உடற்பயிற்சிகள் செய்வது அவர்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
  • பெண்கள் பிரசவத்திற்கு முன்னும், பின்னும் உடற்பயிற்சி செய்வது அவர்களின் உடல் மற்றும் மன வலிமையை அதிகரிக்கிறது. மேலும் தசைகளை வலுப்படுத்துகிறது.
  • உடற்பயிற்சி செய்வதன் உடலின் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்கலாம். இந்த நெகிழ்வுத் தன்மையானது கர்ப்ப காலத்தில் எந்தவொரு பெண்ணுக்கும் மிகவும் முக்கியமானதாகும்.
  • கர்ப்ப காலத்தில் இயல்பாகவே உடல்எடை அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் உடற்பயிற்சி செய்வது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
  • கர்ப்பிணி பெண்கள் உடற்பயிற்சி செய்யும் போது வெளியிடப்படும் எண்டோர்பின்கள் மனநிலையை அதிகரிக்க உதவுகின்றன.

கர்ப்ப காலத்தில் பெண்கள் உடற்பயிற்சி செய்வது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். எனினும், கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில், உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். அதே சமயம், நடைபயிற்சி செய்வதை மட்டும் முயற்சிக்கலாம். மேலும் பெண்கள் உடற்பயிற்சியுடன் சீரான மற்றும் ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாள்வதிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Juice for Pregnancy: கர்ப்ப காலத்தில் தினமும் ஃப்ரூட் ஜூஸ் குடிப்பது நல்லதா? நிபுணர்கள் கூறுவது இங்கே!

Image Source: Freepik

Read Next

X-ray During Pregnancy: கர்ப்பகாலத்தில் எக்ஸ்ரே எடுக்கலாமா? இது நல்லதா?

Disclaimer