Fri Sep 11, 2026 | 10:19 PM IST

Doctor Verified

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்தால் நார்மல் டெலிவரி ஆகுமா? மருத்துவர் விளக்கம்!

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வதால் நார்மல் டெலிவரி வாய்ப்பு அதிகரிக்குமா? எவ்வளவு உண்மை, எவ்வளவு நம்பிக்கை என்பதை டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் விளக்குகிறார். கர்ப்பிணி பெண்களுக்கு உடற்பயிற்சியின் உண்மையான பயன்கள்!

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது நார்மல் டெலிவரிக்கான “மந்திர தீர்வு” என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் உண்மையில் அது எவ்வளவு உண்மை? இது குறித்து டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் (முதன்மை எலும்பு நிபுணர்) தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

ஆய்வுகள் என்ன சொல்லுகின்றன?

சர்வதேச மருத்துவ ஆய்வுகளின் படி, கர்ப்ப காலத்தில் மருத்துவர் கண்காணிப்பில் உடற்பயிற்சி செய்வது சிசேரியன் பிரசவம் (C-section) நடைபெறும் வாய்ப்பை 15 முதல் 30% வரை குறைக்கும் என கூறப்பட்டுள்ளது. அதாவது, உடற்பயிற்சி நன்மை தரும், ஆனால் அது 100% நார்மல் டெலிவரிக்கு உறுதி அல்ல.

உண்மையில் இதன் பொருள் என்ன?

100 பெண்களில் உடற்பயிற்சி செய்யாதவர்களில் சுமார் 30 பெண்களுக்கு சிசேரியன் தேவைப்படும். அதே பெண்கள் மருத்துவ ஆலோசனையுடன் உடற்பயிற்சி செய்தால், அதில் 25 பெண்களுக்கு மட்டுமே சிசேரியன் தேவைப்படும். அதாவது, உடற்பயிற்சி நார்மல் டெலிவரி வாய்ப்பை உயர்த்தும், ஆனால் அது ஒரு உறுதி அல்ல, உதவி மாத்திரம்.

இந்த பதிவும் உதவலாம்: கருப்பை சுத்தம் செய்தால் கர்ப்பம் தாமதம் குறையுமா.? உண்மையை மருத்துவர் விளக்கம்..

உடற்பயிற்சியின் உண்மையான பயன்கள்

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வதால் பிரசவம் மட்டுமல்ல, மொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

முக்கிய நன்மைகள்:

* கர்ப்பக்கால நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் அபாயம் குறையும்

* உடல் எடை சீராகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்

* நல்ல தூக்கம், மன அமைதி, மற்றும் உற்சாகம் கிடைக்கும்

* முதுகுவலி, கால்வலி, வீக்கம், மலச்சிக்கல் குறையும்

* இதய ஆரோக்கியம் மேம்படும்

* பிளாசெண்டா மற்றும் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்

View this post on Instagram

A post shared by Dr Santhosh Jacob MBBS,DNB,MCh,DABRM,PhD (@drsanthoshjacob)

இறுதியாக..

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது மனஅமைதி, உடல் ஆரோக்கியம், குழந்தையின் வளர்ச்சி ஆகியவற்றை உறுதிசெய்யும். ஆனால் எந்த உடற்பயிற்சி உங்களுக்கு பொருந்தும் என்பதை மருத்துவர் ஆலோசனையுடன் மட்டும் தொடங்க வேண்டும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான தகவல்களை மட்டுமே வழங்குகிறது. இதில் கூறப்பட்ட உடற்பயிற்சி அல்லது வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு முன் உங்கள் மகப்பேறு நிபுணர் அல்லது குடும்ப மருத்துவர் ஆலோசனை பெறவும்.

Read Next

கர்ப்ப காலத்தில் தலைவலியால் அவதியா? இந்த உணவுமுறைகளைப் பின்பற்றுங்க.. நிபுணர் சொன்னது

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 24, 2025 21:45 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content