“கர்ப்பம் தாமதமாகிறது, கருப்பை சுத்தம் செய்தீங்களா?” – இப்படி உறவினர்கள் பல பெண்களிடம் கேட்பது வழக்கமாகிவிட்டது. உண்மையில் இதற்கு மருத்துவ ரீதியாக எந்த அடிப்படையும் உள்ளதா? மகளிர் மருத்துவர் டாக்டர் பிரியா கல்யாணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
கருப்பை சுத்தம் செய்வது தேவையா?
டாக்டர் பிரியா கூறியதாவது: “கருப்பையை சுத்தம் செய்ய வேண்டும் என்ற கருத்து, அதில் ஏதோ நச்சு அல்லது அசுத்தம் உள்ளது என்ற தவறான நம்பிக்கையை தருகிறது. இது உண்மையல்ல. கருப்பை இயல்பாகவே சுத்தமானதுதான். தேவையில்லாமல் சிகிச்சை செய்யத் தேவையில்லை.”
நவீன மருத்துவத்தில் என்ன நடக்கிறது?
முன்னொரு காலத்தில், கர்ப்பநிருத்தலுக்கு Dilatation and Curettage (D&C) என்ற சிகிச்சை வழக்கம் இருந்தது. ஆனால் இன்று, அதிகம் பயன்படுத்தப்படுவது மருந்து மூலம் கர்ப்பநிருத்தல்.
கருப்பை முறையாக சுத்தமா என்பதை உறுதிப்படுத்த 2 வாரங்கள் கழித்து அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுக்கப்படுகிறது. அதனால், தேவையில்லாமல் D&C செய்வதை மருத்துவர்கள் தவிர்க்கிறார்கள்.
ஆனால் சில சூழல்களில் அவசியம்
கருப்பை சுத்தம் செய்வது, காரணமின்றி செய்யப்படக் கூடாது. ஆனால் சில சிறப்பு சூழல்களில் மட்டும் அது தேவையானதாக இருக்கலாம்.
* கருவிழந்த பிறகு, கருப்பையில் மிச்சமுள்ள கருவுப் பாகங்கள்
* தடிமனான எண்டோமெட்ரியம் (thickened endometrium) மற்றும் ஒழுங்கற்ற நீண்டகால இரத்தப்போக்கு
* Endometrial polyp போன்ற கட்டிகள்
இந்த சூழல்களில், மருத்துவர்கள் கருப்பையை சுத்தப்படுத்தும் சிகிச்சையை பரிந்துரைக்கலாம்.
View this post on Instagram
மருத்துவர் எச்சரிக்கை
“கருப்பை சுத்தம் செய்தால் கர்ப்பம் எளிதில் வரும் என்பது முழுக்க தவறான நம்பிக்கை. தேவையில்லாமல் இந்த சிகிச்சை செய்யப்படக் கூடாது. மருத்துவ அடிப்படை காரணங்கள் இருந்தால்தான் அது செய்யப்பட வேண்டும்” என டாக்டர் பிரியா கல்யாணி கூறியுள்ளார்.
இறுதியாக..
கர்ப்பம் தாமதமாகும் போது, பலர் தவறான ஆலோசனைகளுக்கு ஆளாகிறார்கள். ஆனால் கருப்பை சுத்தம் செய்வது ஒவ்வொருவருக்கும் அவசியமானது அல்ல. அது மருத்துவர் பரிந்துரைக்கும் சில குறிப்பிட்ட சூழல்களில் மட்டுமே செய்யப்பட வேண்டும். சரியான பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள் மூலமே கர்ப்பம் தாமதத்திற்கு காரணம் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
Disclaimer: இந்த கட்டுரை மருத்துவர் பகிர்ந்த பொது தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. தனிப்பட்ட ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு, கண்டிப்பாக உங்கள் மகளிர் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.
Read Next
பல பெண்களை பாதிக்கும் எண்டோமெட்ரியோசிஸ்.! இந்த நிலையின் அறிகுறிகள் இங்கே.. மருத்துவர் விளக்கம்..
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Oct 02, 2025 21:52 IST
Published By : Ishvarya Gurumurthy