
பெண்களின் உடல்நலத்தில் முக்கிய பங்கு வகிப்பது vaginal health ஆகும். ஆனால் பல பெண்கள், வஜைனல் ஹைஜீன் (Vaginal Hygiene) குறித்து அதிக கவனம் செலுத்துவதில்லை. இதன் விளைவாக பாக்டீரியா தொற்று, பூஞ்சை தொற்று, அரிப்பு, வீக்கம், வலி, மோசமான வாசனை போன்ற பிரச்னைகள் உருவாகின்றன. இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க, டெர்மடாலஜிஸ்ட் டாக்டர் ராதா சுப்ரமணியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில முக்கிய தினசரி பழக்கங்கள் பற்றி பகிர்ந்துள்ளார்.
பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க பெண்கள் செய்ய வேண்டிய பழக்கங்கள்
உள்ளாடை பயன்படுத்தும் பழக்கம்
பெண்கள் எப்போதும் 100% பருத்தி உள்ளாடை (cotton underwear) பயன்படுத்த வேண்டும். லேஸ், நைலான், சின்தெடிக், fancy materials போன்றவை தினசரி அணியக்கூடாது. ஏதாவது ஒரு முறை மட்டும் பயன்படுத்தலாம்.
மேலும், இரவு தூங்கும்போது underwear-ஐ கழற்றி வைப்பது நல்லது. நாள் முழுவதும் genital பகுதி மூடியிருப்பதால், வியர்வையும் ஈரப்பதமும் சேர்ந்து, பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்றை அதிகரிக்கும். காற்றோட்டம் கிடைக்கும்போது தொற்று அபாயம் குறையும்.
வாசனைக்காக திரவங்கள் பயன்படுத்த வேண்டாம்
வஜைனாவில் இயற்கையாகவே ஒரு வாசனை இருக்கும். அதை மாற்றுவதற்காக fragrance products பயன்படுத்துவது தவறு. அந்த பகுதி மலரின் வாசனை போல இருக்க வேண்டியதில்லை என்று மருத்துவர் கூறுகிறார். வாசனைப் பொருட்கள் பயன்படுத்துவதால் தோல் எரிச்சல், allergy மற்றும் தொற்று அதிகரிக்கலாம்.
ஒரு நாளில் இரண்டு முறை குளிக்கவும்
உடற்பயிற்சி, ஜிம், வேலை காரணமாக அதிகமாக வியர்வை வெளியேறும் பெண்கள், ஒரு நாளில் இரண்டு முறை குளிக்க வேண்டும். அது சாத்தியமில்லையெனில், இரண்டு முறை underwear-ஐ மாற்றுவது அவசியம். மேலும், தொடைகள் உராயும் பெண்களுக்கு dusting powder பயன்படுத்துவது நல்லது.
இறுக்கமான உள்ளாடைகளை தவிர்க்கவும்
இறுக்கமாக ஒட்டும் உள்ளாடைகள் (panties)தவிர்க்கவும். ஏனெனில் அந்த பகுதியில் காற்றோட்டம் தடைப்படும். இதனால் வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகரித்து, பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சி அதிகரிக்கும். எனவே, கற்றோட்டத்திற்கு உதவும் காட்டன் உள்ளாடைகளை அணிவது சிறப்பு.
மாதவிடாய் காலத்தில் Cotton Pads பயன்படுத்தவும்
Periods காலத்தில் plastic sanitary pads பயன்படுத்துவது, வியர்வை மற்றும் ஈரப்பதத்தை சிக்கவைத்து, தொற்று ஏற்பட வழிவகுக்கும். அதற்குப் பதிலாக 100% cotton pads பயன்படுத்தினால், அந்த பகுதி ஆரோக்கியமாக இருக்கும்.
View this post on Instagram
கூடுதல் ஆலோசனைகள்
* தினசரி குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* Vitamin A, E, Omega-3 நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும்.
* அதிக சர்க்கரை, ஜங்க் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை vaginal infection அபாயத்தை அதிகரிக்கின்றன.
* உடல் நலத்தில் ஏதேனும் மாற்றம், unusual discharge, மோசமான வாசனை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இறுதியாக..
பெண்களின் vaginal health, உடல்நலத்துடன் நேரடியாக இணைந்துள்ளது. சுத்தம், பருத்தி உள்ளாடை, periods hygiene, குளியல் பழக்கம் போன்ற எளிய வழக்கங்களை பின்பற்றினால், பிறப்புறுப்பில் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும்.
{Disclaimer: இந்த கட்டுரை பொதுவான சுகாதார தகவல்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பழக்கங்கள், மருத்துவர் பகிர்ந்த ஆலோசனைகள் அடிப்படையாகும். ஒவ்வொரு நபரின் உடல்நிலை, உடல் தன்மை மாறுபடும். எனவே, எந்தவொரு உடல்நல பிரச்சனை, தொற்று, அசாதாரண அறிகுறிகள் இருந்தாலும் தகுதியான மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். இந்த தகவல்கள் சுயமாக சிகிச்சை மேற்கொள்ள அல்ல, வழிகாட்டுதலுக்காக மட்டுமே.}
Read Next
மாதவிடாய் வருவதற்கு முன் பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட இது தான் காரணம்.. மருத்துவர் விளக்கம்..
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version