Shrimp During Pregnancy: கர்ப்ப காலத்தில் இறால் சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா.?

  • SHARE
  • FOLLOW
Shrimp During Pregnancy: கர்ப்ப காலத்தில் இறால் சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா.?


சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இறால் சாப்பிடுவது பாதுகாப்பானதா, இல்லையா என்ற குழப்பம் அதிகமாக இருக்கும். இறால் என்பது ஒரு வகையான கடல் உணவு. இது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கர்ப்ப காலத்தில் இறால் சாப்பிடுவது பாதுகாப்பானதா என்பது குறித்து இங்கே காண்போம்.

கர்ப்ப காலத்தில் இறால் சாப்பிடுவது பாதுகாப்பானதா?

இறாலில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல, கர்ப்பிணிப் பெண்களுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. ஒமேகா 3 கொழுப்புகளுடன், வைட்டமின் பி 2 மற்றும் பி 12 இதில் காணப்படுகின்றன. இது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். கர்ப்ப காலத்தில் கடல் உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இது தாய்க்கு மட்டுமல்ல, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் நன்மை பயக்கும்.

இதையும் படிங்க: கர்ப்பிணி பெண்கள் மழைக்காலத்தில் முட்டை சாப்பிடலாமா.? நன்மை தீமைகள் இங்கே..

கர்ப்ப காலத்தில் இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

  • கர்ப்ப காலத்தில் இறால் சாப்பிடுவது முன்கூட்டிய பிறப்பு அபாயத்தை குறைக்கிறது.
  • தாய் இறால் சாப்பிடுவது குழந்தையின் மூளை மற்றும் கண்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • தாய் இறால் அல்லது வேறு சில கடல் உணவுகளை சாப்பிட்டால், எதிர்காலத்தில் குழந்தைக்கு இதய பிரச்னைகள் ஏற்படும் ஆபத்து குறைகிறது.
  • இதை சாப்பிடுவதால் தாய், சேய் இருவருக்கும் ரத்தசோகை ஏற்படாது.
  • அதிக அளவு உட்கொள்வது சில நேரங்களில் தீங்கு விளைவிக்கும்.

கர்ப்ப காலத்தில் கடல் உணவை எப்படி சாப்பிடுவது?

  • கர்ப்ப காலத்தில் கடல் உணவுகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
  • கர்ப்ப காலத்தில் சால்மன் சாப்பிடலாம்.
  • கர்ப்ப காலத்தில் குறைந்த பாதரசம் கொண்ட மீன் அல்லது கடல் உணவுகளை உட்கொள்ளலாம்.
  • இந்த நேரத்தில் நண்டு, இரால் போன்ற கடல் உணவுகளை உண்ணலாம்.
  • கர்ப்ப காலத்தில் கடல் உணவை உண்ணும் முன் உங்கள் மருத்துவரை அணுகவும்.

Image Source: Freepik

Read Next

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான தூக்கத்திற்கு நீங்க செய்ய வேண்டியவை!

Disclaimer